Home  |  திரை உலகம்

பராசக்தி

 

படத்தின் பெயர்- பராசக்தி
வருடம்- 17 அக்டோபர் 1952 ஆம் ஆண்டு 
கதாநாயகன்- சிவாஜி கணேசன் 
கதாநாயகி- பண்டரி பாய்
இயக்கம்- ஆர்.கிருஷ்ணன், எஸ். பஞ்சு
தயாரிப்பு- ஏ.வி.மெய்யப்பன், பி.ஏ. பெருமாள் முதலியார்
படத்தின் கதை:இரண்டாம் உலகப் போர் நடந்து கொண்டிருந்த 1942 ஆண்டு சமயம். ஞானசேகரன், சந்திரசேகரன், குணசேகரன் மூவரும் சகோதரர்கள். 
பிழைப்புக்காக ரங்கூன் சென்றிருக்கிறார்கள். அவர்களின் ஒரே தங்கை கல்யாணியின் திருமணத்திற்காக மூவரும் மதுரை வர தயாராகிறார்கள். போர் 
நடப்பதால் கப்பலில் பயணம் செய்ய ஒருவருக்கு மட்டும் இடம் கிடைக்க குணசேகரன் மட்டும் பயணமாகிறார். போர் காரணமாக பல மாதங்கள் தாமதமாகி 
சென்னை வந்தடைகிறது கப்பல்.மதுரை ரயிலுக்கு டிக்கட் கிடைக்காததால் ஹோட்டலில் ஒரு நாள் தங்குகிறார் குணசேகரன். அங்கு ஒரு வஞ்சியால் 
கவரப்பட்டு பணத்தை இழக்கிறான்.ஒரு வழியாக சொந்த ஊருக்கு வந்தடைகிறான். அங்கு கணவனை இழந்து, தந்தையையும் இழந்து கைக்குழந்தையுடன் 
குடிசை வீட்டில் தங்கி இட்லி வியாபாரம் செய்து வாழ்ந்து வருகிறாள் தங்கை கல்யாணி.குழந்தைக்கு ஆறுதல் சொல்லும் கல்யாணியின் நம்பிக்கையில் 
மண் அள்ளி போட விரும்பாமல் அவளிடமும் பைத்தியமாக நடித்து, அவளுக்கு காவலாக இருக்கிறான் குணசேகரன்.வறுமையைப் பயன்படுத்தி 
கல்யாணியை நாசமாக்க துடிக்கும் மைனரை குணசேகரன் உதைக்கிறான்.  மனம் நொந்து பராசத்தி கோவிலுக்கு போகிறாள் கல்யாணி. அவளை மானபங்க 
படுத்த முயல்கிறான் கோவில் பூசாரி. அவனிடமிருந்து தப்பித்து செல்லும் கல்யாணி தற்கொலை செய்து கொள்ள முயல்கிறாள். ஆனால் காவலரால் 
காப்பாற்றப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்படுகிறாள். அங்கு அவளை இன்னாரென்று அறிகிறான் நீதிபதியான அண்ணன் சந்திரசேகரன். அதே நேரத்தில் 
தங்கைக்காக கோவில் பூசாரியை தாக்கிவிட்டு நீதிமன்றத்தில் குற்றவாளியாக நிற்கிறான் குணசேகரன். குணசேகரனின் உணர்ச்சி மிக்க நீதிமன்ற 
வசனத்தின் முடிவில், கல்யாணியின் குழந்தை குணசேகரனின் காதலியால் காப்பாற்றப்பட்டது தெரிய வருகிறது. வழக்கு முடிவுக்கு வர கல்யாணியும், 
குணசேகரனும் சந்திரசேகரனிடம் சேர்கிறார்கள். பிச்சைக்காரர்கள் மாநாட்டிற்கு பொருளுதவி கேட்டு வரும் ஞானசேகரனும் அவர்களுடன் வந்து சேர்ந்து 
விடுகிறார். 

