Home  |  ஆன்மிகம்

ருத்ராட்சம் - ஒரு சிறப்பு பார்வை !!

ருத்ராட்சம் - ஒரு சிறப்பு பார்வை !!

 


சூரியனுக்கு ஒப்பான ஆற்றல் கொண்டது ருத்ராக்ஷம் என்றும் மனதில் கொள்ளவேண்டும். சூரியன் எவ்வாறு தன்னுடைய ஆற்றல் மூலம் சூரிய மண்டலத்தை உருவக்கியதோ அது போல ருத்ராக்ஷம் தனது ஆற்றல் மூலம் அதன் சூழ்நிலை முழுவதும் கட்டுப்பட்டில் வைக்கும் சக்தி கொண்டது.

 


மருத்துவ குணங்கள் கொண்ட ஐந்து முக ருத்திராட்சம் ஒன்றை எடுத்து அதில் எலுமிச்சம் சாறுவிட்டு இழைத்து, அந்த சாற்றை தேள் கொட்டிய இடத்தில் தடவினால் வலி உடனே நீங்கும். இந்த ருத்திராட்சம் தூக்கம் இல்லாமல் துன்பப்படுபவர்களுக்கு நல்ல நிவாரணி.

 

பரமசிவன் அணிந்துள்ள ருத்திராட்சத்தின் 16 வகை முகங்களும், அவற்றின் அரிய பயன்களும் , ருத்திராட்சத்தின் கீழ்மேலான நெடுக்குவசத்தில் அமைந்த குறிகள் கோடுகளை வைத்து அதன் முகங்களை அறிய தெரிந்து கொள்ள வேண்டும்.


ஒரு முகமணி -
சிவஸ்வரூபம் இதைக் கழுத்தில் அணிந்தால் பிரமஹத்திர தோஷத்தைப் போக்கும். இதை அணிந்தவர்களை எதிரிகளா ல் வெல்ல முடியாது.


இரண்டு முகமணி -
சிவன், சக்தி ஸ்வரூபம். இதனை அணிவதால் தெரிந்தும், தெரியாமலும் செய்த இருவினைகளும் நீங்கும். கோஹத்தி பசுவைக் கொன்ற பாவம் நீங்கும்.


மூன்று முகமணி -
சிவனின் முக்கண். அக்னி ஸ்வரூபம். ஸ்திரீஹத்தி தோஷம் விலகும்.


நான்கு முகமணி -
பிரம்ம ஸ்வரூபம். நரஹத்தி தோஷம் நீங்கும்.


ஐந்து முகமணி -
காலாக்னி ருத்திரஸ்வரூபம். தகாததை உண்டது, தகாததைப் புணர்ந்தது முதலிய பாவங்கள் நீங்கும்.


ஆறுமுகமணி -
கார்த்திகேய ஸ்வரூபம். இதை வலது கரத்தில் அணிந்து கொண்டால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும், காயதேசம் கரு அழித்தல் முதலிய பாவங்களைநீக்கும். அஷ்டஐசுவரியமும், தேக ஆரோக்கியமும் உண்டாகும். தெளிந்த ஞானம் உண் டாகும்.


ஏழு முகமணி -
ஆதிசேஷன் அனங்க ஸ்வரூபம். சத்புத்தி, அறிவு, ஞானம் இவற்றைக் கொடுக்கும். கோகத்தியையும், பொற் களவை யும் போக்கும். ஐசுவரியமும், ஆரோக்கியமும் உண்டாகும்.


எட்டு முகமணி -
விநாயகர் ஸ்வரூபம். அன்னமலை, பஞ்சுபொதி, சொர்ணம், இரத்தினம் இவைகளைத்திருடிய பாவங்களைப் போக்கும். நீச்ச ஸ்திரீ, குரஸ்திரீ ஆகியோருடன் கலந்த தோஷம் நீங்கும். லட்சுமி கடாட்சம் உண்டாகும்.


ஒன்பது முகமணி -
கால பைரவ ஸ்வரூபம். புத்தி முக்திகளைக் கொடுக்கும். பிரம்மஹத்தி முதலான பாவங்களை நீக்கி, சிவகதி கிடை க்கச் செய்யும். சகல காரிய சித்தி உண்டாகும்.


