Home  |  அறுசுவை

உருளைக்கிழங்கு ஆம்லெட் (potato ambalat)

தேவையானவை:

 

உருளைக் கிழங்கு -350 கிராம்

முட்டை-6

மிளகாய்த்தூள்-1 டீஸ்பூன்

வெங்காயம்-1

பச்சை மிளகாய்-2

பூண்டு-2

சோயா சோஸ்-3 டீஸ்பூன்

நல்லெண்ணெய்-1 டீஸ்பூன்

மிளகு -1 டீஸ்பூன்

உப்பு,எண்ணெய் தேவையான அளவு

 

செய்முறை:

 

1.உருளைக் கிழங்கை முக்கால் பதத்திற்கு அவித்து, தோலை உரித்து வட்டமாக வெட்ட வேண்டும்.

2.ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி, சோயா சோஸ், நல்லெண்ணெய், உப்பு, மிளகுதூள், மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாக அடித்து வைக்க வேண்டும்.

3.ஒரு கடாயில் எண்ணெய் விட்டு வெட்டிய உருளைக் கிழங்கை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.

4.பின்பு வெங்காயத்தைப் போட்டு வதக்க வேண்டும். அதனுடன் பூண்டு, பச்சை மிளகாயை சேர்த்து வதக்க வேண்டும்.

5.முட்டைக் கலவைக்குள் பொரித்த உருளைக் கிழங்கு, வதக்கியவற்றைச் சேர்த்துக் கலக்க வேண்டும். ஆம்லெட்டாக பொரித்து எடுக்க வேண்டும்.

  21 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!