Home  |  அறுசுவை

இறால் முருங்கைக்காய் குழம்பு (Shrimp Regal Drumsticks Curry)

தேவையானவை:

 

இறால் - 1 /2 கிலோ

சின்ன வெங்காயம் - 100 கிராம்

பூண்டு - 10 பல்

சீரகம் - 1 /2  டீஸ் ஸ்பூன்

சோம்பு,கடுகு - 1 /2  டீஸ் ஸ்பூன்

தேங்காய் எண்ணெய் - 50 மில்லி

கறிவேப்பிலை - ஒரு கொத்து

மஞ்சள் பொடி - கொஞ்சம்

புளி - எலுமிச்சை அளவு

தேங்காய் - 2 டீஸ் ஸ்பூன்

இஞ்சி - சிறு துண்டு

முருங்கைகாய் - 1

பீர்க்கங்காய் - 1

தக்காளி - 2

உப்பு - தேவையான அளவு

மிளகாய்ப் பொடி - 2 டீஸ் ஸ்பூன்

மல்லிப் பொடி - 2 டீஸ் ஸ்பூன்

 

செய்முறை:

 

1.முதலில் ஐந்து வெங்காயம், தேங்காய்,கால் டீஸ் ஸ்பூன் சீரகம் வைத்து நைசாக அரைக்கவும். இறாலை தோல் நீக்கி நன்கு சுத்தம் செய்யவும். வெங்காயம்,பூண்டு இஞ்சி,முருங்கை,பீர்க்கங்காய், தக்காளி ஆகியவற்றை நறுக்கிக்கொள்ளவும்.

 

2.ஒரு வானொலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், கடுகு, சீரகம், சோம்பு போடவும். கடுகு வெடித்ததும் அதில் நறுக்கிய வெங்காயம்,பூண்டு ,இஞ்சி கொஞ்சம் உப்பு போட்டு நன்கு வதக்கவும். பிறகு அதில் முருங்கைக்காய், பீர்க்கங்காய்,தக்காளி போட்டு2 நிமிடம் வதக்கவும்.

3.அதனுடன் இறாலைப் போட்டு வதக்கிய பின், அதில் மிளாகாய் பொடி, மல்லி பொடி,மஞ்சள் பொடி போட்டு வதக்கவும்.பின் புளியைக் கரைத்து ஊற்றி, வேண்டிய அளவு நீர் ஊற்றி,உப்பு போட்டு கொதிக்கவிடவும்.அனலை சீராக வைக்கவும்.காய் வெந்தபின் கறிவேப்பிலையை எண்ணெயில் பொறித்துப் போட்டு இறக்கவும். 

Shrimp Regal Drumsticks Curry

Ingredients for Shrimp Regal Drumsticks Curry:

 

Shrimp-1/2 Kg

Small Onion-100 G

Garlic-10 Flakes

Cumin-1/2 Tsp

Fennel, Mustard-1/2 Tsp

Coconut Oil-50 ml

Curry Leaves-1 Bunch

Turmeric Powder-Little

Tamarind-Lemon Size

Coconut-2 Tsp

Ginger-Small Piece

Drumstick-1

Ridge Gourd-1

Tomato-2

Salt-as Needed

Chilly Powder-2 Tsp

Coriander Powder-2 Tsp

 

Procedure to make Shrimp Regal Drumsticks Curry:

 

1. Grind 5 onion, coconut and 1/4 tea spoon of cumin very finely. Peel the shrimp and wash in water. Chop the onion, ginger, garlic, drumstick, ridge gourd and tomato.

2. Heat oil in a pan, add mustard, cumin and fennel. Then add chopped onion, ginger, garlic and salt and saute well. Then add drumstick, ridge gourd, tomato and fry for 2 minutes.

3. Then add shrimp and fry for a while and then add chilly powder, coriander powder, turmeric powder and saute well. Then add tamarind juice, water and salt and let to boil. Allow medium flame. Finally garnish with curry leaves and remove from flame.

 

 

 

  14 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!