Home  |  திரை உலகம்

சலீம் ( Salim )

சலீம் ( Salim )

Movie Name: Salim சலீம்
Hero: VIJAY ANTONY
Heroine: Aksha Pardasany
Year: 2014
Movie Director: N. V. Nirmal Kumar
Movie Producer: Studio 9 Production
Music By: VIJAY ANTONY


ஒரு டாக்டர், கார்ப்பரேட் மருத்துவமனையில் பணிபுரிகிறான். மருத்துவத் தொழிலை உன்னதமான சேவையாகக் கருதும் அவன், ஏழைகளுக்குக் குறைந்த விலை மருந்துகளை எழுதிக் கொடுப்பது, அனாவசிய மருத்துகளைப் பரிந்துரை செய்யாமல் இருப்பது என்று செயல்படுகிறான். நிஷா என்னும் பெண்ணை அவனுக்கு நிச்சயம் செய்கிறார்கள். நிஷா எதற்கெடுத்தாலும் உணர்ச்சிவசப்பட்டுப் படபடக்கும் பெண். தொழிலில் இவனுக்கு இருக்கும் அதீத ஈடுபாடு, அவனுடைய அளவுக்கதிகமான பொறுமை ஆகியவை அவளை வெறுப்படையச் செய்கின்றன.

இவர்களுக்கிடையேயான ஒவ்வொரு சந்திப்பும் பிரச்சினையில் முடிகிறது. அவமானமும் புறக்கணிப்பும் வெறுப்பின் உச்சத்துக்கு அவனை இட்டுச் செல்கின்றன. ஒரு கட்டத்தில் அழுத்தம் தாங்காமல் வெடிக்கிறான். அந்த வெடிப்பு அவனை எங்கே இட்டுச் செல்கிறது என்பதே மீதிக் கதை. முதல் பாதி முழுவதும் அவமானம், புறக்கணிப்பு, நல்லுணர்வின் வீணான முயற்சிகள் என நகரும் படம் பின் பகுதியில் த்ரில்லராக முகம் மாறுகிறது. அமைச்சரின் பையனையும் அவன் நண்பர்களையும் பிடித்துவைத்துக்கொண்டு ஆடும் விறுவிறுப்பான ஆட்டமாக உருவெடுக்கிறது. முக்கியமான சமூகப் பிரச்சினையைக் கையாளும் படம், அதை த்ரில்லர் வகையில் கையாண்டிருந்தாலும் முதல் பாதி உதிரிச் சம்பவங்களின் தொகுப்பாக இருக்கிறது.

உறவுச் சிக்கல்கள், தொழில் நெருக்கடிகள், சமூகப் பிரச்சினைகள் எனப் பல விஷயங்களை முதல் பாதி கையாள்கிறது. சாது நாயகன் வீர அவதாரம் எடுக்கும்போது சூர சம்ஹாரம் செய்யும் பராக்கிரமசாலியாகக் காட்டாமல் புத்திசாலித்தனத்தையும் சேர்த்திருப்பது ஆறுதல். முன் பாதியில் காட்டப்பட்ட பிரச்சினையைப் பிற்பகுதியில் கவனமாகக் கோர்த்திருப்பது பாராட்டுக்குரியது. இயக்குநர் என்.வி. நிர்மல் குமார் படத்தை விறுவிறுப்பாகக் கொண்டு செல்கிறார். இரண்டாம் பாதியில் படம் முழுவதும் ஒரு ஓட்டலுக்குள்ளேயே நடந்தாலும் வேகம் குறையவில்லை.

நாயகனின் உருமாற்றத்திற்கான காட்சிகள் வலுவாக அமையவில்லை. இரவு பார்ட்டியிலிருந்து வெளியே வந்து போலீஸிடம் மாட்டிக்கொள்வது, போலீஸிடமிருந்து தப்பிப்பது ஆகிய காட்சிகள் வலுவாக அமையவில்லை; கவரவில்லை. பிணைக் கைதிகளை விடுவித்து, வில்லனின் தாக்குதலிலிருந்தும் தப்பிக்கும் சலீம் தனியாக நிற்கும் காட்சியில் தொடரும் என்று போட்டு முடிக்கிறார்கள். மத்திய அமைச்சராக வரும் ஆர்.என்.ஆர். மனோகர் நன்றாக நடித்திருக்கிறார். விஜய் ஆண்டனியின் இசையில் மஸ்காரா பாடல் நன்றாக இருக்கிறது. வழக்கம் போல இதிலும் பெண்களைக் காதல் துரோகிகளாகச் சித்தரிக்கும் பாடல் இருக்கிறது. ஆனால் அதைக் கதைக்குள் கொண்டுவராமல் தந்திரமாகப் புகுத்தியிருக்கிறார்கள்.

  15 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
நாளை மெர்சல் இசை வெளியீடு... விஜய் பேசப் போகும் அரசியல் என்ன?
'விவேகம்' புயலை கண்டு பயந்து ஓடிய படங்கள்
மெர்சல் ரிலீசாகாது..!இப்படி ஒரு பிரச்சனையா!..
தளபதி ரசிகர்களுக்கு ஓர் இன்ப அதிர்ச்சி- மெர்சல் ஸ்பெஷல்
'விவேகம்' ட்ரெய்லர்ல இதையெல்லாம் கவனிச்சீங்களா..? #VivegamTrailer
BiggBossல் இருந்து வெளியேறிய ஷக்தியின் முதல் பதிவு- இனி தான் என் ரியல் கேம் ஆரம்பம்
ஓவியாவை பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேற்ற இதுவே காரணம்..!
மெர்சல் படக்குழுவினர்களுக்கு விஜய் கொடுத்த சூப்பர் சர்ப்ரைஸ்
விவேகம் படத்தை பார்த்த பிறகு அஜித்தின் ரியாக்‌ஷன் இதுதான்
விஜய் படைத்த பிரமாண்ட சாதனை, தமிழகத்தில் தளபதி படம் மட்டுமே நிகழ்த்திய சாதனை