Home  |  திரை உலகம்

பாண்டிய நாடு - திரைவிமர்சனம்

நடிகர் : விஷால்

 

நடிகை : லட்சுமி மேனன்

 

காமெடி : சூரி

 

இயக்கம் : சுசீந்திரன்

 

இசை : டி. இமான்

 

மதுரையில் நடுத்தரக் குடும்பத்தில் அப்பா, அம்மா, அண்ணன்-அண்ணி, அண்ணனின் குழந்தை என ஒரே கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வருகிறார் நாயகன் விஷால். இவர் மிகவும் பயந்த சுபாவம் கொண்டவராக படம் முழுக்க வருகிறார். ஹீரோ வீட்டிற்கு மேலேயே குடியிருக்கிறார் ஹீரோயின் லட்சுமி மேனன். செல்போன் கடையில் வேலைபார்க்கும் விஷால் தன் அண்ணனுடைய குழந்தையை ஸ்கூலுக்கு விடப்போகும்போது அங்கு டீச்சராக வரும் லட்சுமிமேனனை பார்க்கிறார். பார்த்ததும் காதலில் விழுந்துவிடுகிறார்.

 

தன்னுடைய காதலை லட்சுமிமேனனிடம் கூறினால், அவர் அதை ஏற்பதாக இல்லை. ஒருகட்டத்தில் ரவுடிகள் லட்சுமி மேனனுக்கு டார்ச்சர் கொடுக்க, அதற்கு லட்சுமிமேனன் விஷால் உதவியைநாட, விஷால் தன்னுடைய நண்பனான விக்ராந்த் மூலம் அந்த பிரச்சினையை சரிசெய்துகொடுக்க விஷால் மீது லட்சுமிமேனனுக்கு காதல் பற்றிக்கொள்கிறது.  

 

அந்த ஊரில் பிரபல தாதாவாக இருக்கும் ஒருவர் இறந்துவிடுகிறார். அவருக்கு பிறகு அந்த பதவியை வகிக்க இரண்டு ரவுடிகளிடேயே போட்டி நடக்கிறது. இதில் வில்லன் பரத் தனக்கு போட்டியாக வருபவனைக் கொன்று அந்த பதவிக்கு வருகிறார். மதுரையில் அந்த வில்லனுக்கு சொந்தமான கிரானைட் குவாரியில் நடக்கும் முறைகேட்டை தட்டிக்கேட்கும் விஷாலின் அண்ணனுக்கும், வில்லனுக்கும் சண்டை வருகிறது. இந்த சண்டையில் விஷாலின் அண்ணன் கொலை செய்யப்படுகிறார். 

 

மூத்த மகனின் சாவுக்கு வில்லன் பரத் தான் காரணம் என்பது அப்பா பாரதிராஜாவுக்கு தெரிய வருகிறது. எனவே, தன் மகனைக் கொன்றவனை பழிவாங்க கூலிப்படையை நியமிக்கிறார் பாரதிராஜா. ஒருகட்டத்தில் விஷாலுக்கும் தன் அண்ணனைக் கொன்றவன் வில்லன்தான் என்பது தெரியவர, விக்ராந்த் உதவியுடன் வில்லனைக் கொலை செய்ய முடிவெடுக்கிறார் விஷால். இறுதியில், விஷால் வில்லன் பரத்தை கொன்றாரா, விஷால், லட்சுமி மேனன் காதல் கதை என்னவாயிற்று என்பதை மண்மணம் மாறாமல் சொல்லியிருப்பதுதான் மீதி கதை.

 

எல்லா படங்களிலும் ஆக்சன் நாயகனாக வரும் விஷால், இந்த படத்தில் பயந்த சுபாவம் கொண்டவராக வில்லன்களை புரட்டும் விதம் செம...

 

விஷாலின் அப்பாவாக வரும் பாரதிராஜா தனது ஆழமான நடிப்பை வெளிபடுத்தியிருக்கிறார். 

 

டீச்சராக வரும் லட்சுமி மேனன் கதாநாயகியாக இருக்கவேண்டும் என்ற கட்டாயத்துக்காக வந்துவிட்டு போகிறார். இவரது பேச்சுகள் அழகு...

 

காமெடியில் ஒன் மேன் ஆர்மியாக களமிறங்கியிருக்கும் சூரி, படத்தில் நிறைய காட்சிகளில் வந்தாலும், கொஞ்ச இடங்களில்தான் சிரிக்க வைக்கிறார்.

 

விஷாலின் நண்பனாக வரும் விக்ராந்த், சிறிது நேரமே வந்தாலும் தனது கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்து முடித்திருக்கிறார்.

 

வில்லனாக வரும் பரத், படத்தில் ஒரு கலக்கு கலக்கி இருக்கிறார். இவரது ஒவ்வொரு முகபாவனைகளும் ரசிக்க வைக்கிறது.

 

டி. இமான் இசையில் பாடல்கள் அனைத்தும் பரவாயில்லை....

 

மொத்தத்தில் பாண்டிய நாடு "பரவாயில்லை"... 

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்