Home  |  திரை உலகம்

ராமானுஜன் ( Ramanujan )

ராமானுஜன் ( Ramanujan )

Movie Name: Ramanujan ராமானுஜன்
Hero: Abhinay Vaddi
Heroine: BHAMA
Year: 2014
Movie Director: GNANA RAJASEKARAN
Movie Producer: Camphor Cinema
Music By: RAMESH VINAYAGAM


கும்பகோணத்தைச் சேர்ந்த ஸ்ரீனிவாச ராமானுஜன் கணித மேதை.
எப்படி ஒருவரால் இந்த அளவிற்குப் புத்திசாலியாக இருக்க முடிந்தது என்ற ஆச்சரியம் படம் பார்க்கும் போது நமக்கு ஏற்படுகிறது. சிறு வயதிலேயே கேள்வி கேட்டுப் பிரமிக்க வைத்த அந்த ராமானுஜன் 1920ல் இறக்கும் தருவாயில் கூட 'மார்க் தீட்டா' என்ற கணிதத்தை கண்டு பிடித்தார். ஒரே வழியில் அவர் விடை கண்டு பிடித்தது எப்படி என்பதை நாம் கண்டு பிடிக்கவே 82 ஆண்டுகளில் ஆகியுள்ளது. ஆம், 2012ல்தான் ராமானுஜன் கண்டுபிடித்த 'மார்க் தீட்டா' வுக்கு வழி வகைகளை கண்டுபிடித்திருக்கிறார்கள். ராமானுஜன் கணித முறையான 'கிரிப்டாலாஜி' தான் இன்று பல்வேறு அறிவியில் தொழில்நுட்பங்களில் பயன்பட்டு வருகிறது.

கும்பகோணத்தில் ஏழை பிராமணக் குடும்பத்தில் ஸ்ரீனிவாசனுக்கும், கோமளத்தம்மாளுக்கும் மகனாகப் பிறந்தவர் ராமானுஜன். சிறு வயதிலேயே கணிதத்தின் மீது தீராத காதல் கொண்டவர். மற்ற பாடங்களில் பெரிதாக மதிப்பெண் வாங்கவில்லையென்றாலும் கணிதத்தில் மட்டும் நூற்றுக்கு நூறு மதிப்பெண் வாங்கும் திறமை கொண்டவர். அதுவே அவருடைய அப்பாவுக்கு கோபத்தை ஏற்படுத்துகிறது. மகன் ராமானுஜன் ஒரு டிகிரி கூட வாங்காமல் இருக்கிறானே என அப்பா கோபப்படுகிறார். அதனால் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டே செல்கிறான் ராமானுஜன். பின்ன திரும்பி வரும் அவனுக்கு திருமணம் செய்து வைக்கிறார்கள். திருமணத்திற்குப் பின் எப்படியோ சிபாரிசால் சென்னை துறைமுகத்தில் வேலைக்குச் சேர்கிறான். அங்கு அவனது கணிதத் திறமையைப் பார்த்த சேர்மன், அவனை லண்டனுக்கு அனுப்பி மேற்படிப்பு படிக்க வைக்க முயற்சிக்கிறார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக கணிதப் பேராசிரியர் ஹார்டி முயற்சியால் ராமானுஜன் அங்கு சென்று மேற்படிப்பு படிக்கிறார். பல கணித வழி வகைகளைப் புதிது புதிதாக கண்டுபிடிக்கிறார். ஹார்டியின் ஆதரவால் 'எஃப்ஆர்எஸ்' பட்டமும் பெறுகிறார். சரியான உணவு வகை இல்லாமல் அவர் உடல் நலம் குன்றுகிறது.

சிறு வயது முதலே உடல் நிலை சரியில்லாத காரணத்தால் அவருக்கு அடிக்கடி உடல் நலன் பாதிக்கப்படுவது வழக்கம். பின்னர் இந்தியாவுக்கே திரும்புகிறார். ஆனாலும், உடல் நிலை மோசமடைந்து 33 வயதிலேயே அகால மரணமடைகிறார். சாஸ்திர வழக்கப்படி சீமைக்குச் செல்லக் கூடாது என்பதையும் மீறி அவர் அங்கு சென்றதாலும், திரும்பி வந்த பின்னும் பிராயச்சித்தம் செய்யவில்லை என்பதாலும் அதனால் தங்களுக்கும் தோஷம் ஏற்பட்டு விடும் என்று கருதி ராமானுஜனின் உறவினர்கள் அவரது இறுதிச் சடங்கில் கூட கலந்து கொள்ளாமல் போய்விடுகிறார்கள். இதுதான் இந்த கணித மேதையின் கண்ணீருடன் முடிந்த வாழ்க்கை வரலாறு.

ஸ்ரீனிவாச ராமானுஜனாக புதுமுகம் அபிநவ் வாடி. கணித மேதை ராமானுஜன் என்றாலே இவர் முகம்தான் நமக்கு ஞாபகத்திற்கு வரும். ராமானுஜன் மனைவியாக பாமா. நிஜ வாழ்க்கையில் ராமானுஜன் சிறு வயதுப் பெண்ணைத்தான் திருமணம் செய்து கொண்டார் என படித்துள்ளோம். அதை அப்படியே கண்முன் காட்டியுள்ளார் பாமா. கணவன் மீது கொண்ட காதலில் ஆகட்டும், மாமியார் மீது கோபப்பட்டாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் தனக்குள்ளே வைத்துக் கொள்வதில் ஆகட்டும், பாமாவின் நடிப்பு பாஸ் மார்க்கையும் தாண்டிவிட்டது. ராமானுஜனின் அம்மாவாக சுகாசினி. மகனின் மீது அதிக பாசம் கொண்ட ஒரு அம்மா. மகனுடைய கணிதத் திறமைக்காக கணவனிடம் சண்டை போடும் அளவிற்கு பாசம் வைத்திருப்பவர். மருமகள் வந்த பிறகும் மகனுக்காக தான் மட்டுமே செய்ய வேண்டும் என்று நினைக்கும் அம்மா. ராமானுஜனின் அப்பாவாக நிழல்கள் ரவி, கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழக கணிதப் பேராசிரியர் ஹார்டியாக கெவின் மெக்கோவன், சந்திர மஹலனோபிஸ் ஆக அப்பாஸ், சிறு வயது ராமானுஜனாக அன்மோள், லிட்டில் உட்டாக மைக்கேல் லீபர், நெல்லூர் கலெக்டராக சரத் பாபு, சிங்காரவேலு முதலியாராக ராதாரவி, நாராயண ஐயராக ஒய்ஜி.மகேந்திரா, கிருஷ்ண ராவாக மனோபாலா, சத்யப்ரியா ராயராக தலைவாசல் விஜய், சேஷு ஐயராக ராஜா கிருஷ்ணமூர்த்தி,

  14 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்