Home  |  திரை உலகம்

கோச்சடையானால் நஷ்டம் வந்தால் !! நஷ்ட ஈடு தரப்படும் !! ரஜினிகாந்த் அறிவிப்பு !!

தனது இரண்டாவது மகள் செளந்தர்யா இயக்கத்தில், ரஜினிகாந்த் நடித்துள்ள அனிமேஷன் படம் கோச்சடையான். 


சுமார் 125 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த படம் பேரம் படியாமல் பல மாதங்களாக தயாரிப்பளர்களுக்கும், தியேட்டர் அதிபர்களுக்குமிடையே பேச்சுவார்த்தை நீடித்துக்கொண்டே இருந்தது. 


குறிப்பாக, கோச்சடையான் படத்தால் தியேட்டர்களில் நஷ்டம் ஏற்பட்டால், யார் பொறுப்பு என சில தியேட்டர்காரர்கள் தயாரிப்பு நிறுவனத்திடம் கேட்டுள்ளார்களாம். 


இதற்கிடையே வங்கி லோன் பிரச்சினை இன்னொரு பக்கம். ஆக, மே 9-ந்தேதி வெளியாகயிருந்த கோச்சடையானை பின்னர் 23-ந்தேதிக்கு மாற்றினர். இந்த நிலையில். வங்கி பிரச்சினை முடிவுக்கு வந்தபோதும், தியேட்டர்காரர்கள் பிரச்சினைதான் சுமூக முடிவை எட்டாமல் இருந்திருக்கிறது. 


தியேட்டர்காரர்களின் மனநிலையை புரிந்து கொண்ட ரஜினி, இனியும் படத்தை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டால் சரிவராது என்று முடிவுக்கு வந்தாராம்.


அதையடுத்து, தியேட்டர் உரிமையாளர்களை சந்தித்து, ஒருவேளை கோச்சடையான் உங்களுக்கு நஷ்டத்தை கொடுத்தால், லிங்காவைத் தொடர்ந்து நான் நடிக்கும் படத்திற்கு வாங்கும் 20 கோடி சம்பளத்தை நஷ்டப்பட்டவர்களுக்கு பகிர்ந்தளித்து விடுகிறேன் என்று வாக்குறுதி அளித்திருக்கிறாராம். 


இதனால், படத்தை வெளியிடும் வேலையில் அதிரடியாக களத்தில் இறங்கி விட்டார்களாம் தியேட்டர் அதிபர்கள்.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்