Home  |  நாட்டு நடப்பு

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்தாகிறது..?

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்தாகிறது..?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவை அடுத்து அ.தி.மு.க இரண்டாக பிரிந்து சசி தலைமை,பன்னீர் தலைமை என செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ஜெயலலிதா இறந்ததால் காலியாக உள்ள அவரது தொகுதியான ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் 12 ம் தேதி இடைத்தேர்தல் நடக்கவுள்ளது.

இதில் சசி.., அணி சார்பில் டீ.டீ.வி.தினகரனும்,பன்னீர் அணி சார்பில் மதுசூதனும் போட்டியிடுகின்றனர்.தி.மு.க..,தே.மு.தி.க..,கம்யூனிஸ்ட் கட்சிகளும் போட்டியிடுகின்றன.

மேலும் பா.ஜ.க..,வும் காலத்தில் குதித்து அதன் வேட்பாளராக திரைப்பட இயக்குனரும் இசை அமைப்பாளருமான கங்கை அமரனை காலத்தில் இறக்கியுள்ளது.

இந்தநிலையில் வெற்றிக்கு முக்கிய பங்கு வகிக்கும்
அ .தி.மு.க..,சின்னமான இரட்டை இலையை கைப்பற்ற பன்னீர்,சசி என இரு அணிகளும் தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டனர்.

இரு தரப்பு வாதத்தையும் கேட்டுக்கொண்ட ஆணையம் சின்னத்தை முடக்குவதாக அதிரடியாக அறிவித்தது.மேலும் கட்சி பெயரையோ,சின்னத்தையோ பயன்படுத்தக்கூடாது என உத்தரவிட்டது.

இதனால் சின்னத்தின் பலத்தை நம்பி களமிறங்கிய தினகரன்,கட்சியையும் சின்னத்தையும் தேர்தல் ஆணையம் முடக்கியதால் பெரும் விரக்தியில் உள்ளார்.

கட்சிப் பெயரும் இல்லை… சின்னமும் இல்லை… இனி, தினகரன் கையிலெடுக்கப் போகும் ஒரே ஆயுதம் பணம். எப்படியும் ஜெயித்தாக வேண்டும் என்பதற்காக பணத்தை தொகுதிக்குள் இறக்க ஆரம்பிப்பார்.

அதைத்தான் பிஜேபி-யும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறது. அப்படி ஆர்.கே.நகர் முழுக்க பணம் பட்டுவாடா செய்யப்படுகிறது என்பதை ஆதாரத்துடன் பிடிக்க வேண்டும் என்பதற்காக காத்திருக்கிறது.

ஏற்கனவே அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதிகளில் பணப் பட்டுவாடா என்பது பெரிய பூதாகரமாக வெடித்தது. அதையே காரணமாக வைத்துதான் தேர்தல் நிறுத்தப்பட்டது.

இப்போதும் ஆர்.கே.நகரில் அதே ஃபார்முலாவில் பணப் பட்டுவாடா என்ற காரணத்தை வைத்து தேர்தலை நிறுத்திவிடலாம் என்பதுதான் பிஜேபி போடும் திட்டம் என்கிறார்கள்.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தரப்பில்தான் அதிகளவில் பணப் பட்டுவாடா செய்யப்பட்டது. அதில் அரவக்குறிச்சியும், தஞ்சாவூரும் கேட்கவே வேண்டாம். தேர்தல் ஆணையத்துக்குப் போன புகாரை தொடர்ந்துதான் அங்கே தேர்தல் நிறுத்தப்பட்டது.

இப்போது ஆர்.கே.நகரில் அதையெல்லாம் விஞ்சும் அளவுக்கு பணத்தை இறக்க தினகரன் தரப்பில் முடிவுசெய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே ஆர்.கே.நகரில் ஒரு ரவுண்டு பணம் கொடுத்து முடித்துவிட்டார்கள்.

சின்னம் இல்லை என்றதும் இப்போது பணம் அடுத்த ரவுண்டு விளையாட ஆரம்பிக்கும். யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு ஆர்.கே.நகரில் பணம் கொட்டப் போகிறது.

அதையெல்லால் உடனுக்குடன் தேர்தல் ஆணையத்துக்குத் தெரியப்படுத்த எல்லா ஏற்பாடுகளையும் செய்துள்ளது பா.ஜ.க..,அதிகளவு பணப் புழக்கம் இருப்பது உறுதியானால் தேர்தல் நிறுத்தப்படும்.

பிஜேபி-யை பொருத்தவரை, தமிழகத்தில் இனி தேர்தல் என்று நடந்தால், அது தங்களுக்குச் சாதகமான தேர்தலாக மட்டுமே இருக்க வேண்டும் என நினைக்கிறது.

இப்போது பிஜேபி வேட்பாளராக கங்கை அமரன் போட்டியிட்டாலும் அவரால் ஜெயிக்க முடியாது. இன்னும் சொல்லப்போனால் டெபாசிட் வாங்குவதே கஷ்டம்.

அதற்கு தேர்தலையே நிறுத்திவிட்டால் பரவாயில்லை என்பதுதான் பா.ஜ.க.வின்
எண்ணமாக உள்ளது.

R.K.Nagar Election Cancelling
  24 Mar 2017
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பெரும் விபத்தில் இருந்து அதிருஷ்டவசமாக காயமின்றி தப்பினார் சுரேஷ் ரெய்னா
அனிதாவின் தற்கொலையின் பின்னணியில் முக்கிய தமிழ் பெண் பிரபலம்!! வெளியானது இரகசியம்..
மனசெல்லாம் வலிக்குது இந்த வீடியோவைப் பார்க்கும்போது !
தற்கொலையல்ல கொலை: ‘என் கையில் ஒரு பந்து இருக்கிறது, அதை வைத்தே ஆட்சியை கலைப்பேன்’ என்று சொன்ன ஸ்டாலின்
ஓ.பி.எஸ்.சை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி போட்டி?அதிர்ச்சியில் அதிமுக தொண்டர்கள்!
பாலியல் பலாத்கார வழக்கில் தண்டிக்கப்பட்ட சாமியாருடன் கோலி என்ன செய்கிறார் தெரியுமா! வைரலாகும் வீடியோ
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கட்சி பதவி பறிப்பு: டிடிவி தினகரன் அறிவிப்பு
பேரறிவாளனுக்கு திருமணம்
இன்று பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுவாரா ஆளுநர்?
சதிகார ஜடேஜாவை ஹர்திக் பாண்ட்யா என்ன செய்தார் தெரியுமா?