பத்து முகமணி -
ஜெனார்த்தன ஸ்வரூபம் என்றும், எமதர்ம ஸ்வரூபம் என்றும் கூறுவர். பூத பிரேத, பீசாசுக்களையும் மரண பயத்தையும் நீக்கு ம். தசாபுத்தி தோஷங்கள் நீங்கும்.


பதினொரு முகமணி -
ஏகாதசருத்திர ஸ்வரூபம், பல அசுவமேதயாகம், ராஜசுய யாகங்கள், கோடி கன்னிகாதான பலனையும் தரும். எப்போதும் சௌபாக்கியம் பெருகும்.


பன்னிரண்டு முகமணி -
துவாதசாதித்யர் மகாவிஷ்ணு ஸ்வரூபம், இதை வலது காதில் அணிந்து கொண்டால் கோமேத, அஸ்வ மேதயாக பலனை த்தரவல்லது. கழுத்தில் அணிந்து கொண்டால் பல புண்ணிய நதிகளில் இத்துடன் நீராடுவதால் அந்த நதிகள் இதனால் புனிதமாகும். சுவர்ண தான பலனையும் கொடுக் கும்.


பதிமூன்று முகமணி -
சகலதேவ சொரூபம், சண்முக ஸ்வரூபம். இதை அணிந் தால் ரசசித்தி இராசாயண சித்தி முதலியன சித்திக்கும். பித்ரு ஹத்தி, மாத்ரு ஹத்தி முதலிய பாவங்கள் விலகும். சர்வா பீஷ்டம், சர்வ சித்தி கொடுக்கும்.

 

பதிநான்கு முகமணி -
ருத்ரநேத்ர, சதாசிவ ஸ்வரூபம். இதைச்சிகையில் (குடுமியில்) அணிந்து கொண்டவரின் உடலில் சிவபெருமான் நீங்காமல் இரு ப்பார். தேவர் ரிஷிகள் முதலானோரை வசப்படுத்தி சிவபதத் தையும் அளிக்கும்.

பதினைந்து முகமணி -
நாதவிந்து ஸ்வரூபம். பலகலைகளிலும் தேர்ச்சியுறுவர். சகல பாவங்க ளையும் நீக்கும்.


பதினாறு முகமணி -
சிவசாயுச்சிய பதவியை அளிக்கும். 14,15,16 முகமணிகள் கிடைப்பது அரி தாகும். அறுமுகமணி வலப்புயத்திலும், ஒன்பது முகமணி இடப்புயத்தி லும், பதினொரு முகமணி சிகையிலும், பன்னிரெண்டு முகமணி காதுக ளிலும், பதினான்கு முகமணி சிரசிலும் தரிப்பது உத்தமம்.

 

கடவுளின் அருட்கொடியான ருத்திராட்சம் எத்தனை முகம் கொண்டதாக இருப்பினும், அதன் புனிதம் ஒரு தன்மையானது.
எளிதில் கிடைக்கும் ருத்திராட்சமணியை வாங்கி, பால், தேன், பஞ்சகவ் யாம், புண்ணிய தீர்த்தத்தாலும், மேலான சிவலிங்க அபிஷேக தீர்த்தத் தால் சுத்தம்செய்து, திரியம்பகம் மந்திரம், திருஐந்தெழுத்தை ஓதிஅணிய வேண்டும்.

 

 

தமிழகத்தை பொறுத்தவரையில் மேற்கு தொடர்ச்சி மலையின், பல பகுதிகளில் ருத் திராட்ச மரங்கள் காணப்படுகின்றன.
சிறப்புகள் வந்து சேரும் நன்மைகள் நாளும் தேடி வரும் .

  23 Apr 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
யார் யாருக்கு வரும் 2017-ம் ஆண்டு சிறப்பாக இருக்கும்....!
ஆடி மாதமும் நமது முன்னோர் ஆற்றலும் !!
ஓம் நமசிவாய - சிவ துதி !!
அருணகிரிநாதரின் சிவ பாடல் !!
லிங்கம் சிவ லிங்கம் !!
திருமுருகன் பூண்டி கோவில் கும்பாபிஷேகம் !!
சிவ சரணம் துதி பாடல் !!
தென்கயிலாயம் வெள்ளியங்கிரியான்டவர் !!
திருநள்ளார் தெர்பாராண்யேஸ்வரர் கோயில் !!
திருவண்ணாமலை முக்தி தலம் !!