Home  |  திரை உலகம்

சந்தானம் மீண்டும் ஓர் புதிய அவதாரம் !!

காமெடியில் மட்டும் கலக்கி வந்த சந்தானம் தற்போது, பாட்டு பாடவும் ஆரம்பித்து விட்டார். 

 

விரைவில் ஸ்ரீகாந்த் நடிப்பில் வெளிவர இருக்கும் நம்பியார் என்னும் திரைப்படத்தில், "சரக்கடி நண்பா நீ சரக்கடி" என்ற பாடலை சந்தானம் சமீபத்தில் பாடியுள்ளார்.  

 

சந்தானம் பாடியது குறித்து நம்பியார் படத்தின் இயக்குனர் கணேஷா கூறுகையில், "இந்த படத்தில் ஸ்ரீகாந்துடன் இன்னொரு கதாநாயகனாக சந்தானம் நடித்து வருகிறார். ஏன் இன்னொரு ஹீரோ சந்தானம் என்று சொல்கிறேன் என்பதை படம் வரும்போது நீங்களே புரிந்து கொள்வீர்கள். காமடிக்கு பஞ்சமில்லாத கதைக் களம். அதற்காக வெறும் காமடியை மட்டும் நம்பி பயணப்படும் படம் அல்ல. சந்தானம் பட்டைய கிளப்பிய படங்களில் இதுவும் ஒன்றாக அமையும் என கணேஷா கூறினார்.

 

சந்தானம் பற்றி ஸ்ரீகாந்த் கூறும்போது, 'சினிமாவில் எனக்கு கிடைத்திருக்கும் மரியாதைக்குரிய நண்பர் சந்தானம். எனக்காக நடித்துக் கொடுப்பதோடு பாடியும் உதவியிருக்கிறார். நீங்க ஜெயிக்கணும் என்ற அவரோட நம்பிக்கையை நம்பியார் படம் நிச்சயமாக நிறைவேற்றும் என ஸ்ரீகாந்த் கூறியுள்ளார்.

 

காமெடி நடிகராக திரை துறையில் அறிமுகமான சந்தானம், பின், கதாநாயகனாகவும், தயாரிப்பாளராகவும் மாறினார். தற்போது நம்பியார் என்ற படத்தின் மூலம் பாடகராகவும் புதிய அவதாரம் எடுத்துள்ளார். அடுத்தது........

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்