 

படத்தின் பெயர்- பராசக்தி

வருடம்- 17 அக்டோபர் 1952 ஆம் ஆண்டு 

கதாநாயகன்- சிவாஜி கணேசன் 

கதாநாயகி- பண்டரி பாய்

இயக்கம்- ஆர்.கிருஷ்ணன், எஸ். பஞ்சு

தயாரிப்பு- ஏ.வி.மெய்யப்பன், பி.ஏ. பெருமாள் முதலியார்

 

படத்தின் கதை:

 

     இரண்டாம் உலகப் போர் நடந்து கொண்டிருந்த 1942 ஆண்டு சமயம். ஞானசேகரன், சந்திரசேகரன், குணசேகரன் மூவரும் சகோதரர்கள். பிழைப்புக்காக ரங்கூன் சென்றிருக்கிறார்கள். அவர்களின் ஒரே தங்கை கல்யாணியின் திருமணத்திற்காக மூவரும் மதுரை வர தயாராகிறார்கள். போர் நடப்பதால் கப்பலில் பயணம் செய்ய ஒருவருக்கு மட்டும் இடம் கிடைக்க குணசேகரன் மட்டும் பயணமாகிறார். போர் காரணமாக பல மாதங்கள் தாமதமாகி சென்னை வந்தடைகிறது கப்பல்.மதுரை ரயிலுக்கு டிக்கட் கிடைக்காததால் ஹோட்டலில் ஒரு நாள் தங்குகிறார் குணசேகரன்.

 

     அங்கு ஒரு வஞ்சியால் கவரப்பட்டு பணத்தை இழக்கிறான்.ஒரு வழியாக சொந்த ஊருக்கு வந்தடைகிறான். அங்கு கணவனை இழந்து, தந்தையையும் இழந்து கைக்குழந்தையுடன் குடிசை வீட்டில் தங்கி இட்லி வியாபாரம் செய்து வாழ்ந்து வருகிறாள் தங்கை கல்யாணி.குழந்தைக்கு ஆறுதல் சொல்லும் கல்யாணியின் நம்பிக்கையில் மண் அள்ளி போட விரும்பாமல் அவளிடமும் பைத்தியமாக நடித்து, அவளுக்கு காவலாக இருக்கிறான் குணசேகரன்.வறுமையைப் பயன்படுத்தி கல்யாணியை நாசமாக்க துடிக்கும் மைனரை குணசேகரன் உதைக்கிறான்.  மனம் நொந்து பராசத்தி கோவிலுக்கு போகிறாள் கல்யாணி.

 

     அவளை மானபங்க படுத்த முயல்கிறான் கோவில் பூசாரி. அவனிடமிருந்து தப்பித்து செல்லும் கல்யாணி தற்கொலை செய்து கொள்ள முயல்கிறாள். ஆனால் காவலரால் காப்பாற்றப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்படுகிறாள். அங்கு அவளை இன்னாரென்று அறிகிறான் நீதிபதியான அண்ணன் சந்திரசேகரன்.அதே நேரத்தில் தங்கைக்காக கோவில் பூசாரியை தாக்கிவிட்டு நீதிமன்றத்தில் குற்றவாளியாக நிற்கிறான் குணசேகரன். குணசேகரனின் உணர்ச்சி மிக்க நீதிமன்ற வசனத்தின் முடிவில், கல்யாணியின் குழந்தை குணசேகரனின் காதலியால் காப்பாற்றப்பட்டது தெரிய வருகிறது. வழக்கு முடிவுக்கு வர கல்யாணியும், குணசேகரனும் சந்திரசேகரனிடம் சேர்கிறார்கள். பிச்சைக்காரர்கள் மாநாட்டிற்கு பொருளுதவி கேட்டு வரும் ஞானசேகரனும் அவர்களுடன் வந்து சேர்ந்து விடுகிறார். 

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்