Home  |  கல்விச்சோலை

பொது தமிழ் பகுதி 1

994. வீரசோழியம் எந்தச் சமயத்தைச் சார்ந்த இலக்கண நூல்?

விடை : பவுத்தம்


995. தொல்காப்பியர் எத்தனை வகையான உரைநடைகளைக் குறிப்பிடுகிறார்?

விடை : நான்கு

996. இறைச்சி என்பது எதனின் ஒரு பகுதியைக் குறிப்பது?

விடை : கருப்பொருள்

997. பிரித்து எழுதுக: வையந்தழைக்கும்

விடை : வையம் + தழைக்கும்

998. பலுச்சிஸ்தானத்தில் பேசப்படும் திராவிட மொழி எது?

விடை : பிராகுயி

999. அகத்திணைகளின் எண்ணிக்கை யாவை?

விடை : ஏழு

1000. இலக்கணக் குறிப்பு தருக: சுடுநீர்

விடை : வினைத் தொகை

1001. குண்டலகேசி எந்த சமயக் காப்பியம்?

விடை : பவுத்தம்

1002. "குசிகர் குட்டிக்கதைகள்' என்னும் சிறுகதையை எழுதியவர் யார்?

விடை : மாதவையா


1003. "நற்றொகை விளக்கம்' என்னும் நூலை எழுதியவர் யார்?

விடை : சுந்தரம் பிள்ளை


1004. கம்பராமாயணத்தின் முதல் பகுதி

விடை : பாலகாண்டம்


1005. கோவலனின் முற்பிறவிப் பெயர் என்ன?

விடை : பரதன்


1006. பெண்கள் நெல்குற்றும் போது பாடும் பாட்டு எது?

விடை : வள்ளைப்பாட்டு


1007. ‘தொப்பி' என்பது

விடை : இந்துஸ்தானிச் சொல்


1008. உவமும் குறிப்புப் பொருளும் நேருக்கு நேர் ஒத்து முடிந்தால் அது

விடை : உள்ளுறை


1009. கலிப்பாவுக்கு உரிய ஓசை

விடை : துள்ளலோசை


1010. பால் தருவது காளையா? பசுவா? - இது என்ன வழு?

விடை : வினா வழு


1011. போர்க்களத்தில் வீழ்ந்து கிடந்த வீரனின் உடலை அவன் மனைவி தழுவுதல் என்பது

விடை : சிருங்கார நிலை


1012. "மதயானை முகவன்' என்றழைக்கப்படும் இறைவன்

விடை : பிள்ளையார்


1013. இறையனார் அகப்பொருள் உரை "பொருள்கோள்' என்னும் சொல்லிற்குத் தரும் பொருள் யாது?

விடை : ஆரிடமணம்


1014. தொல்காப்பியம் முழுமைக்கும் உரையெழுதியவர் யார்?

விடை : இளம்பூரணர்


1015. நன்னூல் எத்தனை அதிகாரங்களை உடையது ?

விடை : இரண்டு


1016. நற்றிணையைத் தொகுப்பித்தவர்

விடை : பன்னாடு தந்த மாறன்வழுதி


1017. வீரம், கொடை போன்றவற்றைச் சிறப்பிக்கும் திணை

விடை : புறத்திணை


1018. இனியவை நாற்பது நூலின் ஆசிரியர்

விடை : பூதஞ்சேந்தனார்


1019. ஈசன் எந்தை இணையடி நிழலே என்று பாடியவர்

விடை : திருநாவுக்கரசர்


1020. களவழி நாற்பது எந்த இடத்தில் நடந்த போரைப் பற்றியது?

விடை : கழுமலம்


1021. நெய்தற்கலிப் பாடல்களைப் பாடியவர்

விடை : நல்லந்துவனார்


1022. தமிழின் முதல் காப்பியம்

விடை : சிலப்பதிகாரம்


1023. ‘புஷ்பவல்லி' என்னும் நாடகத்தினை இயற்றியவர்

விடை : பம்மல் சம்பந்த முதலியார்


1024. திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் எனும் நூலை எழுதியவர் யார்?

விடை : கால்டுவெல்


1025. ‘அரிசி விலையை யடிக்கடி குறைத்திட்ட பாவி அவதிப்படுவது போல்' - இவ்வுவமை காணப்படும் இலக்கியம்?

விடை : தேம்பாவணி


1026. ‘நெடுந்தொகை' என்றழைக்கப்படும் நூல்

விடை : அகநானூறு


1027. ‘வெண்சீர்' எனப்படுவது

விடை : வசைச்சீர்


1028. வேர்ச்சொல் அறிக: பாடினான்

விடை : பாடு


1029. யுனெஸ்கோ அமைப்பு தாரசுரம் கோயிலை எதனுடைய சின்னமாக அறிவித்துள்ளது?

விடை : மரபு அடையாளச் சின்னம்


1030. ‘அன்று வேறு கிழமை' என்ற கவிதையின் ஆசிரியர்

விடை : ஞானக்கூத்தன்


1031. "மந்திரங்கள் ஓதியது அந்தக் காலம் எந்திரத்தால் மழை வருவது இந்தக் காலம்'' - இவை யாருடைய பாடல் வரிகள்?

விடை : உடுமலை நாராயணக் கவி


1032. "வரைவு' என்பது

விடை : திருமணம்


1033. திருநாவுக்கரசரை அப்பரே என்று முதன்முதலில் விளித்தவர் யார்?

