Home  |  திரை உலகம்

புகழ் - ஜெய்-ன் திருப்புமுனை !!!!

புகழ் - ஜெய்-ன் திருப்புமுனை !!!!

நாயகன் - ஜெய்

நாயகி - சுரபி

இசை - விவேக் சிவா – மெர்வின்

இயக்குனர் - மணிமாறன்

தயாரிப்பு - சுஷாந்த் பிரசாத் மற்றும் கோவிந்தராஜ்

நடிகர் ஜெய் நடிக்கும் புது படம் புகழ் - இந்த படம் ஏராளமான பொருட்செலவில் வித்தியாசமான கதை அமைப்பில் தயார் ஆகிறது
இந்த படத்தை வெளியிடுபவர் ரேடியன்ஸ் மீடியா வருண் மணியன் ஆகும்.

எப்போதும் எதார்த்த வாலிபன் மற்றும் அப்பாவி கதாபாத்திரங்களில் நடிக்கும் நமது ஜெய் சமீபமாக அதிரடி ஆக்க்ஷன் படங்களில் ஆர்வம் காட்டி வருகிறார்.

கதைப்படி நம் வாழ்வில் நாம் எப்போதும் அறிந்தோ , அறியாமலோ ஜெயிக்க வாய்ப்பில்லை என கருத படுபவர் ஜெயிக்க வேண்டும் என ஆசை படுவதுண்டு. அவர்களின் வெற்றியில் நாம் நம்மை காண விழைவது உண்டு.புகழ் நாம் வாழ்வில்நாம் சந்திக்கும் அத்தகைய ஒரு நபரை .பற்றிய கதை.

2014 ஆண்டில் ‘நெஞ்சுக்குள்ளே நீ’ பாடல் மூலம் இசை உலகில் பெரும் பாராட்டு பெற்ற இவர்கள் 2015-ம் ஆண்டில் இந்திய இசை உலகின் இரு ஜாம்பவான்களுடன் இணைந்து பணியாற்றுவதன் மூலம் தங்களது இசை பயணத்தை மீண்டும் துவக்கியுள்ளனர்.

இவன் வேற மாதிரி படத்தில் நடித்த சுரபிதான் இப்படத்தின் நாயகி .

film department என்ற புதிய பட நிறுவனம் சார்பில் சுஷாந்த் பிரசாத் மற்றும் கோவிந்தராஜ் தயாரிக்கும் இந்த படத்தை Radiance media சார்பில் வழங்குபவர் வருண் மணியன்


ஜெய் மற்றும் சுரபி நடிக்கும் இந்த ‘புகழ்’ திரைப்படம் எல்லா தரப்பு மக்களையும் கவரும் படமாகும். ‘வடகறி’ படத்தில் அறிமுகமான இளம் இசை அமைப்பாளர்கள் விவேக் சிவா – மெர்வின் இரட்டையர்கள் இந்த படத்திற்கும் இசையமைக்கிறார்கள்.


2014-ம் ஆண்டில் பல சாதனைகளை புரிந்த இளம் இசை அமைப்பாளர் அனிரூத் ‘புகழ்’ திரைப்படத்தின் முதல் பாடலை பாடி உள்ளார். ‘நாங்கதான்டா பொடியன்தாண்டா.. ஆட்டம் கண்டா ஊருக்குள்ள கிங்குதாண்டா’ என்று துவங்கும் இந்தப் பாடலை எழுதியவர் பாடலாசிரியர் அண்ணாமலை.


அனிரூத்தால் புகழ் பெறும் ‘புகழ்’ திரைப்படம்..!
இந்த படம், தன் தலைப்பைப் போலவே ‘புகழ்’ பெற எல்லா முயற்சிகளையும் மேற்கொள்கிறது.

இளம் இசை அமைப்பாளர் அனிரூத் ‘புகழ்’ திரைப்படத்தின் முதல் பாடலை பாடி உள்ளார். ‘நாங்கதான்டா பொடியன்தாண்டா.. ஆட்டம் கண்டா ஊருக்குள்ள கிங்குதாண்டா’ என்று துவங்கும் இந்தப் பாடலை எழுதியவர் பாடலாசிரியர் அண்ணாமலை.


ஹிந்தியில் பெரும் வெற்றி பெற்ற ஹிந்தி திரைப்படமான ‘அஷிக்லி’ திரைப்படத்தில் இடம் பெற்று நாடெங்கும் பட்டி தொட்டிகளிலும் புகழ் பெற்ற ‘தும் ஹி ஹோ ‘ பாடலை பாடிய அரிஜித்சிங் ‘புகழ்’ படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமாகிறார். ‘நீயே வாழ்கை என்பேன், இனி வாழும் நாட்கள் என்பேன்’ என்று துவங்கும் இந்தப் பாடலை எழுதியவர்கள் நா.முத்துகுமார் மற்றும் பிரான்சிஸ்.


படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்பு முடிந்து, மூன்றாவது மற்றும் இறுதிக்கட்ட கட்ட படபிடிப்புக்கு தயார் நிலையில் உள்ளார்களாம். திட்டமிட்டு குறித்த நேரத்தில் படப்பிடிப்பு நடத்தி முடித்த இயக்குனர் மணிமாறன் மற்றும் அவரதுக் குழுவினருக்கும் இந்த படம் பெரும் ‘புகழ்’ சேர்க்கும் என்கின்றனர் தயாரிப்பாளர்கள் சுஷாந்த் பிரசாத் மற்றும் கோவிந்தராஜ்.

புகழ் படம் புகழ் பெற எல்லா நடவடிக்கை கலையும் எடுத்து வருகிறது, வெற்றி பெற்றால் புகழ் தான்...

  27 Feb 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்