Home  |  அறுசுவை

பட்டாணி மசாலா (peas spices)

பட்டாணி மசாலா (peas spices)

தேவையானவை :

 

காய்ந்த வெள்ளை பட்டாணி - 1 கப்

தக்காளி  - 1 (நறுக்கியது)

பெரிய வெங்காயம் - 2 (பொடித்தது)

சோம்பு - 1 டீஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிது

தனியா - 1 டேபிள்ஸ்பூன்

மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்

எண்ணை - 2 டேபிள்ஸ்பூன்

இலவங்க பட்டை - சிறு துண்டு

கிராம்பு - 2

காய்ந்த மிளகாய் - 2

உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

 

செய்முறை:

 

1.குக்கரில் எட்டு மணிநேரம் ஊறவைத்த பட்டாணியை போட்டு அத்துடன் 2 கப் தண்ணீர் மற்றும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து 3 விசில் வரும் வரை வேக விடவும்.

 

2.ஒரு கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணை விட்டு, அதில் மிளகாய், தனியா, பட்டை, கிராம்பு ஆகியவற்றை வறுத்தெடுத்துக் கொள்ளவும். அதே வாணலியில் மேலும் ஒரு டீஸ்பூன் எண்ணை விட்டு அதில் பெரிதாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தைப் போட்டு சற்று வதக்கவும். பின்னர் அத்துடன் தக்காளித் துண்டுகளையும் சேர்த்து  ஓரிரு வினாடிகள் வதக்கி, ஆற விடவும். 

 

3.மேலும் அத்துடன் வறுத்து வைத்துள்ள மிளகாய், தனியா, பட்டை, கிராம்பு ஆகியவற்றையும் சேர்த்து நன்றாக அரைத்தெடுக்கவும்.வெந்த பட்டாணியிலிருந்து இரண்டு டேபிள்ஸ்பூன் எடுத்து, அதையும் அரைத்தெடுத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.

 

4.கடாயில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணை விட்டு காய்ந்ததும் அதில் சோம்பு சேர்த்து பொரிய விடவும். பின் அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். வெங்காயம் சற்று வதங்கியவுடன், அரைத்து வைத்துள்ள மிளகாய், வெங்காய விழுது, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து சற்று வதக்கவும். 

 

5.அதனுடன் வேக வைத்துள்ள பட்டாணியை வெந்த நீருடன் சேர்க்கவும். பட்டாணி விழுதையும் சேர்த்து, தேவை பட்டால் மேலும் சிறிது தண்ணீரையும் சேர்த்துக் கிளறவும். உப்பு சரி பார்த்து, , ஒரிரு நிமிடங்கள் நன்றாக கொதிக்க விட்டு இறக்கி வைக்கவும்.கொத்தமல்லி தழை தூவி பரிமாறலாம்.

Peas Spices

Ingredients for Peas Spices :


Dry White Peas - 1 Cup,

Tomato - 1 (Chopped),

Large Onion - 2 (Chopped),

Aniseeds - 1 Tsp,

Curry Leaves - little,

Coriander - 1 Tbsp,

Turmeric Powder - 1/4 Tsp,

Oil - 2 Tbsp,

Cinnamon - Small Piece,

Cloves - 2,

Dry Chilies - 2,

Salt - as needed.


Method to make Peas Spices :


1. In a Pressure Cooker, add the 8 hours soaked peas and pour 2 cups of water and little salt along with them. Allow it to come 3 whistle. 

2. In a frying pan pour some amount of oil then add dry chilies, coriander, cloves and cinnamon and allow it to fry well and keep it aside. Then pour some oil in a frying pan then add largly chopped onions and fry it well. Then add the chopped tomatoes and allow it to fry for few seconds. Let it be cooled.

3. Then add fried dry chilies, coriander, cinnamon, cloves along with them and grind it well. Then grind the 2 Tbsp of cooked peas. Keep this aside. 

4. Heat oil in a frying pan then add aniseeds and allow it to season it. Then add finely chopped onions, curry leaves and allow it to fry well. After it boiled well then add the grinded chilies and onion paste, turmeric powder and salt. And allow it to fry well.

5. Then add the cooked peas along with them then add peas paste , enough water and salt. Allow it to boil for 2 minutes. Then add coriander leaves along with them.


Peas Spices is ready.

  08 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!