Home  |  திரை உலகம்

பாண்டிய நாடு ( Pandiya Naadu )

பாண்டிய நாடு ( Pandiya Naadu  )

Movie Name: Pandiya Naadu பாண்டிய நாடு
Hero: VISHAL
Heroine: LAKSHMI MENON
Year: 2013
Movie Director: SUSEENTHIRAN
Movie Producer: Vishal Film Factory
Music By: D.IMAAN

சென்ற ஆட்சிக் காலத்தில் கொடி கட்டிப் பிறந்த அரசியல் தாதாக்களின் கதையோடு இணைத்து.. அந்த ஆட்சிக் காலத்தில் மதுரை எப்படி இருந்தது என்பதையும் சொல்லாமல் சொல்லியிருக்கிறார். கிரானைட் கற்களை வெட்டியெடுக்கும் பிஸினஸில் அரசியல்வியாதிகள் தங்களது அல்லக்கைகள் மூலமாக என்றைக்கு தலையிட்டார்களோ அன்றைக்கே அது வளம் கொழிக்கும் பிஸினஸாகிப்போனது. இந்த ஆட்சிக் காலத்தில் ஏதோ ஒப்புக்கு நடவடிக்கை எடுப்பதுபோல் எடுத்து சீன் போட்டு.. ஒரே நாளில் அனைத்து வழக்குகளிலும் ஜாமீன் கொடுத்து கொள்ளையர்களை வீட்டுக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்.. கனிமவளத் துறையின் உதவி இயக்குநராக வேலை செய்யும் விஷாலின் அண்ணன், வில்லனின் அரசு அனுமதியின்றி நடத்தப்படும் கிரானைட் பிஸினஸை இழுத்து மூட வைக்கிறார்.. கோபம் கொண்ட வில்லன் விஷாலின் அண்ணனை கொலை செய்து அதனை விபத்து என்று செட்டப் செய்துவிடுகிறார். அடிதடி என்றாலே பத்து முறை யோசிக்கும் விஷால், தனது அண்ணனின் மரணத்துக்குப் பதிலடி கொடுக்க நினைக்கிறார். ஆனால் அது அடிதடியாகிப் போய் நாம் மாட்டிக் கொள்ளக் கூடாது என்று யோசித்து வில்லனின் கதையை வேறு வழியில் முடிக்க எண்ணுகிறார். அதே நேரம் அவருடைய அப்பா பாரதிராஜா, தனது மகனின் கொலைக்கு பழி வாங்க தானும் ஒரு வழியில் முயல்கிறார்.. இதில் யாருடைய முயற்சி வெற்றி பெற்றது என்பதுதான் கதை. ஒரு காதல் பாடல்கள் என்று இன்னொரு பக்கமும் கதையை நகர்த்தியிருக்கிறார் இயக்குநர். ஒரு பக்கம் வில்லனின் வாழ்க்கை வரலாற்றைச் சொல்லியபடியே இன்னொரு பக்கம் விஷாலின் குடும்பம், அவரது காதலின் தோற்றம், வளர்ச்சி பற்றியும் அழகாக கொண்டு போயிருக்கிறார்.

விஷாலின் கல்யாணப் பேச்சு நடக்கும் சமயமெல்லாம், வில்லன் மறுபுறத்தில் படுகொலைகளை நடத்திக் கொண்டிருக்கிறார். விஷாலின் காதல் துளிர்க்கும்போதுதான் அவரது அண்ணனின் குணம் வெளிப்படுகிறது. தனது காதலுக்கு உதவிய நண்பனுக்கு ஒரு உதவியைச் செய்யப் போகும் அந்தக் காட்சியின் தொடர்ச்சி, விஷாலின் வீடு தேடி வரும் வில்லனின் அடியாளை வழியிலேயே போட்டுத் தள்ள முயல்கிறது. இதற்கு அடுத்தடுத்த காட்சிகளாக மருத்துவமனையில் அடியாள். விஷால் அண்ணன் கதை முடியும் காட்சியும் தொடர்ச்சியாக வர திரைக்கதையின் ஓட்டத்தில் நம்மை ஆழ்த்துகிறது.
துவக்கத்தில் வரும் கேங் லீடர் இறப்பு காட்சியில்கூட அந்தப் பாடலை எடுக்க வேண்டியவிதத்தில் எடுத்துக் காட்டியிருக்கிறார். இயக்குநர் இமயம் இதில் ஒரு தகப்பனாக வாழ்ந்து காட்டியிருக்கிறார். மகனின் மரணத்தைத் தொடர்ந்து இவர் காட்டுகின்ற நடிப்பு , மருத்துமனையில் கையெழுத்திட மறுத்து பேசும் பேச்சு , தனது நண்பரிடம் உதவி கேட்டுச் சென்று பேசுவது , லோக்கல் ரவுடிகளை தேடிச் சென்று பேசுவது , என்று அத்தனையிலும் ஒரு சராசரி தகப்பனை பிரதிபலித்திருக்கிறார் பாரதிராஜா.

