Home  |  திரை உலகம்

பப்பாளி ( Pappali )

பப்பாளி ( Pappali  )

Movie Name: Pappali பப்பாளி
Hero: Senthil Kumar
Heroine: Ishara Nair
Year: 2014
Movie Director: A. Govindamurthy
Movie Producer: Arasur Movies
Music By: Vijay Ebenezer


ஐ.ஏ.எஸ் தேர்வு எழுதி கலெக்டராக ஆசைப்படும் ஒரு படிப்பாளியின் கதைக்கு ‘பப்பாளி’ என இரட்டை அர்த்த தலைப்பு வைத்திருக்கிறார் இயக்குனர். கையேந்தி பவன் நடத்தி வரும் இளவரசுவின் மகன் செந்தில். ஐஏஸ் தேர்வு எழுதி கலெக்டராக வேண்டும் என்பதுதான் இவருடைய லட்சியம். அதே சமயம் ஒரு சில காதல் தேர்வுகளையும் எழுதி அதில் தோல்வியடைகிறார். அதன் பின் இஷாராவைப் பார்த்ததும் அவர் மீது காதல் வயப்பட்டு மீண்டும் ஒரு காதல் தேர்விற்கு முயற்சிக்க, இந்த முறை தேர்வில் வெற்றி பெற்று விடுகிறார். இஷாராவும், செந்திலும் காதலர்களாகிறார்கள். ஒரு சந்தர்ப்பத்தில் காதலன் செந்திலை, இஷாரா அவருடைய அம்மா சரண்யாவுக்கு அறிமுகப்படுத்தி வைக்கிறார். அப்போது கலெக்டர் ஆவதுதான் தனது லட்சியம் என்கிறார் செந்தில். அதனால், மகளின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்.

வருங்கால மருமகன் கலெக்டர் ஆனால் பெருமைதானே, ஏன் சரண்யா எதிர்க்கிறார் என்பதற்கு ஒரு பிளாஷ்பேக். சரண்யாவும் , நரேனும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். நரேனுக்கு மிகப் பெரிய விஞ்ஞானி ஆக வேண்டும் என்பதுதான் கனவு. ஆனால், பெற்றோர்களை எதிர்த்து திருமணம் செய்து கொண்ட பின், குடும்ப சூழ்நிலை காரணமாக அவரது லட்சியம் வீணாகப் போய் அவர் ஒரு சாதாரண வேலைக்குப் போய்விடுகிறார். எங்கே, தனது கணவரின் லட்சியம் வீணானது போல் செந்திலின் ஐஏஎஸ் கனவும் வீணாகிப் போய் விடக் கூடாதென்றுதான் இஷாரா – செந்தில் காதலுக்கு சம்மதிக்க மறுக்கிறார். செந்திலின் காதலுக்கு அவருடைய அப்பா எதிர்ப்பு தெரிவிப்பதால், இருவருக்கும் திருமணம் செய்து வைத்து விடுகிறார் சரண்யா. அதோடு, மருமகன் செந்தில் ஐஏஎஸ் தேர்வு எழுதுவதற்கும் பின்னணியில் இருந்து உதவுகிறார். அதே சமயம், மகன் செந்தில் வீணாகப் போக வேண்டும் என்று இளவரசு சாபம் கொடுக்கிறார்.

செந்தில் ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றாரா, இல்லையா என்பதுதான் படத்தின் மீதி கதை. சீரியலில் எப்படி நடித்தாரோ அப்படியேதான் நடிக்கிறார். ஒரு மெகா தொடரில் நடித்தவரை நாயகனாக போட்டுப் பெரிய திரையில் படமாகக் காட்டினாலும் ஏதோ ஒரு சீரியலையே பெரிய திரையில் பார்ப்பது போல்தான் இருக்கிறது. முதல் இரண்டு படங்களில் இயக்குனர் மூர்த்தியின் படங்கள் பேசப்பட்டதற்கு வடிவேலுவின் நகைச்சுவையும் ஒரு காரணம். இந்தப் படத்தில் வடிவேலு இடத்தில் சிங்கம் புலி. அவரும் முடிந்த அளவிற்கு சிரிக்க வைக்க முயற்சிக்கிறார். அரசியலைப் பற்றியும், காதலைப் பற்றியும் அவர் சொல்லும் ‘கொள்கை’ வசனங்கள் கைதட்டலைப் பெறுகின்றன. நாயகனின் நண்பனாக ஜெகன். நாமும் ஒரு படத்திலாவது நம்மை சிரிக்க வைத்து விடுவார் என பார்க்கிறோம், மனிதர் அசர மாட்டேன் என்கிறார், இடைவேளைக்குப் பின் படத்திற்கு நாயகன், நாயகி எல்லாமே சரண்யாதான். தன்னால்தான் கணவன் விஞ்ஞானி ஆக முடியவில்லையே என்ற ஏக்கத்தை, மருமகன் செந்திலை வைத்து தீர்த்துக் கொள்ள வைக்கும் கதாபாத்திரம். பல படங்களில் நாயகர்களின் அம்மாவாக நடித்து மனதைக் கவர்ந்தவர், நாயகனின் மாமியாராகவும் நடித்து பெயர் வாங்கிவிட்டார். தேசிய விருது பெற்ற இவரிடமிருந்தாவது செந்திலும், இஷாராவும் கொஞ்சம் நடிப்பைக் கற்றுக் கொள்ளலாம். சரண்யாவின் கணவராக ஆடுகளம் நரேன், இயல்பான அப்பா கதாபாத்திரம். இளவரசுவும், அவருடைய மனைவியாக நடித்திருப்பவரும் யதார்த்தமாக நடித்திருக்கிறார்கள்.

  14 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
நாளை மெர்சல் இசை வெளியீடு... விஜய் பேசப் போகும் அரசியல் என்ன?
'விவேகம்' புயலை கண்டு பயந்து ஓடிய படங்கள்
மெர்சல் ரிலீசாகாது..!இப்படி ஒரு பிரச்சனையா!..
தளபதி ரசிகர்களுக்கு ஓர் இன்ப அதிர்ச்சி- மெர்சல் ஸ்பெஷல்
'விவேகம்' ட்ரெய்லர்ல இதையெல்லாம் கவனிச்சீங்களா..? #VivegamTrailer
BiggBossல் இருந்து வெளியேறிய ஷக்தியின் முதல் பதிவு- இனி தான் என் ரியல் கேம் ஆரம்பம்
ஓவியாவை பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேற்ற இதுவே காரணம்..!
மெர்சல் படக்குழுவினர்களுக்கு விஜய் கொடுத்த சூப்பர் சர்ப்ரைஸ்
விவேகம் படத்தை பார்த்த பிறகு அஜித்தின் ரியாக்‌ஷன் இதுதான்
விஜய் படைத்த பிரமாண்ட சாதனை, தமிழகத்தில் தளபதி படம் மட்டுமே நிகழ்த்திய சாதனை