Home  |  திரை உலகம்

மீண்டும் ரஜினிகாந்துடன் இணைகிறார் நயன்தாரா !!

நான்காவது முறையாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தில் நடிக்க போகிறாராம் நயன்தாரா.


பி.வாசு இயக்கத்தில், சந்திரமுகி படத்தில் முதன் முதலில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த நயன்தாரா, அடுத்ததாக ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த சிவாஜியில் ஒரு பாடல் காட்சியில் ரஜினியுடன் நடனமாடினார். அதன்பிறகு பி.வாசு இயக்கத்தில் ரஜினி நடித்த குசேலன் படத்தில் ரஜினி நடிகராகவே நடிக்க, நயன்தாராவும் நடிகை வேடத்திலேயே நடித்திருந்தார்.


இந்நிலையில், கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் தற்போது நடித்து வரும் லிங்காவிலும் நடிக்க போகிறாராம் நயன். 


லிங்காவில் ஏற்கனவே ரஜினிக்கு ஜோடியாக இந்தி நடிகை சோனாக்ஷி சின்ஹா, அனுஷ்கா ஆகியோர் இருந்தபோதும், ஒரு முக்கியத்துவம் வாய்ந்த பாடல் காட்சியில் ரஜினியுடன் தோன்றுகிறாராம் நயன்தாரா.


எதிர்நீச்சல் படத்தை அடுத்து ஒரு பாடலுக்கு நடனம் ஆடுவதில்லை என்று கட்டுப்பாட்டை கடைபிடித்து வரும் நயன்தாரா, ரஜினி படம் என்பதால் கட்டுப்பாட்டை காற்றில் பறக்க விட்டுவிட்டாராம்.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்