Home  |  திரை உலகம்

ராஜா ராணி திரை விமர்சனம் !!!

நடிகர்கள் : ஆர்யா, ஜெய்

 

நடிகைகள் : நயன்தாரா, நஸ்ரியா

 

இயக்குனர் : அட்லி

 

இசை : ஜி.வி.குமார்

 

ஜோன் என்ற ஆர்யாவுக்கும் ரெஜினா என்ற நயன்தாராவுக்கும் இடையில் நடக்கும் திருமணத்தோடு படம் ஆரம்பிக்கிறது. ஆர்யாவும், நயன்தாராவும் ஒருவரை ஒருவர் பிடிக்காமல் தான் திருமணம் செய்து கொள்கின்றார்கள் என்பது அவர்களின் கண் ஜாடைகளிலும், உடல் மொழிகளிலும் அழகாக நமக்கு புரிகிறது. நயன்தாரா தனது அப்பா சத்யராஜின் வற்புறுத்தலுக்காக திருமணம் செய்து கொள்கின்றார் என்பதை வலுவான கதையமைப்புடன் காட்டிய இயக்குநர், ஆர்யா ஏன் வேண்டா வெறுப்பாக திருமணம் செய்கின்றார் என்பதைக் காட்ட மறந்து விட்டார் போலும். 

 

நயன்தாரா ஏன் வேண்டா வெறுப்பாக கல்யாணம் செய்கின்றார் என்பதற்கு காரணமாக, அவருடைய பழைய காதல் கதையை காட்டுகிறார் இயக்குனர். இதில் பழைய காதலனாக வரும் ஜெய் கதாபாத்திரத்தை ஒரு பயந்தாங்கொள்ளி, கோணங்கித்தனம் கொண்டவராக மாற்றியமைத்திருக்கின்றார்கள். ஆனால், உண்மையிலேயே ஜெய் தான் பாடத்தில் மிகச் சிறப்பாக நடித்திருக்கின்றார். ஒவ்வொரு முறையும் வாடிக்கையாளரின் திட்டுதல்களையும், கலாய்ப்புக்களையும் கண்டு அவர் அஞ்சுவதும், புலம்புவதும் எதார்த்தம் கலந்த நகைச்சுவையாக இருக்கின்றது. இப்படியே நயன்தாராவின் பழைய காதல் கதை முடிந்தவுடன், ஆர்யாவுக்கும் ஒரு பழைய காதல் இருந்தது என்று சந்தானம் நயன்தாராவிடம் கதை சொல்ல ஆரம்பிக்கின்றார்.

 

ஆனால், அந்தக் காதல் கதையில் எந்தவித சுவாரசியமும், திருப்பங்களும் இல்லை. வழக்கமான கதையாகத்தான் வருகிறது. ரசிகர்களுக்கு இந்த காதல் கதையில் இருக்கும் ஒரு ஆறுதல் என்னவென்றால்

ஆர்யாவின் முன்னாள் காதலியாக நஸ்ரியா வருகிறார். அவர் காலையில் எழுந்து துள்ளாட்டம் போடுவதும், வீட்டிற்கு வந்து அமர்ந்திருக்கும் ஆர்யாவையும், சந்தானதையும் பார்த்ததும் வெட்கப்படுவதும் அழகோ அழகு.... அத்தனை அழகாய் காட்டி அந்த விபத்தை பார்க்கும் போது கலங்க வைக்கிறார். இந்த இரண்டு காதல் கதைகளும் முடிந்த பின்னர், படத்தின் சுவாரசியமும் முடிந்து விடுகிறது.அதன் பின்னர் ஆர்யாவுக்கும் நயன்தாராவுக்கும் இடையில் காதல் மலர இறுதிக் கட்டக் கதைவருகிறது. 

 

வழக்கம்போல் கிளைமேக்சில் நயன்தாரா நாடுவிட்டுப் போகின்றார் என்றும், விமான நிலையத்தில் பிரிவு என்றும் எடுத்திருக்கின்றார்கள். அங்கே மீண்டும் ஜெய்யைக் காட்டும் போது கொஞ்சம் நிமிர்ந்து உட்கார்ந்தால், ஜெய்யின் ஆரம்பக் கட்ட கதாபாத்திரத் தன்மையையே கெடுக்கும் வண்ணம் காட்சிகள் அமைத்திருக்கின்றார் இயக்குனர். காதல் தோல்விக்கு பின்னரும் இன்னொரு காதல் தொடரலாம் என நன்றாக முடித்து ஆர்யாவையும், நயன்தாராவையும் கடைசியில் ஒன்று சேர்த்து வைத்து படத்தை முடித்திருக்கின்றார்கள் சிறப்பாக முடித்திருக்கிறார்கள் படக்குழுவினர்.

 

 

சந்தானம்.. பல அழகான டைமிங் டயலாக்குகளால் படத்தை நிரப்பியிருக்கிறார். வலிய திணிக்காமல் இயல்பாய் இருந்திருப்பது படத்திற்கு சிறப்பு..

 

படத்தின் வித்தியாசமான காட்சி அமைப்புகளும், துல்லியமான ஒளியமைப்பும் அறிமுக இயக்குனர் அட்லீயிடம் ஏதோ விஷயம் இருக்கின்றது என்பதை உணர்த்துகின்றன.

 

நயன்தாராவின் தோழிகள் ஜெய்யை கலாய்ப்பது படத்தில் உச்ச கட்ட காமெடி.

 

படத்தில் நயன்தாராவின் அப்பாவாக வரும் சத்தியராஜ் கதைக்கு மேலும் பலம் சேர்க்கிறார்.

 

படத்தின் இன்னொரு பெரிய பலம் இசை. ஜி.வி.குமார். ரொமாண்டிக் காட்சிகளில் பின்னணி இசை சான்சே இல்ல ...... 

 

படம் முழுக்க குடிப்பது போன்ற காட்சிகளே வருவது, என்ன கலாச்சாரமோ தெரியவில்லை. அப்பா சத்யராஜ் பீர் குடிக்கின்றார் என்றால் மகள் நயன்தாராவும் மதுபானக் கடைக்கு தோழிகளோடு சென்று குடிக்கின்றார். வாட் அ பேமலி....

 

மொத்தத்தில் ராஜாராணி ... நிறைய காதல் ..... நிறைய காமெடி .....

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்