Home  |  ஆரோக்கியம்

அழகே அழகே - சந்தனம் ஸ்பெஷல் !!

அழகே அழகே - சந்தனம் ஸ்பெஷல் !!

சந்தனம் மருத்துவப் பயன்பாடுடைய ஒரு மரமாகும்.
இந்திய மரங்களில் மிகவும் விலையுயர்ந்த மரம் சந்தனமரம்.


இதன் தாயகம் இந்தியா.
இந்தியாவின் கிழக்குப் பகுதி காடுகளில் மிகுந்து காணப்படும்.


சுமாரான உயரத்துடன் கூடிய மரம்.
வளர்ந்த மரம் வாசனை நிரம்பியது.

மரத்தின் வைரம் பாய்ந்த கட்டைப் பகுதி எண்ணெய்ச் சத்து நிரம்பியது.
பசும் பாலில் உரைத்துப் புளியங் கொட்டையளவு காலை, மாலை சாப்பிட்டு வர வெட்டைச் சூடு, மேக அனல், சிறுநீர்ப் பாதை ரணம், அழற்சி ஆகியவை தீரும்.


இதிலிருந்து எடுக்கப்படும் ‘அகர்’ என்னும் எண்ணெய் மருத்துவப் பண்புகள் கொண்டவை.
சருமத்திற்கு குளிர்ச்சியளிக்கக் கூடியவை.


சந்தன கட்டை துவர்ப்பு மருந்தாகவும், கசப்பு சுவையுடனும் குளிர்த்தன்மை கொடுக்க கூடியதாகவும், மனதிற்கு புத்துணர்ச்சி தருவதற்காகவும் பயன்படுகிறது.

வெள்ளை சந்தனம் சாதாரண சந்தன மரங்களுள் ஒன்று, இதை அறிவது மிக கடினம், மரபு அணு சோதனை முலம் மட்டும் தான் கண்டுபிடிக்க முடியும். இந்த வெள்ளை சந்தனம் பல லட்சக்கணக்கான மரங்களுள் ஒன்று அல்லது இரண்டு மட்டுமே விளையகூடியது. வெள்ளை சந்தனம் சிறப்பு வாய்ந்த சந்தன மரங்களுள் ஒன்று. வெள்ளை சந்தன மரத்தின் சிலை (முருகன், சிவன், வேல்) சமய வழி பாட்டில் முக்கிய இடம் பெறுகிறது. நறுமணம் இல்லை. வெள்ளை சந்தனம் மரங்களுக்கு மருத்துவக் குணங்களும் உண்டு.


இதனால் நமக்கு கிடைகும் மருத்துவப் பயன்கள்
வெள்ளை சந்தனம் சிறு நீர் பெருக்கியாகவும்,

உடல் பலம் பெருக்கியாகவும் செயற்படும்.
வியர்வையை மிகுவிக்கும்,
வெண்குட்டம், மேக நீர், சொறி, சிரங்கைக் குணப்படுத்தும்.

முகப்பூச்சு, நறுமணத் தைலம், சோப்புக்கள், ஊதுவத்திகள், அலங்கார பொருட்கள், மாலைகள் என மருத்துவம் சாராத பகுதிகளில் பயன் படுத்தப்பட்டாலும், கிருமி நாசினி செய்கை, உடல் அழற்சியை குறைக்கும் தன்மை உடையது.


சிறுநீர் தாரை எரிச்சல் சூட்டைத் தணிக்கும்,
விந்து நீர்த்துப் போதலைக் கெட்டிப் படுத்தும் குளிர்ச்சி தரும்.
உடல் வெப்பத்தை குறைக்கவும்,
தோல் நோய்களை நீக்கவும் நறு மணத்திற்காகவும் இதன் எண்ணெய் பயன் படுகிறது.


சந்தன எண்ணெய் அதிக அளவில் மற்ற வாசனை திரவியங்கள் தயாரிப்பில் பகுதி பொருளாக பயன்படுத்தப்படுகிறது. சந்தன எண்ணெயுடன் மற்ற வாசனைப் பொருட்களை கலந்து தயாரிக்கப்படும் வாசனை திரவியங்களே அதிக தரமுள்ளதாக உள்ளது.

