Home  |  திரை உலகம்

பட்டத்து யானை ( Pattathu Yaanai )

பட்டத்து யானை ( Pattathu Yaanai )

Movie Name: Pattathu Yaanai பட்டத்து யானை
Hero: VISHAL
Heroine: Aishwarya Arjun
Year: 2013
Movie Director: BOOPATHY PANDIAN
Movie Producer: GLOBAL INFOTAINMENTS
Music By: THAMAN


திருச்சி மலைக்கோட்டை வரும் ஹீரோ, அங்கே ஒரு அழகான பெண் அவளைப் பார்த்ததும் காதல், அவளுக்கு ரவுடிகளால் பிரச்சினை, பிரச்சினைகளையே போத்திக்கிட்டுத் தூங்கும் ஹீரோ உதவப் போகிறார். படத்தின் ஹீரோ என்று நியாயமாக சந்தானத்தின் பெயரைத்தான் போட்டிருக்க வேண்டும். அவ்வளவாக சிரிப்பு வரவில்லைதான் என்றாலும் அவரும் மயில்சாமியும் மட்டும் இல்லாமலிருந்திருந்தால் பார்ப்பவர் கழுத்தில் ரத்தம் வந்திருக்கும்! முதலாளி சந்தானத்தை திருச்சிக்கு ஓட்டல் வைக்கலாம் என்று கூட்டி வரும் விஷால் அன்ட் கோ,

திருச்சியில் இறங்கியதும் சந்தானத்தின் பணத்தை பத்திரமாக வைத்திருப்பதாகச் சொல்லி வாங்கிக் கொண்டு அவரை மட்டும் ஸ்ரீரங்கத்துக்குப் போகச் சொல்கிறார்கள். அவரும் போகிறார். நீங்க ஓட்டல்ல சாப்பிட்டுக்கிட்டே இருங்க, நாங்க பணத்தோட வர்றோம் என்று கூறுகிறார்கள். அவரும் சாப்பிட ஆரம்பிக்கிறார். ஹீரோ விஷால், ஹீரோயின் ஐஸ்வர்யாவைப் பார்த்து கொண்டே பணத்தைக் கோட்டை விடுகிறார். அதைத் தேடுகிறோம் பேர்வழி என இவர்கள் அடிக்கிற கூத்து, சிரிப்புக்கு பதில் மகா கோபத்தை வரவழைக்கிறது. விஷால் ஏதோ மெஷின் மாதிரி வருகிறார். அடிஅடியென்று அடிக்கிறார். சத்தம் காது கிழிகிறது.

நியாயமாக அந்த அடிக்கு அப்போதே வில்லன்கள் அத்தனைபேரும் செத்து படமும் முடிந்திருக்க வேண்டும். மெயின் வில்லனைப் பார்த்ததும் யார்றா இவன் ஜெராக்ஸ் எடுத்த காட்ஸில்லா மாதிரி என்று வர்ணிப்பார் சந்தானம். அந்தக் காட்சியில் அந்த வில்லன் நிஜமாகவே அப்படித்தான் தெரிகிறார். இடைவேளை கடந்து படம் க்ளைமாக்ஸை நெருங்க நெருங்க, வில்லன்களும் அவர்களின் அடியாட்களும் பக்கா காமெடியன்களாகி விட்டது. ஏற்கெனவே நொண்டியடிக்கும் திரைக்கதையை இன்னும் தடுமாற வைக்கிறது தமனின் இசை.

  16 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்