Home  |  திரை உலகம்

வாலிப ராஜாவில் மன நல மருத்துவராக கலக்கும் சந்தானம் !!

கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் நடித்த சந்தானம், சேது, விசாகா சிங் ஆகியோர் 'வாலிப ராஜா' படத்தின் மூலம் மீண்டும் இணைகிறார்கள். இந்த படத்தை கே.வி.ஆனந்திடம் உதவியாளராக இருந்த சாய் கோகுல் ராம்நாத் இயக்குகிறார். 

 

வாங்ஸ் விஷன் ஒன் என்ற நிறுவனம் தயாரிக்கிறது.இன்னொரு கதாநாயகியாக நஸ்ரத் என்பவர் நடிக்கிறார். இவர்களோடு ஜெயப்பிரகாஷ், விடிவி கணேஷ், தேவதர்ஷினி, சந்தான பாரதி உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமும் நடித்துள்ளது. 

 

இப்படத்தில் சந்தானம் பலரின் பிரச்சினைகளை புரிந்துகொண்டு தீர்வு சொல்கிற மனநல மருத்துவராக வருகிறாராம். தன்னிடம் வரும் நோயாளிகளிடம் அவங்க பிரச்சினைகளோட ஒன்லைன் கேட்பாராம். அது பிடிச்சிருந்தா மட்டுந்தான் ட்ரீட்மெண்ட் கொடுப்பாராம். அப்படி ஒரு வித்தியாசமான மருத்துவராக வருகிறார். இந்த படத்தில் லோக்கல் காமெடியாக மட்டுமல்லாமல், புத்திசாலித்தனமான காமெடிகளையும் சந்தானம் பண்ணியிருக்கிறாராம். 

 

மேலும் படத்தில் சந்தானத்தின் பஞ்ச் டயலாக்குகளுக்கும் பஞ்சமிருக்காதாம். உதாரணத்துக்கு, ‘உன் காதலை போரடிக்காம பார்த்துக்கிட்டா, அது உன்னை பீர் அடிக்காம பாத்துக்கும்’, ‘ஒரு டாக்டரால முடியாதது ஒரு குவார்ட்டரால முடியும்’ ‘மாடு முன்னாடி போனா முட்டும்… ஃபிகர் பின்னாடி போனா திட்டும். ஆனா ரெண்டயும் மேய்க்கிறது ரொம்ப கஷ்டம்’ என்பன போன்ற வசனங்கள் தியேட்டர்களில் விசில் வரவழைக்கும் என்கின்றனர் படக்குழுவினர். 

 

கதைப்படி காதலிக்க துவங்கும் சேதுவுக்கு பலவிதமான பிரச்சனைகள் வருகின்றன. இதனால் இதற்கு உதவி தேடி, சைக்யாட்ரிஸ்ட்டான சந்தானத்திடம் போகிறார் சேது. கல்யாணமாகாத சந்தானமோ ஏற்கனவே ஹீரோயின்கள் இரண்டு பேருக்கும் கவுன்சிலிங் கொடுத்து வருபவர். இவர்களுடன் சேர்த்து சேதுவுக்கும் சில ஐடியாக்களை கொடுக்க, அவையெல்லாம் காமெடி கலாட்டாவாக முடிகின்றதாம்..

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்