Home  |  நாட்டு நடப்பு

பள்ளிக்கு வரும்போதும், போகும் போதும் குழுவாக செல்லுங்கள் - மாணவிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை அட்வைஸ் !!

பள்ளிக்கு வரும்போதும், போகும் போதும் குழுவாக செல்லுங்கள் - மாணவிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை அட்வைஸ் !!

தமிழகத்தில் அதிகரித்து வரும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் இருந்து பள்ளி மாணவிகளை பாதுகாக்கும் பொருட்டு, மாணவிகள் கல்வி கூடத்திற்கு வரும் போதும், போகும் போதும் குழுவாக செல்ல வேண்டும் என அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கு தொடக்க கல்வி இயக்குனரகம் கடிதம் அனுப்பி உள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கும் தொடக்கக்கல்வி இயக்குனர் ரெ.இளங்கோவன் அனுப்பி உள்ள கடிதத்தில்,  தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வகை தொடக்கப்பள்ளிகள் மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் படிக்கும் மாணவிகள் பள்ளிக்கு வருகை தரும்போதும் தனித்தனியாக செல்லாமல், மாணவிகள் சிலர் சேர்ந்து குழுவாக பாதுகாப்பாக செல்லவேண்டும்.

இது குறித்து பெற்றோர்களை கூட்டி, தக்க அறிவுரைகள் வழங்கும்படியும் தலைமை ஆசிரியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் அறிவுரைகள் வழங்கப்பட வேண்டும். பள்ளிக்கூட மாணவர்கள் பஸ்களில் பயணம் செய்யும்போது உயிருக்கு பாதுகாப்பற்ற நிலையில் படிக்கட்டுகளில் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும். டெங்கு, சிக்குன் குன்யா போன்ற காய்ச்சல்களில் இருந்து பாதுகாத்துக்கொள்வதற்காக மாணவர்களுக்கு வகுப்பாசிரியர்கள் மூலம் தக்க அறிவுரை வழங்கப்பட வேண்டும். பள்ளிக்கூட வளாகத்தில் மாணவர்களுக்கு எட்டக்கூடிய வகையில் மின்சாதன பொருட்கள் இருக்கக்கூடாது. மின்சார வயர்கள் செல்வதை அனுமதிக்கக்கூடாது.

மாணவ, மாணவிகளுக்கு நல்லொழுக்கத்தையும், நல்ல நெறிமுறைகளையும் பின்பற்ற ஏற்பாடு செய்ய வேண்டும். மாணவ, மாணவிகளுக்கு உடற்பயிற்சி, யோகா கற்றுத்தருவதை உறுதிப்படுத்த வேண்டும். மாணவ, மாணவிகள் பள்ளிக்கு செல்லும்போதும், வீட்டுக்கு செல்லும்போதும் அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் கண்காணிப்பு நடவடிக்கைகளை தலைமை ஆசிரியர் எடுக்க வேண்டும் என தொடக்கக்கல்வி இயக்குனர் இளங்கோவன் அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
 

  23 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பெரும் விபத்தில் இருந்து அதிருஷ்டவசமாக காயமின்றி தப்பினார் சுரேஷ் ரெய்னா
அனிதாவின் தற்கொலையின் பின்னணியில் முக்கிய தமிழ் பெண் பிரபலம்!! வெளியானது இரகசியம்..
மனசெல்லாம் வலிக்குது இந்த வீடியோவைப் பார்க்கும்போது !
தற்கொலையல்ல கொலை: ‘என் கையில் ஒரு பந்து இருக்கிறது, அதை வைத்தே ஆட்சியை கலைப்பேன்’ என்று சொன்ன ஸ்டாலின்
ஓ.பி.எஸ்.சை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி போட்டி?அதிர்ச்சியில் அதிமுக தொண்டர்கள்!
பாலியல் பலாத்கார வழக்கில் தண்டிக்கப்பட்ட சாமியாருடன் கோலி என்ன செய்கிறார் தெரியுமா! வைரலாகும் வீடியோ
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கட்சி பதவி பறிப்பு: டிடிவி தினகரன் அறிவிப்பு
பேரறிவாளனுக்கு திருமணம்
இன்று பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுவாரா ஆளுநர்?
சதிகார ஜடேஜாவை ஹர்திக் பாண்ட்யா என்ன செய்தார் தெரியுமா?