Home  |  அறுசுவை

ஓய்ஸ்டெர் சாஸ் சிக்கன்(Oyster Sauce Chicken)

ஓய்ஸ்டெர் சாஸ் சிக்கன்(Oyster Sauce Chicken)

தேவையானவை :

 

கோழி- 1/2 கிலோ (சிறிய துண்டாக்கியது)

இஞ்சி பூண்டு விழுது-2 டேபிள் ஸ்பூன்

சோளமாவு  -2 டேபிள் ஸ்பூன்

சோயாசாஸ் - 2 டீஸ்பூன்

மிளகு தூள்- 1 டீஸ்பூன்

ஓய்ஸ்டெர் சாஸ்  - 1 டேபிள் ஸ்பூன்

எண்ணெய்- தேவைகேற்ப

 

கிரேவி செய்ய தேவையானவை : 

 

குடை மிளகாய்-1

பச்சை மிளகாய்-4 (இரண்டாக கீறியது)

பூண்டு- 4 பல்

சின்ன வெங்காயம் - 4

ஆய்ஸ்டெர் சாஸ் - 2 டீஸ்பூன்

சோளமாவு - 1டீஸ்பூன்

வெங்காய தாள் - 3 (ஒரு இன்ச் துண்டுகளாக நறுக்கியது)

 

செய்முறை:

 

1.ஒரு பாத்திரத்தில் கோழியுடன் இஞ்சி பூண்டு விழுது,சோள மாவு,சோயாசாஸ்,ஆய்ஸ்டெர் சாஸ்,மிளகு தூள் கலந்து இருபது நிமிடம் ஊறவைக்கவும்.சூடான எண்ணெயில் கோழிதுண்டுகளை மிதமான தீயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

2.கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பொடியாக நறுக்கிய பூண்டு,வெங்காயம் போட்டு வதக்கி,பச்சை மிளகாய்,சதுரங்களாக வெட்டிய குடை மிளகாய் சேர்த்து வதக்கவும்.பிறகு ஓய்ஸ்டெர் சாஸ் சேர்த்து வதக்கவும்.பொரித்த கோழி துண்டுகளை சேர்த்து கிளறி வெங்காய தாள் சேர்த்து கிளறவும்.சோள மாவில் கால் கப் தண்ணீர் கலந்து இதனோடு சேர்த்து கிளறவும்.ஒரு நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்.

Oyster Sauce Chicken

Ingredients for Oyster Sauce Chicken :


Chicken - 1/2 kg (Chopped),

Ginger Garlic paste - 2 Tbsp,

Corn Flour - 2 Tbsp,

Soya Sauce - 2 Tsp,

Pepper Powder - 1 Tsp,

Oil - as needed.


Ingredients for Gravy :


Capsicum - 1,

Green Chilies - 4(Sliced),

Garlic - 4 Cloves,

Small Onion - 4,

Oyster Sauce - 2 Spoons,

Corn Flour - 1 tsp,

Onion Stalk - 3 (Chopped).


Method to make Oyster Sauce Chicken :


1. In a vessel mix up the chopped and washed chicken pieces, ginger, garlic paste, corn flour, soya sauce, oyster sauce, pepper powder. Mix up well. And soak it for 20 minutes. Heat some oil in a frying pan then put the soaked chicken pieces and fry them well. Fry it till it gets golden color. 

2. Heat oil in a frying pan then add finely chopped garlic, onions and fry it then add green chilies, squarely chopped capsicums and allow it to fry well. Then add oyster sauce along with them. Then add fried chicken pieces and largely chopped onion stalks. Then add water with corn flour and stir it well. Then add this maida mixture along with boiling masala ingredients. Allow it to boil for 1 minutes. Turn off the stove.


Oyster Sauce Chicken is ready to serve.

  08 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!