Home  |  திரை உலகம்

பிரபல பின்னணி பாடகர் டாக்டர் பி.பி.ஸ்ரீனிவாஸ் காலமானார் !

காலத்தால் அளிக்க முடியாத எண்ணற்ற பாடல்களை தனது இனிமையான குரலினாலும், வித்தியாசமான முறையினாலும் பாடிய பின்னணி பாடகர் டாக்டர் பி.பி.ஸ்ரீனிவாஸ் அவர்கள் சென்னையில் நேற்று மத்தியம் காலமானார். அவருக்கு வயது 82. 

 

ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரியை அடுத்த பத்த‌ளபொடி எனும் கிராமத்தில் 1930ம் ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி பனிந்திர சுவாமி-சேஷா கிரியம்மா தம்பதிகளின் மகனாக பிறந்தவர் ஸ்ரீனிவாஸ். வணிகவியல் துறையில் பட்டதாரியான இவர் 1952ம் ஆண்டு இந்தி சினிமாவில் மிஸ்டர் சம்பத் ‌என்ற படத்தின் மூலம் பின்னணி பாடகராக அறிமுகமானார். தமிழில் ஜாதகம் என்ற படத்தில் இடம்பெற்ற சிந்தனை என் செல்வமே என்ற பாடல் இவருக்கு அறிமுகம். அதன்பிறகு  பாசமலர் படத்தில் வந்த யார் யார் யார் இவர் யாரோ..., பாவ மன்னிப்பில் இடம்பெற்ற "காலங்களில் அவள் வசந்தம்" படப்பாடல் அவரை பாமர மக்களிடையே பிரபலமாக்கியது. தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம், உருது உள்ளிட்ட 12 மொழிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். இவர் பல்வேறு பாடல்களை இயற்றியும் பாடியுள்ளார். மேலும் மதுவண்டு என்ற புனைப்பெயரில் ஏராளமான கவிதை நூல்களையும் எழுதியுள்ளார். 

 

டாக்டர் பி.பி.ஸ்ரீனிவாஸ் அவர்கள் சென்னை, சி.ஐ.டி. நகரில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்நிலையில் திடீரென நேற்று மதியம் சுமார் 1 மணியளவில் மாரடைப்பினால் அவர் மரணமடைந்தார்.மறைந்த ஸ்ரீனிவாஸின் உடல் அஞ்சலிக்காக அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. பி.பி.ஸ்ரீனிவாஸ் அவர்களின் மறைவிற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா, கவர்னர் ரோசையா, மற்றும் திரை உலகினர் பலர் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர். 

 

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்