Home  |  திரை உலகம்

பணமோசடி புகாரில் பவர் ஸ்டார் கைது

தன்னுடைய நகைச்சுவையான பேச்சால் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் பவர் ஸ்டார் சீனிவாசன். பணமோசடி புகாரில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மீது ரூ. 65 லட்சம் மோசடி புகார் கூறப்பட்டுள்ளது. குரோம்பேட்டை கணபதிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம். இவர் வேலூரில் தோல் தொழிற்சாலை ஒன்றை நடத்தி வருகிறார். தொழிலை மேம்படுத்த நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசனின் பாபா டிரேடிங் கம்பெனி என்ற நிறுவனம் மூலம் ரூ. 10 கோடி கடன் பெறுவதற்காக ரூ. 65 லட்சத்தை கமிஷனாக கொடுத்துள்ளார். பல வாரங்கள் ஆகியும், கடன் பெற்றுத்தரவில்லை என்று தெரிகிறது. மேலும், கமிஷன் பணத்தையும் திருப்பித் தரவில்லையாம். பணத்தை திருப்பிக் கேட்ட பாலசுப்பிரமணியத்தை பொம்மை துப்பாக்கியை காட்டி சீனிவாசன் மிரட்டினாராம். இது குறித்து பாலசுப்பிரமணியம் சில வாரங்களுக்கு முன்பு போலீஸில் புகார் அளித்தார். புகாரின்பேரில் சீனிவாசனை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில், ஒரு கல்லூரி நிகழ்ச்சிக்கு சென்று கொண்டிருந்த சீனிவாசனை கீழ்ப்பாக்கம் போலீசார் நேற்று கைது செய்தனர்.

User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்