Home  |  அறுசுவை

பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!

பள  பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!


அல்வா செய்யலாங்க - என்ன அல்வாங்க செய்யறது -
ஓ பனங்கருப்பட்டி அல்வா செய்யலாங்க !!

 

சுத்தமான பனங்கருப்பட்டி - கால் கிலோ
வெள்ளை ஜவ்வரிசி - நூறு கிராம்
சுவையான பசு நெய் - இருநூறு மில்லி போதுங்க

 


இவ்ளோ சுலபமா என கேட்காதீங்க - இதோ இப்படி செய்ங்க

ஒரு கனமான நல்ல மண் சட்டியை அடுப்பில் வைத்துச் சூடாக்குங்க.
பனங்கருப்பட்டியைப் சிறிது சிறிதாக பொடித்து தேவையான தண்ணீர் சேர்த்து கெட்டியான பாகு வரும் வரை காய்ச்சுங்க.


பிறகு வெள்ளை ஜவ்வரிசியை வெறும் வாணலியில் வறுத்து தண்ணீர் ஊற்றி நன்றாக குழைய வேகவையிங்க.
பிறகு பனங்கருப்பட்டிப் பாகில் வேகவைத்த வெள்ளை ஜவ்வரிசியைச் சேர்த்து நன்றாக வேகவிடவும்.

சுமார் 5 நிமிடம் கழிந்ததும் சிறிது சிறிதே நெய் விட்டு கிளறவும் கிண்டவும்.
கருப்பட்டி அல்வா நன்றாக நெய்யைக் குடிக்குங்க .


கடைசியா மிதமான சூட்டில் கிண்டுங்க சட்டியில் இருந்து அல்வா சுருண்டு வரும் போது இறக்கியிருங்க.
பனங்கருப்பட்டி அல்வா ரெடிங்க என்னது இவ்ளோ சுலபமா என நீங்க கேட்கறது எங்களுக்கு கேக்குதுங்க !!

  08 Apr 2015
User Comments
09 Apr 2015 05:22:56 mariganesh said :
now you can buy any snacks of your native online at www.nativcrush.com
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!