Home  |  திரை உலகம்

புதியதோர் உலகம் செய்வோம் ( Puthiyathor Ulagam Seivom )

புதியதோர் உலகம் செய்வோம் ( Puthiyathor Ulagam Seivom )

Movie Name: Puthiyathor Ulagam Seivom புதியதோர் உலகம் செய்வோம்
Year: 2014
Movie Director: Nithyanandam
Movie Producer: Sri Teja Films
Music By: Pravin Saivi


‘லஞ்சத்தை முதலில் வீட்டிலேயிருந்தே ஒழி…, நாடு தானாக திருந்தும்’ என்ற முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் பேச்சிலிருந்து இந்த ஒரு போதனையை மட்டும் உருவி கதையாக வடித்து படமாக கொடுத்திருக்கிறார்கள். அதுதான் ‘புதியதோர் உலகம் செய்வோம்’. நாலைந்து சிறுவர் சிறுமிகள்… அவர்களில் ஒரு குழந்தையின் அம்மாவுக்கு உடல் நிலை சரியில்லை. மருத்துவ செலவுக்கு வைத்திருந்த பணத்தை லஞ்சமாக கொடுத்துவிட்டு சிகிச்சை அளிக்கக் கூட முடியாமல் தவிக்கிறது குடும்பம்.

இந்த தகவலை அந்த குழந்தை கவலையோடு பகிர்ந்து கொள்ளும் போதுதான் தெரிகிறது. அந்த பணத்தை லஞ்சமாக வாங்கியதே இன்னொரு சிறுவனின் அப்பாதான் என்று. இப்படி ஒன்றாக திரியும் நான்கைந்து குழந்தைகளுக்கு மத்தியில் பெற்றோர்களாலேயே பிரச்சனை வர, அதை முறியடித்து லஞ்சம் வாங்கும் பெற்றோரை குழந்தைகள் எல்லாம் சேர்ந்து திருத்துவதுதான் படம். அந்த சின்ன குழந்தைகள் தங்கள் அப்பா அம்மாவுக்கு எதிராக பேசும் வசனங்களை அவரவர் வீட்டில் பேச ஆரம்பித்தால் என்னாவது என்கிற அச்சமே வந்து தொலைக்கிறது சில காட்சிகளில். அதுவும் இந்த பிச்சை காசுலதான் நான் படிக்கணுமா? சோறு திங்கணுமா? டிரஸ் போடணுமா? என்று ஒரு வாண்டு கேட்கிற போது, அரசாங்க மற்றும் தனியார் கட்டிங் பார்ட்டிகள் கதி கலங்கிப் போவார்கள். படத்தில் நடித்திருக்கும் எல்லா சிறுவர் சிறுமியரும் விஜய் தொலைக்காட்சியின் ஏர்டெல் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் இளம் பாடகர்கள்.

நாலு பேருக்கு நல்லது செய்யணும்னா என்ன வேணா செய்யலாம் என்ற கொள்கையோடு அவர் லஞ்ச பணத்தை திருடி மக்களுக்கு இலவசமாக விநியோகிக்கும் காட்சிகள், குழந்தைகளை சிரிக்க வைக்கும் கந்தசாமி படத்தில் விக்ரம் செய்த வேலையைதான் அண்ணாச்சியும் செய்கிறார். இது அதை விட சுவாரஸ்யமாக இருக்கிறதே என்று கூட சில நேரங்களில் நினைக்க வைக்கிறது சில காட்சிகள். சிறுவன் ஆஜித்திற்கும் அவனது பாட்டிக்குமான அன்பை அவ்வளவு டச்சிங்காக காண்பித்திருக்கிறார் இயக்குனர் நித்தியானந்தன் திரைக்கதை வசனம் பாடல்களை நாகராஜன் ராஜா எழுதியிருக்கிறார். சிறுவர்களுக்கான படத்தை பெரியவர்களும் பார்க்கும் விதத்தில் உருவாக்க ட்ரை பண்ணியிருக்கிறார். அதற்காகவே பாராட்டலாம். இந்த படமும் கருத்தும் அப்துல்கலாம் நிழலில் ஒதுங்கியிருப்பதால், ஜனாதிபதி மாளிகை ஏதாவது சிறப்புகளை இவருக்கு வழங்கக் கூடும்.

  15 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விவேகம் படத்தை பார்த்த பிறகு அஜித்தின் ரியாக்‌ஷன் இதுதான்
விஜய் படைத்த பிரமாண்ட சாதனை, தமிழகத்தில் தளபதி படம் மட்டுமே நிகழ்த்திய சாதனை
BiggBossல் ஜுலி தான் ஜெயிப்பார்- பிரபல நடிகரின் டுவிட்
விவேகம் இரண்டாவது பாடல் பற்றி அனிருத் அதிரடி தகவல்
பிக் பாஸ் போட்டியாளர்களுடன் இப்படி ஒரு ஒப்பந்தமா?வெளிவந்த அதிர்ச்சி தகவல்
மெர்சல் படத்தில் விஜய்யின் ஒரு கதாபாத்திரத்தின் பெயர் இதுதானா- உறுதியான தகவல்
மெர்சல் படத்தில் விஜய்யின் ஒரு கேரக்டர் உறுதியானது- வெளியான புகைப்படம்
பொய் சொன்ன ஜூலியை மாட்டி விட்ட ஆர்த்தி...
BiggBoss நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்களுக்கு வார சம்பளம் மட்டும் இவ்வளவா?
விஜயின் தெறி படத்தால் நடந்த சுவாரசியமான சம்பவம்! எத்தனை பேருக்கு தெரியும்