Home  |  ஆன்மிகம்

பஞ்ச பூத தலங்கள் !!

பஞ்ச பூத தலங்கள் !!

நாம் வாழும் பிரபஞ்சம் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்ற ஐந்து பெரும் சக்திகளால் ஆனது. இந்த ஐந்து சக்திகளுக்கும் உலகை ஆக்கும் வல்லமையும், காக்கும் வல்லமையும், அழிக்கும் வல்லமையும் உண்டு.

 

இந்த சக்திகளின் வல்லமையை கருத்தில் கொண்டு ஐம்பெரும்சக்திகள் என்றும் தமிழில் அழைப்பதைப் போல சமஸ்கிருதத்தில் பஞ்சபூதங்கள் என்றும் கூறுகிறார்கள். இந்த ஐம்பூதங்களின் அதிபனாக இறைவனான சிவபெருமான் வீற்றிருக்கும் தென் இந்தியாவின் ஐந்து கோவில்கள் பஞ்சபூத சிவதலங்களாக விளங்குகின்றன.

 

பிருத்விதலம் (நிலம்)

தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தியாகராஜர் அல்லியங்கோதை திருக்கோயில் பிருத்விதலமாக விளங்குகிறது. சுந்தர மூர்த்தி நாயனார் நட்பு கொண்டவர், அப்பர் சுவாமிகளால் பாடல்பெற்றவர் தியாகராஜர். பிருத்வி என்றால் மண்ணாகும். இங்குள்ள இறைவனை பிருத்விலிங்கம் என்றும், புற்று மண்ணால் ஆன லிங்கரூபாக இறைவன் காட்சி தருகிறார் என்பதால் புற்றிடங் கொண்ட நாதர் என்றும் விசேஷமாக வழங்கப்படுகிறார்.

 

அப்புதலம் (நீர்)

தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள ஐம்புலிங்கேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயில் அப்புதலமாக விளங்குகிறது. இத்திருக்கோயில் திருவானைக்காவல் என்றும் அழைக்கபடுகிறது. அப்பு என்றால் நீராகும். உமையம்மை ஈசனை வணங்க நீரைக் கொண்டு லிங்கம் செய்தார், இந்த லிங்கம் அப்புலிங்கம் என அழைக்கப்படுகிறது. இறைவன் நீர்வடிவான அப்புலிங்கமாக தோன்றி அருள் செய்த தலம்.

 

தேயுதலம் (நெருப்பு)


தமிழ்நாட்டில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அருணாசலேஸ்வரர் உண்ணாமுலையம்மை திருக்கோயில் தேயுதலமாக விளங்குகிறது. தேயு என்றால் நெருப்பாகும். பிரம்மாவிற்கும் விஷ்ணுவிற்கும் இடையே யார் பெரியவர் எனும் போர் நிகழந்த போது, அடிமுடி காணமுடியாத நெருப்பாக உயர்ந்து தானே பெரியவன் என்று சிவபெருமான் உணர்த்தினார். பிரம்மாவிற்கும், விஷ்ணுவிற்கும் இறைவன் நெருப்பாக தோன்றி அருள் செய்த தலம் இது.

 

வாயுதலம் (காற்று)

ஆந்திராவில் மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள காளஹஸ்தீஸ்வரர் ஞானப் பூங்கோதை திருக்கோயில் வாயுதலமாக விளங்குகிறது. இங்கு சிலந்தி, பாம்பு, யானை என உயிர்கள் வழிபட்டு சிவபெருமானை அடைந்த தலம். இந்த உயிர்களின் பெயரான ஸ்ரீ (சிலந்தி), காள (பாம்பு), ஹஸ்தி (யானை) என்பதை கொண்டு இவ்வூர் அழைப்படுகிறது. இறைவன் வாயுலிங்கமாக காட்சி தரும் தலம் இது.

 

ஆகாசதலம் (ஆகாயம்)

தமிழ்நாட்டில் சிதம்பரம் மாவட்டத்தில் உள்ள நடராசர் சிவகாமியம்மை திருக்கோயில் ஆகாசதலமாக விளங்குகிறது. அருள்மிகு நடராஜர் கோலத்தில் உலகில் ஐந்தொழில் செய்யும் திருக்கோலத்தில் சிவபெருமான் இருக்கிறார். மாணிக்கவாசரின் பாடலை எழுதி சிற்றம்பலத்தான் என இறைவனே கையெழுத்து இட்டு அருள் செய்த தலம். சித் என்றால் அறிவு, அம்பரம் என்று வெளி,. நீக்கமற எங்கும் நிறைந்திருக்கும் இறைவன் ஆகாயமாக அருள் தரும் தலம் இது.

 

  19 May 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
யார் யாருக்கு வரும் 2017-ம் ஆண்டு சிறப்பாக இருக்கும்....!
ஆடி மாதமும் நமது முன்னோர் ஆற்றலும் !!
ஓம் நமசிவாய - சிவ துதி !!
அருணகிரிநாதரின் சிவ பாடல் !!
லிங்கம் சிவ லிங்கம் !!
திருமுருகன் பூண்டி கோவில் கும்பாபிஷேகம் !!
சிவ சரணம் துதி பாடல் !!
தென்கயிலாயம் வெள்ளியங்கிரியான்டவர் !!
திருநள்ளார் தெர்பாராண்யேஸ்வரர் கோயில் !!
திருவண்ணாமலை முக்தி தலம் !!