Home  |  திரை உலகம்

ஒரு ஊர்ல ரெண்டு ராஜா திரைவிமர்சனம்

இயக்கம் : ஆர்.கண்ணன் 


நடிகர்கள் : விமல், சூரி, 


நடிகை : ப்ரியா ஆனந்த்


இசை : டி.இமான் 


தூத்துக்குடியில் உள்ள ஒரு ஊரில் வேலை வெட்டி ஏதும் இல்லாமல் ஊரை சுற்றித் திரியும் நண்பர்களாக வருகிறார்கள். விமலும், சூரியும். 


இவர்கள் ஊரில் உள்ள டாஸ்மாக் கடைகள் இவர்களால் மூடு விழா காண்கிறது. இதனால் அந்த ஊர் பெண்கள் மத்தியில் ஹீரோவாக ஜொலிக்கிறார்கள் இந்த இருவரும். அதில் ஒரு பெண் சூரி மீது காதல் கொள்கிறாள். சூரியும் அந்த பெண்ணை காதலிக்க ஆரம்பிக்கிறார்.


இவர்களின் காதல் ஆரம்பித்த முதல் நாளே ஊரை விட்டு சென்னைக்கு ஓடிச்செல்ல முடிவெடுக்கிறார்கள். இதற்கு சூரியின் உயிர் தோழனான விமல் உதவி செய்கிறார் இல்லஇல்ல உபத்திரம் செய்கிறார்.

 

அப்போது, தூத்துக்குடி ரயில்வே ஸ்டேசனில் வைத்து, சூரி ஒரு வேலையில்லா வெட்டி பையன் என்பதை அந்த பெண்ணிடம் விமல் கூறிவிடுகிறார். 


அப்புறம் என்ன சூரியின் காதல் சூரிக்கு டாட்டா காட்டுகிறார்.  


எங்கே செல்வது என்று தெரியாமல் ரயிலில் ஏறி செல்கிறார்கள் விமலும், சூரியும். இவர்கள் எதர்ச்சியாக ப்ரியா ஆனந்தை சந்திக்கின்றனர். திடீரென ரயிலில் ஒரு பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்ப்பட அவருக்கு பிரசவம் பார்க்கிறார் மருத்துவராக இருக்கும் ப்ரியா ஆனந்த். 


இதைப்பார்த்து ப்ரியா ஆனந்த் மீது காதல் வசப்படுகிறார் நம்ம விமல் அப்புறம் என்ன அவருக்கு பின்னாடியே சுத்துராரு, ரெயில் சென்று கொண்டிருக்கும் போது பிரியா ஆனந்தை ஒரு மர்ம கும்பல் கொலை செய்ய பார்க்கிறது. 


அவர்களிடம் இருந்து விமலும் சூரியும் பிரியா ஆனந்தை காப்பாற்றுகிறார்கள். அதன் பிறகு இவர்கள் யார்? எதற்காக உங்களை கொல்ல வருகிறார்கள்? என்று பிரியா ஆனந்திடம் கேட்கிறார்கள் விமலும் சூரியும்.

 

அதற்கு பிரியா ஆனந்த், தான் தூத்துக்குடியில் மருத்துவ முகாமிற்கு சென்றிருந்தபோது, தன் தோழி விசாகா சிங் வேலை செய்யும் நாசருக்கு சொந்தமான எஸ்.வி.ஸ்டீல்ஸ் தொழிற்சாலையில் உள்ள தொழிலாளர்கள் பல நோய்களுக்கு ஆளாகப்பட்டுள்ளதாகவும், அந்த கம்பெனியில் பழைய மிஷின்களை பயன்படுத்துவதால் ஏற்படும் இரைச்சலில் அங்கு வேலை செய்பவர்களுக்கு காது கேட்காமல் போவதும், குரோமியம் என்ற திரவத்தை நேரடியாக கைகளில் பயன்படுத்துவதால் கேன்சர் நோய்களும் ஏற்படுகிறது.

 

இதற்கு தொழிற்சாலையை சரியாக பராமரிக்காததால் தான், தொழிலாளர்களை நோய் தாக்கியதாக அதன் முதலாளியான நாசரிடம் கூறினேன். அதற்கு அவர் என்னை அவமானப்படுத்திவிட்டார். இதனால் கோர்ட்டுக்கு சென்றேன். தீர்ப்பு நெருங்குவதால் என்னை கொலை செய்ய முயற்சி செய்கிறார்கள் என்று கூறுகிறார் பிரியா ஆனந்த்.

 

இதை கேட்ட விமலும் சூரியும் நாங்கள் உங்களுக்கு துணையாக இருக்கிறோம் என்று கூறுகிறார்கள். 


இறுதியில் பிரியா ஆனந்த் தான் தொடர்ந்த வழக்கில் வெற்றி பெற்றாரா? நாசர் கைது செய்யப்பட்டாரா? விமல் தன் காதலை பிரியா ஆனந்திடம் சொன்னாரா? என்பது தான் படத்தின் மீதி கதை.  


படத்தில் ஹீரோவுக்கான கதாபாத்திரம் யாருக்கென்றால் அது பிரியா ஆனந்துக்கு தான். அந்த அளவுக்கு அவரது கதாபாத்திரம் செதுக்கப்பட்டுள்ளது. தனது கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார் பிரியா ஆனந். 


வேலை இல்லாமல் வெட்டியாக சுற்றும் கதாபாத்திரத்தில் விமலும், சூரியும் கச்சிதமாக பொருந்துகிறார்கள். ஆனால் விமலை விட சூரிக்கே படத்தில் முக்கியத்துவம் அதிகம். 

 

தம்பி ராமையா, சிங்க முத்து என்று காமெடி ஒன்றும் பெரிதாக எடுபடவில்லை.  


தொழிலதிபராக வரும் நாசர் தனது மாறுபட்ட நடிப்பை வெளிபடுத்தியிருக்கிறார். டி.இமான் இசையில் பாடல்கள் ஹிட் ஆகவில்லை என்றாலும் பரவாயில்லை...  


மொத்தத்தில் ஒரு ஊர்ல ரெண்டு... ஏதோ மிஸ்ஸிங்..... 

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்