Home  |  திரை உலகம்

இறுதி கட்ட படப்பிடிப்பில் கணித மேதை ராமானுஜத்தின் வரலாற்று படம் !!!

பெரியார் படத்தை எடுத்த இயக்குனர் ஞானராஜசேகரன் தற்போது தமிழக கணித மேதை ராமானுஜத்தின் வாழ்க்கை வரலாற்றை சொல்லும் ராமானுஜன் என்ற படத்தை எடுத்து வருகிறார். 

 

இந்த படத்தில் கணித மேதை ராமானுஜனாக அபிநய் நடிக்கிறார். அவரது மனைவியாக பாமாவும், தாயாக சுஹாசினியும் நடிக்கிறார்கள். படத்திற்கு ரமேஷ் விநாயம் இசை அமைத்துள்ளார். ராமானுஜன் படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்புகள் வேகமாக நடந்து வருவதாக படக்குழு தெரிவித்துள்ளது. 

 

கடந்த டிசம்பர் 22ந் தேதி கணித மேதை ராமாஜனுத்தின் 126வது பிறந்த நாளாகும். அதை படப்பிடிப்பு குழுவினர் கொண்டாடினார்கள். பிறகு இயக்குனர் ஞானராஜசேகரன், ராமானுஜம் படம் குறித்து செய்தியாளர்களிடையே கூறியதாவது, 

 

சிறு வயதிலேயே ராமானுஜன் கணித மேதையாக இருந்தார். அவரது கணித திறன் அபாரமாக இருந்தது. கணிதத்தில் பெரிய பயிற்சி எதுவும் இல்லாமல் வியக்கத்தக்க கண்டுபிடிப்புக்களை நிகழ்த்தினார். நம்பர் தியரி, முடிவில்லாத தொடர், பின்னம் ஆகியவற்றை தனது கணித பகுப்பாய்வில் கண்டுபிடித்தார். ஐடெண்ட்டீஸ் மற்றும் அஇக்குவேஷனிலும் தானாகவே 3900 கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி குறித்து வைத்திருந்தார். இப்போது அது எல்லாமே சரி என்று மிகப்பெரிய கணித நிபுணர்களால் நிரூபிக்கப்பட்டுள்ளது.

 

ஆனால் அவர் வாழ்ந்த காலத்தில் அவர் அங்கீகரிக்கப்படவில்லை. தனது கண்டுபிடிப்புகளை சிலுவையை போல சுமந்து திரிந்தார். சமூகம் அவரை பைத்தியக்காரன் என்று விமர்சித்தது. கல்வி நிலையங்கள் அவரை அங்கீகரிக்கவில்லை. அவரின் இந்த பாடுகளும், துன்பங்களும்தான் அவரை பற்றி படம் எடுக்கத் தூண்டியது. படத்தின் 90 சதவிகித படப்பிடிப்புகள் முடிந்து விட்டது. இறுதி கட்ட பணிகள் நடந்து வருவதாக அவர் தெரிவித்தார். 

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்