Home  |  அறுசுவை

சேலம் மட்டன் குழம்பு (Salem Mutton Curry)

தேவையானவை :

 

மட்டன் - 3/4 கிலோ,

மிளகு - 1 டீஸ்பூன்,

சீரகம் - 1 டீஸ்பூன்,

சோம்பு - 1 டீஸ்பூன்,

கசகசா - 1 டீஸ்பூன்,

தேங்காய் - 1 மூடி,

இஞ்சி - 2 அங்குல துண்டு,

பூண்டு - 25 பல்,

காய்ந்த மிளகாய் - 10,

கிராம்பு - 2,

ஏலக்காய் - 2,

பிரிஞ்சி இலை - சிறிது,

கறிவேப்பிலை - 20,

எண்ணெய் - 4 ஸ்பூன்,

உப்பு - தேவையான அளவு.

சின்ன வெங்காயம் - 1/2 கிலோ,

தனியா தூள் - 2 டேபிள் ஸ்பூன்,

தக்காளி - 1,

மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்,

பட்டை - சிறிது,

 

 

செய்முறை :

 

1.முதலில் மிக்ஸ்சியில் 15 பல் பூண்டு, இஞ்சியை அரைத்து கொள்ளவும்.மட்டனை கழுவி சிறிது உப்பு, மஞ்சள் தூள், பாதி இஞ்சிபூண்டு விழுது சேர்த்து, குக்கரில் ஐந்து விசில் விட்டு வேக வைக்கவும்.

2.கடாயில் 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு, மிளகாய், பாதி கறிவேப்பிலை, சீரகம், மிளகு வறுத்து எடுக்கவும்.அதே எண்ணெயில் 8 வெங்காயத்தை மட்டும் தனியாக வைத்துக் கொண்டு, மீதி வெங்காயத்தை வதக்கவும்.

3.வெறும் கடாயில் சோம்பு, கசகசா, தேங்காய் சேர்த்து லேசாக வறுத்து எடுக்கவும்.வறுத்தவைகளை தனிதனியாக அரைத்து வைக்கவும்.பாத்திரத்தில் மீதி எண்ணெயை விட்டு காய்ந்தவுடன் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை சேர்க்கவும்.பொரிந்தவுடன் இரண்டாக வெட்டிய 8 வெங்காயம், பூண்டு, மீதி உள்ள இஞ்சிபூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

4.வெங்காயம் வதங்கியவுடன், தக்காளி, மீதி கருவேப்பிலை, மட்டன் சேர்த்து வதக்கவும்.சிறிது நேரம் வதக்கிய பின், முதலில் அரைத்த மிளகாய் மற்றும் சீரகம், மிளகு, தனியா தூள் சேர்த்து, ஐந்து  நிமிடம் வதக்கவும்.பிறகு அரைத்த வெங்காய விழுதை, தண்ணீரில் கரைத்து ஊற்றி, உப்பு போட்டு கொதிக்க விடவும்.

5.பத்து நிமிடம் கொதித்த பின், அரைத்த தேங்காய், கசகசா விழுதை கெட்டியாக கரைத்து ஊற்றவும்.ஐந்து நிமிடம் கொதித்த பின் இறக்கவும்.

Salem Mutton Curry

Ingredients for Salem Mutton Curry :


Mutton - 3/4 Kg,

Pepper - 1 Tsp,

Cumin - 1 Tsp,

Aniseeds - 1 Tsp,

Poppy Seeds - 1 Tsp,

Coconut - 1 Cover,

Ginger - 2 Inches,

Garlic - 25 Cloves,

Cloves - 2,

Cardamom - 2,

Bay Leaf - Little,

Curry Leaves - 20,

Oil - 4 Spoons,

Salt - as needed,

Small onions - 1/2 Kg,

Tomato - 1,

Coriander Powder - 2 Tbsps,

Tumeric Powder - 1 Tsp,

Cinnamon - Little.


Method for Salem Mutton Curry :


1. In a mixi grind the 15 cloves of garlic and ginger. Wash the mutton pieces and mix up the salt, turmeric powder, half of the ginger garlic paste. Allow it to boil in a cooker till it comes 5 whistle.

2. Heat 2 spoons of oil in a pan then add dry chilies, half of the curry leaves, cumin, pepper then fry it well. Then fry the few onions in a pan. Keep the left over 8 onions aside.

3. Heat a pan and add aniseeds, poppy seeds, coconut and make a dry fry. Then grind it well. Heat oil in a pan then add cinnamon, cloves, cardamom, bay leaf and fry it well. Then add left over 8 onions , garlic, ginger garlic paste and fry them well.

4. Then add tomato, curry leaves and mutton pieces along with them then fry it well. Then add grounded chilly, cumin, coriander powder. Allow it to boil for 5 minutes. Then add Onion paste and some water and salt. And boil it well.

5. Allow it to boil for 10 minutes then add thick density of ground coconut paste , poppy seeds paste. Allow it to boil for 5 minutes. turn off the stove.


Salem Mutton Curry is ready to serve. 

  13 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!