Home  |  அறுசுவை

ராகி இடியாப்பம் பிரியாணி(Ragi Idiyappam Biryani)

தேவையானவை :

 

ராகி இடியாப்பம் -1 பாக்கெட்

வெங்காயம் -2

தக்காளி -1

மஞ்சள்பொடி -அரைடீஸ்பூன்

இஞ்சிபூண்டு பேஸ்ட் -1 டீஸ்பூன்

கொத்தமல்லி -அரை கப்

புதினா -அரை கப்

பச்சைபட்டாணி -அரை கப்

பீன்ஸ் -10

பட்டைபொடி -அரை டீஸ்பூன்

கிராம்பு -1

மிளகாய்பொடி -1 டீஸ்பூன்

எண்ணெய் -3 டீஸ்பூன்

உப்பு -தேவைகேற்ப

பச்சைமிளகாய் -1

தயிர் -அரை கப் (கொழுப்பு நீக்கப்பட்டது)

 

செய்முறை :

 

1.முதலில் ஒரு பாத்திரத்தில் ராகிஇடியாப்பத்தை எடுத்து சிறிது நேரம் தண்ணீரில் ஊற வைத்து ஆவியில் வேகவைத்துக்கொள்ளவும்.வெங்காயம்,தக்காளி,கொத்தமல்லி,புதினா,பீன்ஸ் முதலியவற்றை சுத்தம் செய்து பொடிப்பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

 

2.மற்றொரு பாத்திரத்தில் பச்சைப்பட்டாணி,பீன்ஸை உப்பு போட்டு லேசாக வேக வைத்துக்கொள்ளவும். ஒரு அடிகனமான பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி அதில் கிராம்பு போட்டு தாளித்து பின் வெங்காயம்போட்டு நன்கு வதக்கவும். வெங்காயம் வதங்கியவுடன் இஞ்சி பூண்டு பேஸ்ட்,தக்காளி போட்டு வதக்கவும்.

 

3.பிறகு புதினா,வேகவைத்த பீன்ஸ்,பட்டாணி போட்டு வதக்கி மிளகாய்பொடி,மஞ்சள்பொடி,பட்டைபொடி போட்டு,பச்சை மிளகாயை நீளவாக்கில் கீறிப் போட்டு வதக்கவும். எல்லாம் நன்கு வதங்கியவுடன் தயிர், உப்பு சேர்த்து கொதிக்க விடவும். கலவை மிகவும் கெட்டியாக இருந்தால் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும். நன்கு கொதிக்கும் பொழுது வேக வைத்துள்ள ராகி இடியாப்பத்தைப் போட்டு நன்கு கிளறி கொத்தமல்லி துவி இறக்கவும்.

  15 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!