Home  |  திரை உலகம்

சினிமாவிற்கு வந்து 40 ஆண்டுகள் நிறைவு லிங்கா படபிடிப்பில் கேக் வெட்டி கொண்டாடிய ரஜினி !!

நடிகர் ரஜினிகாந்த் சினிமாவிற்கு வந்து 40 ஆண்டுகளானதை கொண்டாடும் விதமாக, லிங்கா படப்பிடிப்புத் தளத்தில் கேக் வெட்டிக் கொண்டாடினார்.


கடந்த 1975-ம் ஆண்டு இயக்குனர் சிகரம் கே பாலச்சந்தர் இயக்கத்தில், அபூர்வ ராகங்கள் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் ரஜினிகாந்த். 


அதன் பின்னர் அவர் நடித்த படங்களில், அவரது நடிப்பும், அவரது ஸ்டைலும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதால், தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக இன்று வரை திகழ்ந்து வருகிறார்.  


இந்திய அளவில் அவரை அனைத்து மொழி திரைத்துறையினரும் கொண்டாடுகிறார்கள். அவரது படங்களுக்கு உலக அளவில் வரவேற்பு கிடைத்து வருகிறது. 


திரையுலக வாழ்க்கையில் 40-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ரஜினிக்கு லிங்கா படக்குழுவினர் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். இதைக் கொண்டாடும் வகையில் லிங்கா படப்பிடிப்புத் தளத்துக்கு பெரிய கேக் வரவழைக்கப்பட்டது. அதை ரஜினி வெட்டி, படக்குழுவினருக்கு ஊட்டினார். 


இந்த சிறப்பு நிகழ்ச்சியில், இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார், நடிகர்கள் விஜயகுமார், ஆர் சுந்தரராஜன், நடிகை சோனாக்ஷி சின்ஹா, தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்