Home  |  திரை உலகம்

பசங்க, கோலிசோடா நடிகர்கள் நடிக்கும் வஜ்ரம்... இது கல்வி உரிமை பற்றிய படமாம்....

விஜயகாந்த் நடித்த “உளவுத்துறை” அருண்விஜய் நடித்த "ஜனனம்" போன்ற படங்களை இயக்கிய S.D.ரமேஷ்செல்வன், அடுத்து இயக்கி வரும் படம் “வஜ்ரம் “.  


இந்த படத்தை ஸ்ரீ சாய்ராம் பிலிம் பேக்டரி பட நிறுவனம் சார்பாக P.ராமு தயாரிக்கிறார். “வஜ்ரம் “ படத்தில் பசங்க, கோலிசோடா  வெற்றிப்படங்களில் நடித்த ஸ்ரீராம், கிஷோர், பாண்டி, குட்டி மணி ஆகிய நால்வரும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள்.


கதாநாயகியாக பவானிரெட்டி  என்ற புதுமுகம் அறிமுகமாகிறார். இவர்கள் தவிர ஜெயபிரகாஷ், தம்பிராமையா, மயில்சாமி, மூணார் ரமேஷ், நந்தா சரவணன், சனா, நாகு ஆகியோரும் நடிக்கிறார்கள். 


இந்த படம் குறித்து அதன் இயக்குனர் கூறுகையில், இன்று உலகம்  முழுக்க பிரச்சனையாகி வருவது வருங்காலத்தினரின் அடிப்படைத் தேவையான கல்வி பற்றித்தான். இன்று அங்கீகரிக்கப்பட்ட கொள்ளேயே கல்விதான் இதை தான் இந்த படத்தில் சொல்கிறோம்.  கேட்டு வாங்கவேண்டிய உரிமை கொண்ட கல்வியை பணம் கட்டி பெற்றுக் கொண்டிருக்கிற அவலம் தான் இன்றைய தலைமுறையினரின் பிரச்னை.


இந்த படத்தில் இதை கமர்ஷியல் கலந்து அதிரடி படமாக உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். சென்னை, மூணார், சாலக்குடி மற்றும் அசாம் மாநிலத்திலும் படப்பிடிப்பு நடக்கிறது என்றார் இயக்குனர்.   

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்