விடை : திருஞானசம்பந்தர்


1034. "மழையெனச் சொரிவ நோக்கார் மானையே நோக்கிச் சென்றார்'' - பாடலடி இடம் பெற்ற நூல்.

விடை : சீறாப்புராணம்


1035. அகத்தூது என்பது

விடை : சிற்றிலக்கியம்


1036. ""எல்லே இளங்கிளியே இன்னம் உறங்குதியோ'' என்று பாடியவர்

விடை : ஆண்டாள்


1037. இளங்கோவடிகள் சிலப்பதிகாரம் எழுத காரணமாயிருந்தவர்

விடை : சீத்தலைச் சாத்தனார்


1038. தனித்தமிழ் இயக்கத்தைத் தோற்றுவித்தவர்

விடை : மறைமலையடிகள்


1039. ‘சூரியநாராயண சாஸ்திரிகள்' என்பது யாருடைய இயற்பெயர்?

விடை : பரிதிமாற்கலைஞர்


1040. மரங்களின் பெயரை தங்கள் ஊர் பெயராக வழங்கி வரும் மக்கள்

விடை : முல்லை நில மக்கள்


1041. வள்ளலாரின் இயற்பெயர்

விடை : இராமலிங்க அடிகளார்


1042. "திருக்குறள் திருவள்ளுவரால் இயற்றப்பட்டது'' எவ்வகை வாக்கியம்?

விடை : செயப்பாட்டுவினை


1043. இயற்சீர் நான்கோடு நேர் நேர் சேர்த்தால் அது எவ்வாறு அழைக்கப்படும்?

விடை : தண்பூ


1044. உலகில் முதன் முதலில் மக்கள் தோன்றியதாகக் கருதப்படும் இடம்

விடை : லெமூரியா


1045. தமிழர்களை முதலில் தோன்றிய மூத்த குடி என்று குறிப்பிடும் நூல்

விடை : புறப்பொருள் வெண்பாமாலை


1046. தமிழில் கிடைக்கும் நூல்களுள் தொன்மையானது

விடை : தொல்காப்பியம்


1047. ‘கடவுளும் கந்தசாமியும்’ என்னும் சிறுகதையை எழுதியவர் யார்?

விடை : புதுமைப்பித்தன்


1048. மறைமலையடிகளாரின் இயற்பெயர் என்ன?

விடை : சுவாமிவேதாசலம்


1049. ‘நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்’ - இவ்வரி எவ்வியலில் இடம் பெற்றுள்ளது?

விடை : தொல்காப்பியம் அகம்

1050. அகத்திணைக்கே உரிய கோட்பாடு என்பது

விடை : உள்ளுறை உவமம்


1051. மூன்றடிச் சிறுமையும் ஆறடிப் பெருமையும் உடைய நூல்?

விடை : ஐங்குறுநூறு


1052. ‘நெஞ்சாற்றுப்படை’ எனச் சிறப்பிக்கப்படும் இலக்கியம் எது?

விடை : முல்லைப்பாட்டு


1053. ‘சூளாமணி’ நூல் அமைப்பு எப்பிரிவாகப் பகுக்கப்பட்டுள்ளது?

விடை : சுருக்கம்


1054. ‘மக்கள்’ என்பது ஒரு

விடை : உயர்திணை பன்மை


1055. ‘களவழி நாற்பது’ என்னும் நூலை இயற்றியவர் யார் ?

விடை : பொய்கையார்


1056. அணியிலக்கண நூல்களுள் முதன்மையானது

விடை : தண்டியலங்காரம்


1057. புகழ்வது போலப் பழிப்பது எவ்வகை அணி?

விடை : வஞ்சப்புகழ்ச்சி அணி


1058. அகப்பாடல்களும் புறப்பாடல்களும் கலந்த தொகை நூல்

விடை : பரிபாடல்

  23 Jun 2015
User Comments
01 May 2017 11:57:21 ரமேஷ் சாமியப்பா said :
இறையனார் அகப்பொருள் உரை \"பொருள்கோள்\' என்னும் சொல்லிற்குத் தரும் பொருள் யாது? விடை : ஆரிடமணம் வினாவும் தவறு விடையும் தவறு. ஆரிடம் என்பது எண்வகை மணங்களுள் ஒன்று. இதில் வேள்வித்தீ வளர்க்கும் அந்தணனுக்கு பெண் வீட்டார் பொருள் கொடுத்து பெண்ணை மணம் செய்வர், பாட்டுக்கு பொருள் கொள்ளும் முறை ஆகாது.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
TNPSC SELECTION இணையதளத்தில் பார்க்கலாம் !!
மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி உதவித் தொகை !!
மருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங்கில் புதிய திருப்பம் !!
ஆசிரியர் தகுதி தேர்வு - 2015
எம் பி பி எஸ் கட் ஆப் குறைவதால் சென்ற ஆண்டு மாணவர்களுக்கு சீட் கிடைக்கும் அதிர்ஷ்டம் !!
+2 தேர்வு முடிவுகள் !!
நாளை பிளஸ் டூ ரிசல்ட் !!
மெடிக்கல் சீட் - விண்ணப்பம் விற்பனை தொடங்கியது !!
வெளிநாடு செல்லும் மாணவர்களே உசார் !!
10 மற்றும் +2 ரிசல்ட் தேதி அறிவிப்பு !!