Home  |  திரை உலகம்

பொறியாளன் ( Poriyaalan )

பொறியாளன் ( Poriyaalan )

Movie Name: Poriyaalan பொறியாளன்
Hero: Harish Kalyan
Heroine: Anandhi
Year: 2014
Movie Director: Thanukumar
Movie Producer: A Grassroot Film Company
Music By: M.S.Jones


'ஆடுகளம்' நரேனின் பில்டிங் கன்ஸ்ட்ரக்ஷ்ன் நிறுவனத்தில் பணிபுரியும் இளம் சிவில் இன்ஜினியரான ஹரீஷ் கல்யாணுக்கு, 'சொந்தமாக ஒரு இடத்தை வாங்கி, தானே கன்ஸ்ட்ரக்ஷ்ன் பிஸினஸ் செய்ய வேண்டுமென்ற ஆசை'. அதற்கு சில கோடிகள் தேவை என்பதால், ஹரீஷின் ஆசை தள்ளி தள்ளிபோகிறது. ஒரு அசாதாரணமான சூழலில் ஹரீஷ், நரேனிடமிருந்து வேலையை விட்டு நிற்கிறார். அதேநேரம், ஹீரோ ஹரீஷின் காதலி ஆனந்தியின் அண்ணனும், ஹரீஷின் நண்பனுமான அஜெய்ராஜ், ஹரீஷ்க்கு வலிய உதவ முன் வருகிறார். அதுவும் எப்படி? அடாவடி கந்து வட்டி பேர்வழி அச்சுத குமாரிடம் வட்டி வசூல் செய்பவராக வேலை பார்க்கும் அஜய்ராஜ்.,

தன் முதலாளி ஒரு கொலை கேஸூக்காக உள்ளே போயிருக்கும் நேரம் பார்த்து, வேறு சிலரது பெயரில் அவர் வீட்டிலிருந்து கடன் வாங்கி நண்பனின் பிஸினஸ் ஆசைக்கு பெரிய அளவில் உதவுகிறார். நண்பர்களின் போதாதகாலம், ஒரு ஏமாற்று பேர்வழியிடம் இடம் வாங்குகிறேன் பேர்வழி என 2 கோடியையும் ஏமாறுகிறார் ஹரீஷ். இதனால் ஹரீஷ் கல்யாணின் எதிர்காலமும், காதலும் கேள்விகுறியாகிறது, நண்பர் அஜய்ராஜின் உயிருக்கும், உடமைக்கும், உறவுகளுக்கும் அச்சுறுத்தல் ஏற்படுகிறது. அதனால் ஹீரோ எடுக்கும் ஆக்ஷ்ன் அவதாரமும், விதியும் மதியும் அவருக்கு துணை நிற்கும் சந்தர்ப்பங்களும் தான் 'பொறியாளன்' படம் மொத்தமும் . ஒருசில அரசுத்துறை அதிகாரிகளை கைக்குள் போட்டுக் கொண்டு, ஒரே இடத்தை இரண்டு-மூன்று பேருக்கு விற்கும் இன்றைய ரியல் எஸ்டேட் மோசடிகளை, இதுவரை எந்த தமிழ் படத்திலும் சொல்லாத அளவிற்கு புட்டு புட்டு வைத்திருக்கும் கதை, திரைக்கதைக்காக இயக்குநர் தாணு குமாருக்கு ஒரு பெரிய 'ஹேட்ஸ் ஆப்' சொல்லியே ஆக வேண்டும்


ஹீரோ ஹரீஷ் கல்யாண், முந்தைய படங்களைக் காட்டிலும் பிரமாதமாக நடித்திருக்கிறார். தான் ஏற்றிருக்கும் பாத்திரத்தின் தீவிரத்தையும், வலிமையையும் உணர்ந்து தன் நடிப்பால் பளிச்சிட்டிருக்கிறார் ஹரீஷ்.
அறிமுகநாயகி ஆனந்தி, ஆக்ஷ்ன் படங்களில் காதலிக்கும் கதாநாயகிக்கும் உரிய முக்கியத்துவம் உணர்ந்து கிடைத்த இடத்தில் எல்லாம் பிரமாதமாக நடித்தும், கவர்ச்சி மற்றும் இளமை முறுக்கேறும் காட்சிகளில் துடித்தும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார். அறிமுக நண்பர் அஜய்ராஜ், வில்லன் அச்சுதகுமார், மோசடி பேர் வழியாக வரும் நடிகர் மோகன்ராம் உள்ளிட்டோரும் நடிப்பு. போலீஸ் கமிஷனர் ஆபிசில் மோகன்ராமை பற்றி ஒரு போலீஸ் ஆபிசர், தவறுதலாக சொல்லியும், அதுப்பற்றிய விழிப்புணர்வோ, சந்தேகமோ துளியுமின்றி மீண்டும் ஹீரோ ஹரீஷ் அன் கோவினர் மோகன்ராமிடம் ரூ.65 ஆயிரம் கோட்டை விடுவதும், மோகன் ராம்மையும் இயக்குநர் இன்னும் சரியாக கையாண்டிருந்திருக்கலாம். காட்சிகளில் பல புதுமைகளை குறிப்பாக காதல் காட்சிகளிலும், கலவர காட்சிகளிலும் பல புதுமைகளை புகுத்தியிருக்கும் இயக்குநர் தாணு குமார், கதை விஷயத்தில் தன் குருநாதர் வெற்றிமாறன் 'பொல்லாதவன்' படத்தையே கொஞ்சம் களம் மாற்றி படமாக்கியிருப்பதாக தோன்றுவது பொறியாளனின் பலமா? பலவீனமா தெரியவில்லை! அதில் ஹீரோ தனுஷின் பைக் பறிபோகும், இதில் ஹீரோ ஹரீஷின் பணம் பறிபோகிறது.

அதைத்தொடர்ந்து காதல் கதை, கனமான கதை களத்திற்கு மாறும் இரண்டு படங்களிலும் இதுவே நடந்தேறி இருக்கிறது. ஆர்.வேல்ராஜின் ஒளிப்பதிவு, எம்.எஸ்.ஜோன்ஸின் இசை உள்ளிட்ட ப்ளஸ் பாயிண்ட்டுகளுடன்., தமிழ் சினிமாவில் இதுவரை சொல்லப்படாத விதத்தில் ரியல் எஸ்டேட் மோசடிகளையும், கத்துவட்டி கொடுமைகளையும் சொல்லியிருக்கிறார் இயக்குநர் தாணு குமார்.

  15 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்