Home  |  திரை உலகம்

நேரம் தவறாமையை நான் ரஜினியிடம் இருந்துதான் கற்றுக்கொண்டேன் : பி.வாசு !!

நேரம் தவறாமையை நான் ரஜினி சாரிடம், இருந்து கற்றுக்கொண்டேன் என பிரபல இயக்குனர் பி.வாசு தெரிவித்துள்ளார்.

 

"நாலு பொண்ணு நாலு பசங்க" திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது, இதில் கலந்து கொண்ட இயக்குனர் பி.வாசு பேசியதாவது, 

 

பெரிய படங்களின் விழாக்களுக்கு, நிறைய பிரபலங்கள் வருவார்கள், ஆனால், சிறிய படங்களின் விழாக்களில் தான் நான் அதிகமாக கலந்து கொள்ளவேண்டும் என நினைப்பேன். அதே போல் சரியான நேரத்திற்கு வர வேண்டும் என நினைப்பேன். இந்த நேரம் தவறாமையை சூப்பர் ஸ்டார் ரஜினியிடம் இருந்து கற்றுக்கொண்டேன். அவர் படபிடிப்பின் போது, சொன்ன நேரத்திற்கு அரை மணி நேரம் முன்பாகவே வந்துவிடுவார். 

 

அவருடன் முதலில் பணக்காரன் என்ற படத்தில் இணைந்து பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது. அந்தப் படத்தின் படப்பிடிப்பில் ஒரு நாள் வேறு நடிகர்களை வைத்து சில காட்சிகள் படமாக்க வேண்டி இருந்தது. அதனால், ரஜினி சார் மேக்கப் அறையில் இருக்கட்டும். இவர்களை எடுத்து விட்டு ரஜினி சாரை அழைக்கலாம் என்று உதவியாளர்களிடம் தெரிவித்தேன். அதற்குள் ரஜினி சார் ஸ்பாட்டில் ஆஜராகி விட்டார். அவரிடம்  உங்களை வைத்துக்கொண்டு, மற்றவர்கள் நடிக்கும் காட்சியை எடுத்தால், தயாரிப்பாளர் என்னை தப்பாக நினைப்பார். அதுவரை நீங்கள் அறையில் இருங்கள் என்று அவரிடம் கூறினேன். அதற்கு அவர் சொன்னார்,  ரஜினி நடிக்க வராமல் அறையில் இருக்கிறாரே என்று தயாரிப்பாளர் என்னை தப்பா நினைக்க மாட்டாரா?   என்று திருப்பி கேட்டார். அதனால் சொன்ன நேரத்துக்கு முன்பே மேக்கப்புடன் வந்து ஸ்பாட்டில் இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினி என இயக்குனர் பி.வாசு தெரிவித்தார். 

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்