Home  |  திரை உலகம்

பட்டைய கெளப்பணும் பாண்டியா ( Pattaya Kelappanum Pandiya )

பட்டைய கெளப்பணும் பாண்டியா ( Pattaya Kelappanum Pandiya )

Movie Name: Pattaya Kelappanum Pandiya பட்டைய கெளப்பணும் பாண்டியா
Hero: VIDHARTH
Heroine: Manisha Yadav
Year: 2014
Movie Director: S.P.RAJKUMAR
Movie Producer: Mutiara Films International
Music By: DEEPAK


விதார்த் , சூரி இருவரும் அண்ணன் தம்பிகள். பழனி டு பாப்பம்பட்டி செல்லும் மினிபஸ் ஒன்றில் விதார்த்(வேல்பாண்டி) ஓட்டுனராகவும், அவருடைய தம்பி சூரி(முத்துபாண்டி) நடத்துனராகவும் பணிபுரிகின்றனர். நாயகன் விதார்த்துக்கு, அந்த பேருந்தில் தினமும் பயணிக்கும் நர்சாக பணியாற்றும் நாயகி மனிஷா யாதவின் மீது காதல். நாயகன் விதார்த் விழுந்து விழுந்து காதலித்தாலும் அவரை திரும்பிக்கூட பார்க்க மறுக்கிறார் கதாநாயகி. இந்நிலையில் விதார்த்துக்கு கண்மணியின் குடும்ப சூழ்நிலை பற்றி தெரிய வருகிறது. அவருக்கு உதவி செய்ய முன்வரும் நாயகன்,

நாயகியின் கண் தெரியாத அக்காவுக்கு சக ஓட்டுனரை மாப்பிள்ளையாக்கி, அவர்களது குடும்ப கஷ்டத்தை போக்க முயற்சிக்கிறார். படத்தின் துவக்கக் காட்சியில் இருந்து இடைவேளை வரைக்கும் ஜாலியாக படம் நகருகிறது. ஒவ்வொரு காட்சியும் படம் பார்க்க வருபவர்களை சிரிக்க வைப்பது ஒன்றே தங்களது ஒரே குறிக்கோள் என்று முடிவு செய்து கொண்டு காட்சிகை உருவாக்கியிருப்பார்கள். காட்சிக்கு காட்சிக்கு சிரிக்க வைத்திருக்கிறார்கள். இரண்டாவது பாதியில் கதை கொஞ்சம் சீரியஸ் ஏரியாவுக்குள் பயணிக்கிறது. ஆனாலும் என்ன கதையோடு வரும் காமெடி காட்சிகள் படத்தின் இறுதி வரைக்கும் வருகின்றன. ஆக, இரண்டாவது பாதியிலும் ரவுண்டு கட்டி சிரிக்க வைக்கின்றன காட்சிகள்.

ஒருதலையாக காதலிக்கும் விதார்த் மனிஷாவை விடாமல் காதலிக்கும் போதும் சரி, அவரை விட்டு விலக முயற்சி செய்யும் போதும் சரி, சூரியுடன் சேர்ந்து விதார்த் செய்யும் காமெடியிலும் சரி நடிப்பில் அசத்துகிறார். வழக்குஎண் 18/9 படத்தின் நாயகி மனிஷா யாதவ் இந்த படத்தில் குடும்ப குத்துவிளக்காக நடித்திருக்கிறார். பாடல் காட்சிகளில் கவர்ச்சியையும் கூட்டியிருக்கிறார். ‛பரோட்டா’ சூரி தான் படத்தின் பெரிய ப்ளஸ் பாயிண்ட். ஓப்பனிங் சீனில் தொடங்கி க்ளைமாக்ஸ் வரை மனிதர் திறந்த வாயை மூடவில்லை, ரசிகர்களும் தான். இளவரசு, இமான் அண்ணாச்சி, ஜெயபிரகாஷ், முத்துக்காளை என ஏகப்பட்டோர் நடித்திருந்தாலும், மனதில் நிற்பது சூரிக்கு அப்புறம் கோவை சரளாவும், இமான் அண்ணாச்சியும் தான். அருள்தேவ் இசையில் பாடல்கள் சுமார் ரகம் தான். அந்த குத்துப்பாட்டை தவிர, பின்னனி இசை படத்திற்கு பலம்.

மூவேந்தரின் ஒளிப்பதிவில் காட்சிகள் கண்களுக்கு விருந்து. என்னதான் வித்தியாசமான படங்கள் தமிழ் சினிமாவில் அவ்வபோது பரபரப்பை ஏற்படுத்தினாலும், எந்தவித பதட்டமும் இன்றி இதுபோன்ற படங்களையும் மக்கள் ரசிப்பார்கள் என்று ராஜ்குமார் போன்ற இயக்குனர்கள் அவ்வபோது நிரூபித்துக்கொண்டு தான் இருக்கிறார்கள்.

 

  15 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்