Home  |  அறுசுவை

ரவா கிச்சடி அவசர சமையல் !!

ரவா கிச்சடி அவசர சமையல் !!

தேவையான பொருட்கள் :

ரவை- 2 கப்

வெங்காயம்- 1

 

தக்காளி-1

பச்சைமிளகாய்-2

 

இஞ்சிபூண்டு விழுது-அரை டேபிள் ஸ்பூன்

கேரட்,பீன்ஸ் தலா -அரை கப் 

 

பச்சைப்பட்டாணி -கால் கப்

பூண்டு- ஆறு பற்கள்

 

கொத்தமல்லி- சிறிது

எண்ணெய்- கால் கப்

 

உப்பு- தேவைக்கேற்ப

மஞ்சள் பொடி- அரை டேபிள் ஸ்பூன் 


தாளிக்க தேவையானவை :

 

கடுகு- அரை டேபிள் ஸ்பூன் 

கறிவேப்பிலை-ஒரு கொத்து 


சோம்பு- அரை டேபிள் ஸ்பூன் 

பட்டை,கிராம்பு,பிரிஞ்சி இலை- 2 


காய்ந்தமிளகாய்-இரண்டு 


செய்முறை :


1.வெங்காயம்,தக்காளி,பச்சைமிளகாய்,கேரட்,பீன்ஸ் ஆகியவற்றை பொடியாக நறுக்கி வைக்கவும்.


2.ரவையை இலேசாக வறுத்து ஒரு தட்டில் கொட்டவும்.


3.கடாயில் எண்ணெயை காயவைத்து பட்டை ,கிராம்பு,பிரிஞ்சி இலை போட்டு வறுத்து வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.


4.பின்பு அதில் இஞ்சிபூண்டு விழுது,பச்சை மிளகாய் நறுக்கிய பூண்டு மற்றும் காய்கறிகளை போட்டு வதக்கவும்.


5.அதன் பிறகு தக்காளியைப் போட்டு நன்கு வதக்கவும்.


6.பின்பு மஞ்சத்தூள் உப்புத்தூளைப் போட்டு கலந்து ஐந்து கப் நீரை ஊற்றி கொதிக்க விடவும்.


7.அதன் பின்பு ரவையைப் போட்டு அடிபிடிக்காமல் நன்கு கிளறவும்.


8.ரவை நன்கு வெந்ததும் கொத்தமல்லியைத் தூவி சூடாக பரிமாறவும்.
இப்பொழுது சுவையான ரவா கிச்சடி தயார்.

  17 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!