Home  |  திரை உலகம்

பிட்சா 2 : தி வில்லா ( Pizza 2: The Villa )

பிட்சா 2 : தி வில்லா ( Pizza 2: The Villa  )

Movie Name: Pizza 2: The Villa பிட்சா 2 : தி வில்லா
Hero: Ashok Selvan
Heroine: SANCHITA SHETTY
Year: 2013
Movie Director: Deepan Chakravarthy
Movie Producer: STUDIO GREEN
Music By: Santhosh Narayanan


தமிழ் சினிமா ரசிகர்களை அறிவாளிகள் என்று நிச்சயமாக நம்பி எடுக்கப்பட்டிருக்கும் படம் வில்லா. அதற்கு இயக்குநருக்கு ஒரு பாராட்டு! நிறைய ஆராய்ச்சி செய்து திரைக்கதையிலும் கவனம் செலுத்திப் படத்தை எடுத்திருக்கிறார் புதுமுக இயக்குநர் தீபன் சக்கிரவர்த்தி. பீட்சா 2 என்று பெயர் வைத்தாலும் பிட்சா படத்தின் தொடர்ச்சி அல்ல இந்தப் படம். படம் ஓடும் நேரம் ஒரு மணி நாற்பத்தைந்து நிமிடங்கள் தான். அசோக் செல்வன், சஞ்சிதா ஷெட்டி தான் படத்தின் நாயகன், நாயகி. அசோக் செல்வன் நன்றாக நடித்திருந்தாலும் படம் முழுக்க ஒரு சீரியசாக வருவதைத் தவிர்த்திருக்கலாம்.

சஞ்சிதா ஷெட்டி கொடுத்தப் பாத்திரத்தை சரியாக செய்திருக்கிறார்.புதுச்சேரியில் படம் முழுவது பயணிக்கிறது. கட்டடங்களும் கடற்கரையும் தீபக் குமாரின் ஒளிப்பதிவும் லியோ ஜான் பாலின் எடிட்டிங்கும் நன்றாக உள்ளது. படத்தின் பலம் சந்தோஷ் நாராயணன் பின்னணி இசை. ஆனால் பாடல்கள் எதுவுமே மனதில் நிற்கவேயில்லை. த்ரில்லர் கதை. அரைத்த மாவையே அரைக்காமல் புதுக் கதையை எடுத்திருக்கிறார் இயக்குநர். ஆனால் சீட்டின் நுணியில் உட்கார்ந்துப் பார்க்கும்படியானக் கதை இல்லை. S.J.சூர்யா கேமியோ பாத்திரத்தில் வருகிறார். நாசர் சின்ன ரோலில் வருகிறார். படத்தின் க்ளைமாக்ஸ் சூப்பர். ஆனால் இது எந்த மாதிரியான கதை... புரிய நேரம் எடுக்கிறது. புரியாத புதிர்.

  18 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்