Home  |  திரை உலகம்

ரம்மி திரைவிமர்சனம் !!

இயக்குனர் - க.பாலகிருஷ்ணன்

 

நடிப்பு : 

இனிகோ பிரபாகரன்

விஜய் சேதுபதி

காயத்ரி சங்கர்

ஐசுவர்யா ராஜேஸ்

 

இசை  - டி. இமான்

 

பிளஸ் டூவில் மார்க் குறைவாக எடுப்பதால், வேறு வழியேயின்றி, ஒரு கிராமத்தில் இருக்கும் காலேஜிற்கு படிக்கப் போகிறார் நம்ம ஹீரோ இனிகோ பிரபாகர். எல்லா படத்தையும் மாறி இந்த படத்திலும் ஹீரோ படிக்கும் அதே காலேஜிற்கே, அட அதே கிளாஸிற்கே படிக்க வருகிறார் நம்ம ஹீரோயின் காயத்திரி. அதே கிளாஸில் சேரும் சூரியும், விஜய் சேதுபதியும் இனிகோவிற்கு நண்பர் ஆகிறார்கள். அங்கு சேர்ந்த கொஞ்சநாளிலேயே, உள்ளூர் பெண்ணை காதலித்தால் வெட்டுவதை கண்ணால் பார்க்கிறார்கள் நண்பர்கள் மூவரும். வெட்டு, குத்து மனிதர்கள் நிறைந்த திகில் கிராமமாக செம பில்டப்புடன் படம் ஆரம்பிக்கிறது. 

 

இந்நிலையில் காலேஜில் இனிகோவிற்கு ஹீரோயின்மேல் காதல் வர, விஜய்சேதுபதியும் இன்னொரு பெண்ணை லவ் பண்ண ஆரம்பிக்க, சூரி பதறிப்போய்த் திரிய என முதல் அரைமணி நேரம் காமெடியாக முடிகிறது. எந்த நிமிடம் காதல் ஜோடிகள் பிடிபடுவார்களோ என்று நாம் பதற ஆரம்பிக்கிறோம். ஹீரோயின் ஊர்த்தலைவரின் தம்பி மகள் வேறு என்பதால் பரபரப்பு தொற்றிக்கொள்கிறது. காதல் ஜோடிகள் மாட்டுவது போல் அடுத்த ஒரு மணி நேரம் அடுத்தடுத்து சீன் வருகிறது. ஆனால் மாட்டவில்லை, தப்பிக்கிறார்கள். ......... ஸ்ஸ்ஸ்...அப்ப்பப்பா. இப்பவே கண்ணகட்டுதே...

 

இப்போ நம்ம ஹீரோ இனிகோ ஊருக்கு போய்ட்டு வர்றாரு. வந்தா விஜய் சேதுபதிய காணோம். ஒரு லெட்டர். மச்சான், வேற வழியில்லை. லவ் பண்ணுன பொண்ணைக்கூட்டிட்டு ஓடிப்போறோம். நீயும் தப்பிச்சிடுன்னு லெட்டர். விஜய் சேதுபதி லவ் பண்ணி இழுத்துட்டுப் போனது யார் தெரியுமா அந்த ஊர் தலைவரின் பொண்ணை. அப்புறம் என்ன, பதறியடிச்சு எப்படியோ தப்பிச்ச நம்ம ஹீரோ இனிகோ, ஃப்ரெண்ட்டைத் தேடுராறு, அதுக்குள்ள தலைவர் கோஷ்டி விஜய் சேதுபதிய போட்டுத்தள்ளிட்டு, பொண்ணை ஊருக்கு கொண்டுவந்திடுது.

 

இப்போ ஹீரோ-ஹீரோயின் ஜோடிக்கு என்னாகுமோன்னு நாம நினைக்கும் போது. அந்த தலைவரு, குடும்ப மானத்தை கப்பல்ல ஏத்துன பொண்ணை கொல்ல போறாரு. அந்த பொண்ணு தலைவரை கொன்னுட்டு, ஹீரோ-ஹீரோயினை சேர்த்துவச்சுட்டு, கையில அருவாளோட நம்மள பார்த்து நடக்க ஆரம்பிக்குது. அப்ப படமும் முடியுது..... 

 

இந்த படத்தை திரில்லிங் படம் மாதிரி கொண்டுபோனது ஏன்னு தெரியில சாதாரண சீனுக்கு கூட டெரர் மியூசிக்காவே வருது... முதல் பாதி திகிலாக போனாலும், இரண்டாம் பாதியில் லாஜிக்கே இல்லாமல் சில காட்சிகள் வருவதால் டெரர் எஃபக்ட் சுத்தமா எடுபடாம போயிடுது.    

 

இனிகோ பிரபாகருக்கு இந்த படத்துல நல்ல சான்ஸ். அவரும் வாய்ப்பை நல்லாவே யூஸ் பண்ணி இருக்காரு. மீண்டும் ஒரு ஹீரோ வாய்ப்பு கிடைக்கலாம்...... 

 

இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு பெரிய அளவில் கேரக்டர்கள் இல்லை என்றாலும், நட்புக்காக இதைப் பண்ணினாருன்னா, பெரிய விஷயம் தான். ஆனா அவருக்கு குடுக்குற பேக்ரவுண்ட் மியூசிக் சரியில்ல....

 

நடிகைகள் பற்றி ஒன்னும் சொல்லுறத்துக்கு இல்ல.... 

 

சூரி இந்த படத்திலும் காமெடி ஓரளவுக்கு பண்ணியிருக்கிறார்.  

 

மொத்தத்தில் ரம்மி ஆகிடுமோ டம்மி .......

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்