Home  |  திரை உலகம்

பண்ணையாரும் பத்மினியும் ( Pannaiyarum Padminiyum )

பண்ணையாரும் பத்மினியும் ( Pannaiyarum Padminiyum )

Movie Name: Pannaiyarum Padminiyum பண்ணையாரும் பத்மினியும்
Hero: VIJAY SETHUPATHI
Heroine: IYSHWARYA RAJESH
Year: 2014
Movie Director: S. U. Arun Kumar
Movie Producer: M R Ganesh
Music By: Justin Prabhakaran


வசதிகள் அதிகமற்ற கிராமத்து மக்களுக்கு பண்ணையார்தான் (ஜெயப் பிரகாஷ்) எல்லாமே. கேட்கும்போது உதவி மட்டுமல்ல, தன் வீட்டில் டி.வி., போன் போன்ற எல்லாப் பொருட்களையும் மக்கள் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கும் அளவுக்குப் பாசக்காரப் பண்ணையார். பாம்பு கடித்த சிறுவனை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல ஊரே திரண்டு வந்து பண்ணையாரிடம் உதவி கேட்கிறது. 'வண்டியை எடுங்கள்' என்று பண்ணையார் உத்தரவிடும்போது காரை ஒட்ட ஆளில்லாமல் தவிக்கிறார்கள்.

டிராக்டர் ஓட்டத் தெரிந்த முருகேசனை (விஜய் சேதுபதி) அழைத்து வருகிறார்கள். காரின் மீது பண்ணையாருக்கும் முருகேசனுக்கும் அளவு கடந்த பாசம் ஏற்பட்டுவிடுகிறது. ஒரு கட்டத்தில் காரைப் பிரிய நேர்கிறது. அடிதடி, வெட்டு, குத்து, பஞ்ச் வசனங்கள் இல்லாமல் படம் எடுத்துள்ளதற்காகவே அவரைப் பாராட்டலாம். கார் மீது மோகம் என்பதைத் தாண்டி அன்பைப் பொழிகிறார்கள் பண்ணையாரும் முருகேசனும். காருக்கு ஒன்று என்றால் உருகுகிறார்கள். தன் திருமண நாளுக்குள் காரை ஓட்டக் கற்றுக்கொண்டு மனைவியைக் கோயிலுக்கு அழைத்து செல்ல வேண்டும் என்பது பண்ணையாரின் ஆசை. கணவன் ஓட்டினால்தான் காரில் ஏறுவேன் என்பது மனைவியின் பிடிவாதம்.

கார் ஓட்டக் கற்றுக் கொடுத்தால், பண்ணையார் தன்னைக் காரிடமிருந்து பிரித்துவிடுவார் என்பது முருகேசனின் அச்சம். இந்தச் சிக்கலை நன்றாகச் சித்தரித்திருக்கிறார் இயக்குநர். விஜய் சேதுபதியின் ஜோடி ஐஸ்வர்யா ராஜேஷ் அவ்வப்போது வருவதும் போவதுமாகஇருக்கிறார். இளம் ஜோடி படத்தில் இருந்தாலும், நடுத்தர வயதைக் கடந்த பண்ணையாருக்கும் அவர் மனைவிக்குமான காதலை இளம் இயக்குநர் அற்புதமாகச் சித்தரித்திருக்கிறார். உள்ளத்தை காட்டிய அத்தகைய அரிதான காதலின் சிறப்பான பதிவு. பண்ணையாரின் திருமண நாளுக்கு முன்பாகவே கார் கைவிட்டுப் போவதை அடுத்துச் செய்வதறியாது தவிப்பதில் ஒவ்வொருவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

பண்ணையாரின் வீட்டு வேலைக்காரனாகவும், காருக்கு கிளீனராகவும் வரும் பால சரவணன், பீடை என்ற கதாபாத்திரத்தில் கலக்குகிறார். மூட நம்பிக்கையை காமெடி என்ற பெயரில் தூக்கிப் பிடித்திருப்பது பீடை.. பீடை என்று படம் முழுக்க ஒருவரைச் சொல்கிறார்கள். அவர் 'பீடை' தான் என்பதைக் காட்சிகளின் மூலம் நிரூபிக்கிறார் இயக்குநர். ஜஸ்டின் பிரபாகரன் இசையில் 'எங்க ஊரு வண்டி', 'உனக்காகப் பொறந்தேனே' ஆகிய பாடல்கள் மனதை வருடுகின்றன. இரண்டாம் பாதிஅதிகம்.

  15 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
மெர்சல் ரிலீசாகாது..!இப்படி ஒரு பிரச்சனையா!..
தளபதி ரசிகர்களுக்கு ஓர் இன்ப அதிர்ச்சி- மெர்சல் ஸ்பெஷல்
'விவேகம்' ட்ரெய்லர்ல இதையெல்லாம் கவனிச்சீங்களா..? #VivegamTrailer
BiggBossல் இருந்து வெளியேறிய ஷக்தியின் முதல் பதிவு- இனி தான் என் ரியல் கேம் ஆரம்பம்
ஓவியாவை பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேற்ற இதுவே காரணம்..!
மெர்சல் படக்குழுவினர்களுக்கு விஜய் கொடுத்த சூப்பர் சர்ப்ரைஸ்
விவேகம் படத்தை பார்த்த பிறகு அஜித்தின் ரியாக்‌ஷன் இதுதான்
விஜய் படைத்த பிரமாண்ட சாதனை, தமிழகத்தில் தளபதி படம் மட்டுமே நிகழ்த்திய சாதனை
BiggBossல் ஜுலி தான் ஜெயிப்பார்- பிரபல நடிகரின் டுவிட்
விவேகம் இரண்டாவது பாடல் பற்றி அனிருத் அதிரடி தகவல்