Home  |  அறுசுவை

சரவண பவன் ஹோட்டல் சாம்பார் (Saravana Bhavan Hotel Sambar)

தேவையானவை :

 

துவரம்பருப்பு - 1/4 டம்ளர்

கத்திரிக்காய் - ஒன்று (நறுக்கியது)

முருங்கைக்காய் - ஒன்று (நறுக்கியது)

சாம்பார் வெங்காயம் - 10 (நறுக்கியது)

தக்காளி - ஒன்று (நறுக்கியது)

பச்சைமிளகாய் - 2 (நறுக்கியது)

உப்பு - தேவைக்கு

புளி - சிறிய லெமன் அளவு

 

அரைப்பதற்கு தேவையானவை :

 

பொட்டுக்கடலை - 2 ஸ்பூன்

தக்காளி - ஒன்று 

தேங்காய் - ஒரு ஸ்பூன்

சாம்பார்பொடி - 4 ஸ்பூன்

பெருங்காயம் - சிறிது

 

தாளிக்க தேவையானவை :

 

கடுகு - 1/4 ஸ்பூன்

சீரகம் - 1/4 ஸ்பூன்

உளுத்தம்பருப்பு - 1/4 ஸ்பூன்

வற்றல்மிளகாய் - ஒன்று

கறிவேப்பிலை, மல்லி இலை - தேவைக்கு

 

செய்முறை :

 

1.முதலில் ஒரு பாத்திரத்தில் பருப்பை வேக வைக்கவும்.வேகவைத்த பருப்புடன், நான்கு டம்ளர் நீர் விட்டு நறுக்கிய காய், பச்சை மிளகாய், தக்காளி, பாதி வெங்காயம் போட்டு உப்பு சேர்த்து வேக விடவும்.மிக்ஸியில் அரைக்க கூறியவற்றை நைசாக அரைத்து எடுத்து அதனுடன் புளியையும் கரைத்து ஒன்றாக, கொதிக்கும் சாம்பாரில் ஊற்றவும்.காய் வெந்தவுடன் உப்பு சரி பார்த்து இறக்கவும்.

 

2.கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம் போட்டு பொரிந்ததும் பெருங்காயம், கிள்ளிய வற்றல் மிளகாய், கறிவேப்பிலை, வெங்காயம் போட்டு வதக்கி சாம்பரை அதில் ஊற்றவும். மல்லி இலை போட்டு கொதித்ததும் இறக்கவும்

Saravana Bhavan Hotel Sambar

Ingredients for Saravana Bhavan Hotel Sambar:

 

Red Gram-1/4 Cup

Brinjal-1 (Chopped)

Drumstick-1 (Chopped)

Small Onion-10 (Chopped)

Tomato-1 (chopped)

Green Chilly-2 (chopped)

Salt-as Needed

Tamarind-Small Lemon Size

 

Ingredients for Grinding:

 

Roasted Gram-2 tsp

Tomato-1

Coconut-1 tsp

Sambar Powder-4 tsp

Asafoetida-Little

 

Ingredients for Seasoning:

 

Mustard-1/4 tsp

Cumin-1/4 tsp

Black Gram-1/4 tsp

Dry Chilly-1

Curry Leaves, Coriander Leaves-as Needed

 

Procedure to make Saravana Bhavan Hotel Sambar:

 

 1. First boil the dhal in a vessel. Then add 4 cup of water, chopped vegetables, green chilly, half onion and salt and allow to boil well. Grind the given ingredients and mix with tamarind juice and put in to sambar. When boiled well, check the taste of salt and then remove from flame.

2. Heat oil in a pan, add mustard, black gram, cumin and let to splutter and then add asafoetida, dry chilly, curry leaves, onion and saute well and then put in to sambar. Then add coriander leaves and then remove from flame.

 

 

 

  10 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!