Home  |  திரை உலகம்

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் சந்தானத்துக்கு ஒப்பனிங் சாங் !!

தற்போதைய தமிழ் சினிமாவில் ஒன்று, இரண்டு ஹிட் படங்களை கொடுத்த ஹீரோக்களுக்கு கூட ஓபனிங் சாங் வைப்பது வழக்கமாகிவிட்டது. 


முன்பெல்லாம் ரஜினி, அஜித், விஜய் போன்ற முன்னணி ஹீரோக்களுக்கு மட்டும் தான் ஓபனிங் சாங் வைக்கப்பட்டது. 


அந்த வகையில், தற்போது சந்தானம் ஹீரோவாக நடித்து வரும் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற படத்தில், சந்தானம் ஒரு ஓப்பனிங் பாடலோடுதான் என்ட்ரி கொடுக்கிறாராம். 


தனது ஒப்பனிங் சாங் மாஸாக இருக்க வேண்டும் என்பதற்காக மியூசிக் டைரக்டர் சித்தார்த்தை போட்டு ஒரு வழி பண்ணி ஏராளமான டியூன் போட்ட பிறகுதான் அதிலிருந்த ஒரு டியூனை ஓ.கே பண்ணினாராம் சந்தானம். மேலும் அந்த பாடலுக்காக பல நாட்களாக நடன ஒத்திகை நடத்தியவர், இன்றைய இளவட்ட ஹீரோக்களை மிஞ்சும் வகையில் டான்ஸ் மூவ்மென்ட்டில் அசத்தி இருக்கிறாராம். 


ஓபனிங் சாங்கில் சந்தானத்துக்காக பாடும் பாடகரின் குரலும் அவருக்கு ஒத்துப்போக வேண்டும் என்று, பல பாடகர்களின் குரலை பரிசீலித்து கடைசியாக முகேஷ் பாடினால் சந்தானத்துக்கு மேட்சாக இருக்கும் என்று அவரை பாட வைத்தார்களாம்.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்