Home  |  அறுசுவை

புரோட்டா சால்னா (Parotta Salna)

தேவையானவை :

 

 சிக்கன்- 1/2 கிலோ

இஞ்சி பூண்டு விழுது - 4 ஸ்பூன்

முந்திரி குருணை - 8 ஸ்பூன்

மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்

மிளகாய் தூள் - 2 ஸ்பூன்

கொத்தமல்லி - 2 கைப்பிடி

புதினா - 2 கைப்பிடி

பச்சை மிளகாய் - 4

கிராம்பு -4

அன்னாசி பூ - 2

பட்டை - 1 துண்டு

ஏலக்காய் -3

பிரிஞ்சி இலை -1

பெரிய ஏலக்காய் - 3

எண்ணெய்- 4 டேபிள் ஸ்பூன்

தக்காளி - 2

வெங்காயம் - 4

தேங்காய் - 1/2 மூடி

நிலக்கடலை - 50 கிராம்

கசகசா - 3 ஸ்பூன்

 

செய்முறை

 

1.வறுத்து தோலுரித்த நிலக்கடலையை தேங்காயுடன் சேர்த்து மிக்ஸ்சியில் மைபோல் அரைத்துக்கொள்ளவும். கசகசாவை நீர் ஊற்றி கொதிக்க விட்டுஆறியதும் முந்திரி குருணையுடன் அரைத்துக்கொள்ளவும்.

2.ஒரு அடி கனமான பாத்திரத்தில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் பட்டை,ஏலக்காய், அன்னாசிபூ, பிரிஞ்சி இலை, கிராம்பு, பெரிய ஏலக்காய் ஆகியவற்றை போடவும்.பின்னர் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும், பின் இஞ்சி,பூண்டு சேர்த்து வதக்கவும்.அதில் பச்சைமிளகாய், கொத்தமல்லி,புதினா சேர்த்து சுருள வதக்கவும்.

3.தக்காளியை பிழிந்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்பின் மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து அடிபிடிக்காமல் கிளறவும்.சிக்கனை போட்டு 2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.இப்போது எண்ணெய் பிரிந்து மேல வரும். அடுப்பை அணைத்துவிட்டு மெதுவாக மேலே உள்ள எண்ணெயை ஸ்பூன் கொண்டு எடுக்கவும். மீண்டும் அடுப்பில் வைத்து அரைத்த விழுதுகளை சேர்த்து வாசனை போக கொதிக்கவிட்டு இறக்கவும்.

Parotta Salna

Ingredients for Parotta Salna:

 

Chicken-1/2 Kg

Ginger, Garlic Paste-4 Spoons

Cashew Nut Paste-8 Spoons

Turmeric Powder-1/2 Spoon

Chilly Powder-2 Tsp

Coriander- 2 Hand Pinch

Mint-2 Hand Bunch

Green Chilly-4

Cloves-4

Star Anise-2

Cinnamon-1 Piece

Cardamom-3

Bay Leaf-1

Large Cardamom-3

Oil-4 Tbsp

Tomato-2

Onion-4

Coconut-1/2 Cup

Peanut-50 G

Poppy Seed-3 Spoons

 

Procedure to make Parotta Salna:

 

1. Grind the fried peanut along with coconut very finely. Boil the poppy seed together with water and grind them.

2. Heat oil in a deep pan, add cinnamon, cardamom, star anise, bay leaf, cloves and large cardamom. Then add onion and saute till get golden color. Then add ginger and garlic and fry for a while. Add green chilly, coriander, mint and saute well.

3. Then add tomato and saute till oil floats on top. Then add turmeric powder, chilly powder and stir frequently. Now add the chicken and pour 2 cup of water. Now oil starts to float on top. Switch off the stove and remove the floating oil by using spoon. Now again put the pan on stove and add the ground paste and let to boil till the raw smell subsides and then remove from flame.

 

 

 

 

  13 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!