Home  |  அறுசுவை

புதினா சாதம் (mint rice)

தேவையானவை :

 

அரிசி - 2 கப்

தேங்காய் பால் - 1 கப்

பெரிய வெங்காயம் - 1

எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்

மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்

உப்பு - 1 டீஸ்பூன்

 

அரைக்க தேவையானவை :

 

புதினா இலை - 2 கப்

கொத்துமல்லி இலை - 1/2 கப்

பச்சை மிளகாய் - 2

இஞ்சி - 1 துண்டு

பூண்டு பற்கள் - 2

 

தாளிக்க தேவையானவை :

 

எண்ணை - 4 டேபிள்ஸ்பூன்

பட்டை இலை - சிறு துண்டு

பட்டை - 2 சிறிய துண்டு

சோம்பு - 1 டீஸ்பூன்

கிராம்பு - 2

முழு ஏலக்காய் - 2

 

செய்முறை:

 

1.முதலில் அரிசியைக் கழுவி 15 நிமிடங்கள் ஊற விடவும்.வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.கொத்துமல்லி,புதினா,பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு ஆகியவற்றை நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

 

2. குக்கரில் எண்ணையை விட்டு சூடானதும் பட்டை,பட்டை இலை,கிராம்பு, ஏலக்காய்,  சோம்பு அக்கியவற்றைப் போட்டு சற்று வறுக்கவும். பின் வெங்காயத்தைச் சேர்த்து நன்றாக வதக்கவும். பின்னர் அதில் அரைத்து வைத்துள்ள புதினா விழுது, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.

3.பிறகு அதில் அரிசியை தண்ணீரை நன்றாக வடித்து விட்டு போடவும். அத்துடன் தேங்காய் பால் 1 கப், 3 கப் தண்ணீர் விட்டு கிளறி விடவும். மூடி வைத்து, மூன்று விசில் வரும் வரை வேக விட்டு இறக்கி வைக்கவும்.அதனுடன் எலுமிச்சம் சாறு சேர்த்து கிளறவும்.அதன் மேல் சிறிது புதினா இலைகள் மற்றும், எலுமிச்சம் பழத்துண்டுகளை வைத்து பரிமாறவும்.

Mint Rice

Ingredients for Mint Rice:

 

Rice-2 cup

Coconut Milk-1 Cup

Large onion-1

Lemon Juice-1 Tsp

Turmeric Powder-1/4 Tsp

Salt-1 Tsp

 

Ingredients for Grinding:

 

Mint Leaves-2 Cup

Coriander Leaves-1/2 Cup

Green Chilly-2

Ginger-1 Piece

Garlic-2

 

Ingredients for Seasoning:

 

Oil-4 Tbsp

Bay Leaf-Small Piece

Cinnamon-2 Pieces

Fennel-1 Tsp

Cloves-2

Cardamom-2

 

Procedure to make Mint Rice:

 

1. Allow to soak the rice for 15 minutes. Chop the onion very finely. Grind coriander, mint, green chilly, ginger and garlic very finely.

2. Heat oil in a cooker, add cinnamon, bay leaf, cloves, cardamom, fennel and fry till get golden color. Then add onion and saute well. Then add ground paste, turmeric powder and salt.

3. Now add rice, 1 cup of coconut milk and 3 cup of water. Stir well. Cover the cooker and allow 3 whistles to boil. Remove from flame and pour lemon juice and stir well. Finally garnish with mint leaves and serve it.

  14 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!