சந்தன கட்டையை எலுமிச்சம் பழச்சாற்றில் உரைத்துத் தடவ முகப்பரு, தவளைச் சொறி, சொறி, படர் தாமரை, வெண்குட்டம், கருமேகம் வெப்பக்கட்டிகள், தீர்ந்து வசீகரமும் அழகும் உண்டாகும்.


நெல்லிக்காய்ச்சாறு 15 மில்லியில் சுண்டைக்காய் அளவு சந்தன விழுதைக் கலந்து 40 நாள் குடித்து வர மதுமேகம் தீரும்.


வெள்ளை சந்தனத்தூள் 20 கிராம், 300 மி.லி. நீருல் போட்டுக் காய்ச்சி 150 மி.லி.யாக்கி வடிகட்டி 3 வேளையாக 50 மி.லி. குடிக்க நீர்க் கோவை, காய்ச்சல், மார்புத் துடிப்பு, மந்தம், இதயப் படபடப்பு குறையும். இதயம் வலிவுறும்.


வெள்ளை சந்தனத்துண்டுளை நீரில் ஊற வைத்து மையாய் அரைத்து சுண்டைக்காயளவு பாலில் கலந்து இரவு மட்டும் 20 நாள் கொள்ள பால் வினை நோய், தந்திபேகம், பிரமேகம், கனோரியா, பெண் நோய் என்று பல பெயர் பெறும் இவை யாவும் குணமாகி உடல் தேறி, நோய் தீரும்.


மருதாணி விதை, வெள்ளை சந்தனத்தூள் கலந்து சாம்பிராணிப் புகைபோல் போட பேய் பிசாசு விலகும்.


வெள்ளை சந்தனத்தை பசும் பால் விட்டு அரைத்து 5 கிராம் அளவு எடுத்து காலை, மாலை சாப்பிட்டு வந்தால் வெட்டைச்சூடு, மேக அனல், சிறுநீர் பாதையில் புண் போன்றவை தீரும்.


இரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைய:
நெல்லிக்காய் சாறு 15 மி.லி. எடுத்து அதனுடன் 5 கிராம் அரைத்த வெள்ளை சந்தனத்தைக் கலந்து உருண்டையாக்கி காலை வேளையில் சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையும்.

 

சந்தன கட்டையில் சித்திர வேலைபாடுகளுக்கும், கதவுகள், பேனா தாங்கிகள்,பேப்பர் வெயிட்டுகள்,கத்திகள்,புகைப்பட பிரேம்கள் ஆகிய பொருட்கள் செய்யப்படுகின்றன. மேலும் சந்தன பவுடர்,சந்தன சோப்பு மறும் அகர்பத்தி தயாரிக்கப்படுகிறது. சந்தன மரமானது சந்தனம் தயாரிக்கவும் துணி வகைகள் மற்றும் அலமாரிகள் ஆகியவற்றிற்கு வாசனை பொருளாக பயன்படுகிறது.


சந்தன மரத்தூளை ஆவியாக்கி பிரித்தல மூலம் எடுக்கப்படும் ஈஸ்டு இந்தியன் சேண்டல் வுட் ஆயில் மிகவும் இனிய நறுமணம்,வாசனை,வெதுவெதுப்பான தன்மை மற்றும் அதன் தனித்துவம் ஆகியவற்றால் அதிக விலை மதிப்பை பெற்றுள்ளது.

 

  27 Feb 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
தினமும் இத ஒரு டம்ளர் குடிச்சா, கண்ணாடி போட வேண்டிய அவசியமே இருக்காது தெரியுமா?
ஆண்களின் ஆரோக்கியம் சில டிப்ஸ் !!
மல்லிகை பூவின் எண்ணையில் சூடு குறையும் தன்னாலே !!
ஆண்களின் சக்தி பலம் பெற !!
கத்திரிக்கா பிஞ்சு கத்திரிக்கா !!
இதயத்திற்கு வலுவூட்டும் ரோஜா இதழ்கள் !!
வெள்ளை அணு !!
பெண்களை தன் வசமாக்கிய மருதாணி !!
டீன் ஏஜ் பெண்கள் சில தகவல்கள் !!
குங்குமப் பூவின் நன்மைகள் !!