Home  |  அறுசுவை

இறால் சிப்ஸ்(Steamed Chips)

தேவையானவை :

 

நன்கு கழுவி சுத்தம் செய்த இறால் - ஒரு கப்

இஞ்சி விழுது - ஒரு டீஸ்ஸ்பூன்

மஞ்சள் தூள் - கால் டீஸ்ஸ்பூன்

மிளகுத்தூள் - ஒரு டீஸ்ஸ்பூன்

எண்ணெய் - தேவையான அளவு

பூண்டு விழுது - ஒரு டீஸ்ஸ்பூன்

அஜினோமோட்டோ - அரை டீஸ்ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

ரஸ்க் தூள் -தேவையான அளவு

அடித்தவெள்ளை கருமுட்டை - தேவையானளவு

 

செய்முறை :

 

1 .முதலில் ஒரு பாத்திரத்தில் நன்றாக கழுவி சுத்தம் செய்த இறாலை போடவும்.அதனுடன் மஞ்சள்தூள்,உப்பு,இஞ்சிவிழுது,பூண்டு விழுது,அஜினோமோட்டோ,மிளகுத்தூள் ஆகியவற்றை போடவும்.

2. இந்த கலவையை லேசாக பிசறி ஒரு மணி நேரம் ஊறவைக்கவும்.அதன் பின்னர் ஒரு பாத்திரத்தில் முட்டை வெள்ளைக்கருவை போட்டு அடிக்கவும்.

3.ஒரு தட்டில் ரஸ்க் தூளை போடவும்.அதன் பின்னர் மசாலா கலந்து ஊறிய ஒரு இறாலை எடுத்து லேசாக கசக்கவும்.லேசாக நசுக்கிய இறாலை அடித்த வெள்ளைகரு முட்டையில் நனைக்கவும்.

4.வெள்ளைக்கரு முட்டையில் நனைத்த இறாலை ரஸ்க் தூளில் போட்டு பிரட்டவும்.அதன் பின்னர் அடுப்பில் வாணலியை வைத்து சூடாக்கவும்.

5.எண்ணெய் நன்றாக சூடான பின்னர் அதில் மசாலா கலந்து பாண் தூளில் போட்டு பிரட்டிய இறாலை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரிக்கவும்.

6.பொரித்த பின்னர் சுத்தமான சுவையான சத்தான இறால் சிப்ஸ் தயாராகிவிடும்.

  15 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!