Home  |  திரை உலகம்

சிம்பு படத்தில் நான் இல்லையா ..... அதிர்ச்சியில் சந்தானம் !!

சிம்பு, நகைச்சுவை நடிகர் கவுண்டமணியின் தீவிர ரசிகர். அதனால்தான் தனது ஆரம்ப கால படங்களில் கவுண்டமணியை நடிக்க வைத்திருந்தார். 

 

கடந்த சில வருடங்களாக, சந்தானத்தின் நடிப்பும் அவரை கவர்ந்ததால், காதல் அழிவதில்லை படத்திலிருந்தே அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கொடுத்து சினிமாவில் பெரிய ஆளாக ஆக்கிவிட்டார்.

இதனால்தான், சிம்பு எனது காட்பாதர் என்று மேடைகளில் சொல்லும் சந்தானம், அவரது படங்களுக்கு எப்போது அவர் அழைத்தாலும் ஓடிச்சென்று நடித்துக்கொடுப்பேன். சம்பளம் கொடுத்தாலும் வாங்கிக்கொள்வேன், இல்லையென்றாலும் நடிப்பேன் என்று கூறும் சந்தானம், தற்போது சிம்பு-நயன்தாரா இணைந்துள்ள இது நம்ம ஆளு படத்திலும் தனக்கு கண்டிபபாக வாய்ப்பு இருக்கிறது என்றுதான் நினைத்திருந்தாராம். எப்படியாவது அழைப்பு வரும் என்று நினைத்தவருக்கு தற்போது சூரியே அப்படத்தின் பிரதான காமெடியனாக நடிக்கும் அதிர்ச்சி செய்தி தெரிவிக்கப்பட்டுள்ளதாம.

 

இதையடுத்து, அவசர அவசரமாக சிம்புவையும் தொடர்பு கொண்டு கேட்டபோது, அந்த கதையை எழுதும்போதே சூரியை மனதில் கொண்டு பாண்டிராஜ் எழுதிய விவரத்தை சிம்பு சொல்ல, என் காட்பாதர் படத்தில் நான் இல்லையா? இது கொஞ்சம்கூட நியாயமே இல்லை என்று தனது மனக்குமுறலை வெளிப்படுத்தியவர், எப்படியோ உங்களுடன் நான் இல்லையென்றாலும், நீண்ட இடைவேளைக்குப்பிறகு நயன்தாரா இணைந்திருக்கிறார். ஏதோ ஒருவகையில் நல்லது நடந்து கொண்டிருக்கிறது. அதனால் இதுகூட எனக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது என்று அப்படம் வெற்றிபெற மனதார வாழ்த்து சொல்லி விடைபெற்றாராம் சந்தானம்.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்