Home  |  திரை உலகம்

ருத்ரமாதேவி - பாகுபலி ரெட்டை படம் !!

ருத்ரமாதேவி - பாகுபலி ரெட்டை படம் !!

தெலுங்கில் ரிலீஸுக்காக காத்திருக்கிறது வரலாறு சார்ந்த இரண்டு படங்கள் .

ராஜமெளலியின் பாகுபலி மற்றும் குணசேகர் இயக்கத்தில் ருத்ரமாதேவி பெரிதும் எதிர்பார்க்கப்படும் இவ்விரு படங்களும் தான் தெலுங்கு மட்டுமின்றி தமிழிலும் எதிர்பார்க்கப்படும் படங்கள்.


நான் ஈ, மஹதீரா, மரியாதை ராமன்னா போன்ற வெற்றிப் படங்களின் இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில் பிரம்மாண்ட படமாக மே 15ல் வெளியாகவிருக்கிறது பாகுபலி படம்,

இப்படம் மதன் கார்க்கியின் வசனத்தில் தமிழிலும் டப் செய்யப்பட்டு ஒரே நேரத்தில் இரு மொழிகளிலும் வெளியாகவிருக்கிறது.

நடிகை அனுஷ்கா, ராணா, பிரபாஸ், தமன்னா, நாசர் மற்றும் சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வரலாற்று காவியமாக உருவாகிவருகிறது பாகுபலி.
இந்த படம் 175 கோடிக்கு மேல் பட்ஜெட்டில் உருவானதாம்.
கீரவாணி இசையமைக்க, கோட்டகிரி வெங்கடேஷ்வரராவ் எடிட்டிங்கில் படம் வெளியாக தயார் நிலையில் இருக்கிறது.


குனசேகர் இயக்கத்தில் வெளியாகவிருக்கும் இன்னொரு படம் ருத்ரமாதேவி. தமிழ் மற்றும் தெலுங்கு என்று இரு மொழிகளிலும் முதல் முறையாக 3 டி- யில் வெளிவரும் வரலாற்றுத் திரைப்படம்.

நடிகை அனுஷ்கா, அல்லு அர்ஜூன், ராணா, பிரகாஷ்ராஜ், நித்யாமேனன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

ஏப்ரல் 24 ம் தேதி வெளியாகவிருக்கும் இதன் தமிழ் பட வெளியீட்டு உரிமையை தேனாண்டாள் பிலிம்ஸ் பெற்றிருக்கிறது.

மேலும் 50 கோடியில் உருவாகும் இப்படம் கதாநாயகியை மையப்படுத்தி இந்தியாவில் வெளியாகும் மெகா பட்ஜெட் படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் இளையராஜா இசையமைக்க, தோட்டா தரணி கலையில் ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங்கில் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது ருத்ரமாதேவி படம் .

 

  11 Mar 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்