விஷாலுக்கு இதற்கு முன் கிடைத்ததெல்லாம் இயக்குநர்கள் அவருக்காக கொடுத்த வேடம்.. இது சொந்தப் படம் என்பதாலும், ஜெயித்தாக வேண்டிய கட்டாயம் அவருக்கு இப்போது இருப்பதாலும் இயக்குநரின் கைகளில் தன்னை ஒப்படைத்துவிட்டு தான் நினைத்ததை சாதித்திருக்கிறார். லஷ்மி மேனன் படத்துக்கு படம் மின்னுகிறார். சேலை அணிந்து வந்தால் எந்தப் பெண்ணும் பெரியவளாகத்தான் தெரிவார்கள்.. இதில் பார்த்தவுடன் காதல் வருவதை போல பாடலையும் வைத்து லஷ்மியையும் ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குநர் அழகுதான். லைன்மேனை கரெக்ட் செய்து கரண்ட்டை கட் செய்து மொட்டை மாடியில் தனக்குத்தானே பில்டப் கொடுக்கும் காட்சிகளும் , பிரதர்கூட புதருக்குள்ள என்னடி பேச்சு என்ற சூரியின் டைமிங்கான காமெடியும் அந்தக் காட்சியை பெரிதும் ரசிக்க வைக்கின்றன. இந்தக் காதல் இல்லாமல் இருந்திருந்தால்கூட படம் நன்றாகத்தான் இருந்திருக்கும்.

இதிலும் பிற்பாதியில் வரும் 'பை பை' பாடலில் லஷ்மியின் குத்தாட்டமும், பாடலை படமாக்கியிருக்கும்விதமும் ரசிக்கத்தான் வைக்கிறது..! இமான் வழக்கம்போல ஏமாற்றவில்லை. ஒத்தக்கடை' பாடலின் காட்சிகள் முழுவதும் தெற்குத் தெரு அருகில் படமாக்கப்பட்டிருப்பதுபோல தெரிகிறது. ஆனாலும் பிரேமில் வெளியாள் ஒருத்தரைக்கூட காட்டாமல் எடுத்திருக்கிறார். கிளைமாக்ஸ் சண்டை காட்சியில் விஷாலின் கோபம் மட்டுமே வெளிப்பட வேண்டும் என்பதை மனதில் வைத்து அனல் அரசு ஆக்சன் காட்சிகளை வைத்திருக்கிறார் போலும்.. சினிமா சண்டையாக நினைத்தும், வில்லன் வீழ்வது சினிமாவின் கட்டாயம் என்பதாலும் இதனை விமர்சிக்கவே முடியாது. யார் கொலைகளைச் செய்தார்கள் என்பதை கண்டுபிடிக்கவே முடியாத சூழலை ஏற்படுத்திவிட்டிருப்பதாக இயக்குநர் இறுதியில் சொல்கிறார். அனைத்துத் திரைப்படங்களும் சொல்வதை போலவே இந்தப் படமும் அடியாட்களை மட்டுமே வதம் செய்கிறது.. இந்த ஊழலுக்கும், அராஜகத்திற்கும் துணை நின்ற அரசியல்வியாதிகளை எதுவும் செய்யாமல் விட்டுவிடுகிறது. அரசியல் ரவுடித்தனத்தில் விளையும் அனைத்துவித பயங்கரங்களுக்கும் பின்னணியில் மூளையாக இருப்பது அரசியல்வியாதிகள்.

அமைதியான ஆக்சன்....

 

  17 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்