Home  |  திரை உலகம்

சரபம் ( Sarabham )

சரபம் ( Sarabham )

Movie Name: Sarabham சரபம்
Hero: Naveen Chandra
Heroine: Salony Luthra
Year: 2014
Movie Director: Arun Mohan
Movie Producer: THIRU KUMARAN ENTERTAINMENT
Music By: Britto Michael

நரேன் ஒரு பெரிய வர்த்தகப் பிரமுகர். அவரிடம் ஒரு பெரிய கட்டுமான திட்டத்தை முன் வைக்கிறார் நவீன் சந்திரா. ஆனால் மகள் மீதான கோபத்தில் இருக்கும் நரேன், அந்த திட்டத்தை நிராகரித்துவிடுகிறார். இதனால் தனக்கு ஏற்பட்ட நட்டத்தை மனதில் வைத்து, கோபத்துடன் நரேன் வீட்டின் மீது கல்லெறியப் போகிறார் நவீன். அந்த நேரம் பார்த்து நரேனின் மகள் சலோனி வீட்டுச் சுவரிலிருந்து குதித்து ஓடுவதைப் பார்த்து, பின் தொடர்கிறார். அப்பாவின் கடுமையான குணம், பணம் தராதது போன்றவற்றால் வெறுத்துப் போய் வீட்டைவிட்டு வெளியேறியதாக சலோனி கூறுகிறார்.

தனக்கு தங்க இடம் தருமாறு நவீனை கேட்க, அவரும் ஒரு நாள் மட்டும் தங்கிக் கொள்ளச் சம்மதிக்கிறார். இருவருக்குமே பணம் தேவையாக இருப்பதால் ஒரு திட்டம் போடுகிறார்கள். தன்னைக் கடத்தியதாக நவீன் நாடகமாடினால் போதிய பணம் கிடைக்கும், அந்தப் பணத்தில் ஆளுக்கு பாதிப் பாதி என யோசனை சொல்கிறார் சலோனி. திட்டமிட்டபடி ரூ 30 கோடி கிடைக்கிறது. பணத்தை வாங்கிக் கொண்டு, சலோனியை நரேன் வீட்டில் விட்டுவிட்டு, வரும் நவீனுக்கு காலையில் அதிர்ச்சி. சலோனியை யாரோ கொன்றுவிட்டதாக செய்தி வெளியாகிறது. இதில் அதிர்ந்து போன நவீன், அதிலிருந்து மீள்வதற்குள் இறந்து போன சலோனியும், நரேனும் அவன் வீட்டுக்கே வந்து மேலும் அதிர்ச்சியை கொடுக்கின்றனர்.

சலோனி எப்படி இறந்தார்? நவீனுக்கு பணம் கிடைத்ததா? என்பது படத்தின் மறுபாதி. பார்க்க அரபுக் குதிரை மாதிரி இருக்கிறார் சலோனி. புகைப்பது, போதைப் பொருள்கள் உபயோகிப்பது போன்ற காட்சிகளில் ரொம்ப இயல்பாக, தயக்கமின்றி நடித்திருக்கிறார். ஆடுகளம் நரேன்.. மிக அருமையான நடிகர். மீண்டும் ஒருமுறை படத்தைத் தாங்கிப் பிடிக்கும் அளவு முக்கியமான பாத்திரம். உணர்ந்து நடித்துள்ளார். நாடகம் பார்ப்பது போன்ற உணர்வை அடிக்கடி தருகிறது பிரிட்டோ மைக்கேலின் இசை. கிருஷ்ணன் வசந்தின் ஒளிப்பதிவு நன்றாக உள்ளது. சொந்த மகளே மூன்றாம் மனிதனுடன் கூட்டணி போட்டு அப்பாவை ஏமாற்றி பணம் பறிக்கப் பார்ப்பது, பெற்ற அப்பாவையே கொல்வது, உழைக்காமல் - வலிக்காமல் கோடிகளைக் குவிக்க புதுப் புது யோசனைகள்.

  15 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விவேகம் படத்தை பார்த்த பிறகு அஜித்தின் ரியாக்‌ஷன் இதுதான்
விஜய் படைத்த பிரமாண்ட சாதனை, தமிழகத்தில் தளபதி படம் மட்டுமே நிகழ்த்திய சாதனை
BiggBossல் ஜுலி தான் ஜெயிப்பார்- பிரபல நடிகரின் டுவிட்
விவேகம் இரண்டாவது பாடல் பற்றி அனிருத் அதிரடி தகவல்
பிக் பாஸ் போட்டியாளர்களுடன் இப்படி ஒரு ஒப்பந்தமா?வெளிவந்த அதிர்ச்சி தகவல்
மெர்சல் படத்தில் விஜய்யின் ஒரு கதாபாத்திரத்தின் பெயர் இதுதானா- உறுதியான தகவல்
மெர்சல் படத்தில் விஜய்யின் ஒரு கேரக்டர் உறுதியானது- வெளியான புகைப்படம்
பொய் சொன்ன ஜூலியை மாட்டி விட்ட ஆர்த்தி...
BiggBoss நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்களுக்கு வார சம்பளம் மட்டும் இவ்வளவா?
விஜயின் தெறி படத்தால் நடந்த சுவாரசியமான சம்பவம்! எத்தனை பேருக்கு தெரியும்