Home  |  திரை உலகம்

ரஜினியின் சம்பளம் 240 கோடி; ஆச்சர்யத்தில் இந்திய திரையுலகம்

ஹன்ஸ்ராஜ் சக்சேனா தொடங்கவுள்ள புதிய படத்தில் நடிக்க ரஜினிக்கு ரூ 240 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக ஒரு நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியால் இந்திய திரையுலகமே ஆச்சர்யத்தில் ஆழ்ந்து கிடக்கிறது. சில நாட்களுக்கு முன் "ஏக் தா டைகர்" பட வெற்றியைத் தொடர்ந்து சல்மான் கான் "100 கோடி" சம்பளம் பெறப்போவதாக தகவல் வெளியானது. அந்த ஆச்சர்யம் அடங்குவதற்கு முன்பே. நம் "சூப்பர் ஸ்டார்" அதை விட இரண்டு மடங்கு சம்பளம் பெறப்போவது மிகவும் சந்தோஷமான, அதே சமயம் மிகவும் ஆச்சர்யமான ஒன்று தான். ஒட்டு மொத்த இந்தியாவிலேயே அதிக வசூலை ஈட்டிய படம் ரஜினி நடித்த எந்திரன். அதற்கு முன்பு சிவாஜி, வசூலில் பல சாதனைகளைப் படைத்து இந்திய திரையுலகினரை வியக்க வைத்தது. இப்போது ரஜினி நடித்துவரும் கோச்சடையான் படம் உலகம் முழுவதும் ஹாலிவுட் படத்துக்கு நிகராக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரஜினிக்கு ரூ 240 கோடியை சம்பளமாகத் தர சக்சேனா முன்வந்துள்ளது பற்றி அவரிடம் கேட்டதற்கு, "இந்த திட்டம் குறித்து இப்போதே கருத்து சொல்வதாக இல்லை" ரஜினியிடம் பேசிக் கொண்டிருக்கிறோம் என்றார்.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்