Home  |  திரை உலகம்

அஜீத்துடன் ஜோடி சேறுகிறாராம் சமந்தா !!

அஜீத்தின் அடுத்த படத்துக்கு ஜோடியாக சமந்தா நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 


தற்போதைய தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களுடன் நடித்து வருபவர் சமந்தா. இவர் ஒரே நேரத்தில் அஞ்சான் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாகவும், முருகதாஸ் இயக்கும் புதிய படத்தில் விஜய்க்கு ஜோடியாகவும் நடிக்கிறார். இரண்டு பெரிய ஹீரோக்களுடன் நடித்து வரும் சமந்தாவுக்கு அஜித்துடன் எப்படியாவது ஒரு படத்திலாவது நடித்துவிட வேண்டும் என்கிற ஆசை உள்ளது. சமீபத்தில் இதனை தனது டுவிட்டரில் சூசகமாக தெரிவித்து இருந்தார். திடீரென அவர் இதுபோல் டுவிட்டரில் தனது விருப்பதை வெளியிட்டது பலருக்கு ஆச்சரியம் தந்தது. காரணம், இல்லாமல் இல்லை. இது எல்லாமே கௌதம் மேனனின் புது பட டெவலப்மென்ட் என கோலிவுட்டில் பேசப்படுகிறது. இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக அனுஷ்காதான் நடிப்பதாக இருந்தார். ஆனால் அவரால் கால்ஷீட் ஒதுக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் தனது ஆஸ்தான நடிகையான சமந்தாவை தொடர்புகொண்டு பேசினாராம் கௌதம் மேனன்.


சமந்தாவை சினிமாவில் பிரபலமாக்கியது கவுதம் மேனன்தான். கௌதம்தான் தனது ரோல் மாடல் என்றும் சமந்தா கூறி வந்தார். இப்போது முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, விஜய், சூர்யாவுடன் படங்களில் நடித்து வருகிறார். அதனால் அஜித் படத்திலும் அவர் நடித்தால் நன்றாக இருக்கும் என விநியோகஸ்தர்கள் விரும்புகின்றனர். கௌதம் கேட்டதும் கால்ஷீட்டை சரி செய்து இதில் நடிக்கும் முயற்சிகளில் சமந்தா ஈடுபட்டுள்ளாராம். அதனால்தான் டுவிட்டரில் அவர் அஜித்துடன் நடிக்க விருப்பம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.


இப்போ சமந்தா காட்டுல முன்னணி நடிகர்கள் மழை தான்........

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்